இடுகைகள்

பிழை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேரடி சாட்சியத்தில் ஏற்படும் பிழைகளை கண்டறிந்த உளவியலாளர்!

படம்
  ஒரு மோசமான விபத்து நடைபெற்றிருக்கும். அதை பல்லாண்டுகளுக்கு பிறகும் சம்பவ இடத்தில் இருப்பவர் நினைவுகூரலாம்.அதற்கு என்ன காரணமாக இருக்கும்? அந்த விபத்தில் அவருக்கு சம்பந்தமான யாரோ ஒருவர் மாட்டிக்கொண்டு இறந்திருப்பார். அல்லது நினைத்துப் பார்க்க முடியாத அதி்ர்ச்சியை விபத்து சம்பவம் உருவாக்கியிருக்கும். காலப்போக்கில், இதை ஒருவர்  எத்தனை முறை மீள கூறினாலும் அதில் தகவல்கள் மாறிப்போயிருக்க வாய்ப்பகள் உள்ளது. குறிப்பாக எதனால் தூண்டப்பட்டு விபத்து சம்பவத்தை ஒருவர் நினைவுகூருகிறார் என்பது முக்கியம்.  கார்கள் இரண்டு சாலையில் எதிரெதிரே வருகின்றன. திடீரென மோதிக்கொள்கின்றன. இதைப் பார்த்தவர்களிடம் கார்களின் வேகம், உடைந்த பொருட்கள், அங்கு சுற்றியிருந்த பொருட்கள் பற்றி கேள்வி கேட்டால் பலரும் பலவிதமாக பதில்களை கூறுவார்கள். இதிலுள்ள உண்மையைக் கண்டுபிடிப்பது கடினம். இதைத்தான் உளவியலாளர் ஆய்வு செய்து கண்டுபிடித்து கூறினார். இதற்கான அவசியம் என்ன வந்தது? நீதியைக் காப்பாற்றத்தான்.  அப்போது நீதிமன்றங்களில் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தவர்களுக்கு எதிரான வழக்குகள் அதிகம் வந்தன. இதில் நேரடி சாட்சிகள் முக்கியப்

செய்தியில் தகவல்களை சரிபார்ப்பது முக்கியம்

படம்
  பொதுவாக   நிறைய பிரபலங்கள் / அரசியல்வாதிகள் பேட்டி எடுக்கும் வரை அமைதியாக இருப்பார்கள்.   பிறகு, பத்திரிகையாளரை அழைத்து செய்தியை எழுதிய உடனே அல்லது அதை வெளியிடும் முன்னர் இறுதி வடிவத்தை ஒருமுறை அவர்களுக்கு அனுப்பித் தரும்படி கேட்பார்கள். பேசிய வார்த்தை, அர்த்தம் மாறியிருக்கிறதா என்று சரி பார்க்கத்தான் இந்த சோதனை. இந்த முறை இப்போது ஊடகங்களில் பழக்கமாகிவிட்டது. பத்திரிக்கைகள் செய்தி ஆதார மனிதர்களிடம் அச்சேறாத செய்தியை அனுப்பி, அவர்களின் திருத்தங்களைக் கேட்டு பிறகு அதைச் செய்து அச்சுக்கு அனுப்புகிறார்கள். அனைத்து கட்டுரைகளுக்கும், இதுபோல திருத்தங்கள் செய்து கட்டுரைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவது சரியானதல்ல. முடிந்தவரை பத்திரிகையாளர்கள் இம்முறையைத் தவிர்க்கவேண்டும். தவறுகள் ஏற்படாமல் இருக்க, பேசும்போது முறையாக அதை ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டு அதை ஒருமுறைக்கு இருமுறை கேட்டுவிட்டு கட்டுரையை எழுதலாம்.இப்படி எழுதப் பழகினால் கட்டுரைகளில் திருத்தங்கள் குறையும். நாளடைவில்   தகவல் பிழைகள் இருக்காது.   செய்திகளை, பேட்டி எடுப்பவர்களிடம் காட்டிவிட்டு பிரசுரிப்பது என்றால் அதை செம்மை

வாழும் அலாரமாக மாறிய கதையை கேட்க ஆசையா? கடிதங்கள்

  வாழும் அலாரமாக மாறினேன்! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? உங்களது நாளிதழ் பணிகள் இப்போது எளிமையாகி இருக்கும் என நம்புகிறேன் . எங்கள் பத்திரிகையிலும் வேலைகள் எப்போதும்போல வேகம் பிடித்து நடந்து வருகின்றன . தினசரி நானும் அலுவலக சகாவுமான பாலபாரதி சாரும் ரயில்வே ஸ்டேஷன் வரை நடந்து வருவோம் . அவர் ரயில் ஏறி மடிப்பாக்கம் வரை செல்கிறார் . குங்குமத்தில் வேலை செய்தபோது பொறுப்பாசிரியராக இருந்தவர் என்னை அதிகாலை எழுந்து அவருக்கு போன் செய்யச் சொல்லி வற்புறுத்தியதை சொன்னேன் . உடனே பாரதி சார் , இது சாதிக்கொடுமை தானே என்று சொல்லி டிவியில் வேலை செய்தபோது அவர் பார்த்த விஷயங்களை பேசத் தொடங்கிவிட்டார் . இந்த விஷயத்தை உங்களிடமும் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன் . அப்போது இருந்த சூழலில் இதுபோல பொறுப்பாசிரியர் பேசுவார் என்று நினைக்கவில்லை . பாரதி சார் சொன்னது உண்மையாகவும் இருக்கலாம் . நான் அந்த சமயத்தில் அந்த கோரிக்கை வினோதமாக இருந்ததை ஒப்புக்கொள்கிறேன் . ஆனால் அதன் பின்னணி இப்படி இருக்கும் என நினைக்கவில்லை . நான் அவர் அப்படி கூறியதும் , என்னடா சீனியர் இப்படி சொன்னார் எ

மன்னித்துவிடுங்கள்

மதிப்பிற்குரிய தமிழ் இ – புக்ஸ் தள தோழர்களுக்கு,      பள்ளிக்கு வெளியே வானம் எனும் மொழிபெயர்ப்பு என் ஒரு மாத கடின உ.ழைப்பின் பயனாக உருவானது. மொழிபெயர்க்கும்போதே இந்நூலை எவ்வளவு விரைவாக வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிட வேண்டுமென்று நினைத்தேன். நூலின் மையம் பள்ளிக்கல்வி பற்றிய கடும் விமர்சனங்களடங்கியது. கல்விமுறை பற்றிய ஆதங்கம் கொண்டிருக்கும் அனைவரும், ஏன் கற்கின்ற மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு வெளியே வானம் நூல் வசீகரிக்கும் என்று உளமார நம்பினேன். காப்புரிமை இயல்வாகை பதிப்பகம் பெற்றுள்ளது உண்மை. ஆனால் நிதி நெருக்கடியால் புத்தக உருவாக்கம் தள்ளிச்சென்ற நிலைமையில் நான் அனைவரையும் சென்று சேரும் வழியான இணையத்தை ஆராய்ந்தபோது, தங்களுடைய இணையதளம் வரம் போல் கிடைத்தது. வெளியிட மட்டும்தான் நான் நினைத்தேன். காத்திருந்து அச்சிட்டு அதைக்கொண்டு பெரும் பணம் சம்பாதிக்க என்னுடைய பைத்தியக்காரத்தன இதயத்திற்கு தெரியவில்லை. கடும் உழைப்பில் விளைந்த பலவற்றை நமக்காக பல உன்னத மனிதர்கள் விட்டுச்சென்றிருக்கிறார்கள். நான் என் உழைப்பை, அறிவை  மக்களுக்காக செலவழிக்க முயற்சித்தேன் என்று கூறுவது மிக அதிகம