இடுகைகள்

மாருதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடமையில தவறாத தங்கமான பையன், காதலியின் தலைமறைவான அப்பாவுக்கு உதவுவாரா? - பாபு பங்காரம்

படம்
 பாபு பங்காரம் இயக்கம் மாருதி வருவாய்த்துறை அதிகாரி சாஸ்திரி தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது சக அதிகாரியை கொன்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. இதைபற்றி விசாரிக்க கிருஷ்ணா எனும் மனிதநேயமும் கருணையும் கொண்ட உதவி கமிஷனர் வருகிறார். ஆதரவற்ற சாஸ்திரி குடும்பத்திற்கு தனது அடையாளம் கூறாமல் உதவுகிறார். அந்த குடும்பத்தில் மூத்த பெண் ஷைலஜா மீதுகாதல் கூட கொள்கிறார். இந்த குடும்பத்து பெண்களை மல்லேஸ்வரன் என்ற ரவுடி, சாஸ்திரி எங்கே என கேட்டு மிரட்டுகிறார். இந்த நிலையில் கிருஷ்ணா யார் குற்றவாளி என கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் இறுதிப்பகுதி.  கர்ப்பிணிப்பெண், குழந்தையை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற தனக்கு சிகிச்சை வேண்டாம் என்று சொல்லி இறந்துபோன ஜமீன்தாரின் பேரன், கிருஷ்ணா. ரவுடிகளை அடித்து உதைத்தாலும் அவர்களை சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்த்து பிறகு லாக்கப்பில் தள்ளும் கருணை மனமுடையவன். இந்த குணம் தாத்தாவிடம் இருந்து வந்தது. இந்த குணங்களை அவன் கடமைக்காக சற்று தள்ளிவைத்து ரவுடி மல்லேஸ்வரன் ஆட்களை அடித்து உதைக்க வேண்டியதிருக்கிறது. முதலில் அதற்கு சற்று தயங்குகிறார்.  இனி கருணை க

பயந்தால் வாழ்க்கை நம் கையில் இல்லை - மஞ்சு ரோஜூலொச்சாய் - மாருதி

படம்
  மஞ்சு ரோஜூலொச்சாய் மஞ்சு ரோஜூலொச்சாய் இயக்கம் மாருதி இசை அனுப் ரூபன்ஸ் பயம் என்பது ஒருவரின் வாழ்க்கையை அழிப்பதோடு மற்றவர்களின் வாழ்க்கையையும் எப்படி சீர் குலைக்கிறது என்பது சொல்லும் படம். பயம் என்பது மகிழ்ச்சியாக வாழ்பவர்களின் வாழ்க்கையை குலைக்கும் என்பதை கொரோனா காலத்தோடு இணைத்து கதை சொல்லியிருக்கிறார் மாருதி. ஆனால் படத்தில் எதுவும் உயிரோட்டமாக இல்லை. சந்தோஷ் சோபன் ம ட்டுமே கதை எதுவாக இருந்தாலும் நடிப்பேன் என தைரியமாக நடித்திருக்கிறார். அவரும் அவருடைய நண்பர்களின் நடிப்பும் பரவாயில்லை. படம் முரண்களைக் கொண்டு இயங்கும்போது சுவாரசியமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில்   சுயமாக யோசிக்கத் தெரியாத கோபாலம் என்பவரின் பயம் அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது. அவரின் உயிருக்கே ஆபத்தாவது எப்படி என சொல்லியிருக்கிறார்கள்.   இந்த படத்தின் நாயகன் வேறு யாருமில்லை, அஜய் கோஷ் என்ற நடிகர்தான்.   படத்தில் புதுமை ஏதுமில்லை என்றாலும் கூட அஜய் கோஷின் நடிப்பு பார்க்கும்படி இருக்கிறது. படத்தின் நாயகன் என்பது சந்தோஷ் சோபன் என்றாலும் கூட படத்தின் பாடல் காட்சிகள் தவிர அனைத்து காட்சிகளிலும் அஜய் கோஷ் ந

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிஜமான நடுத்தர வர்க்க கனவு! - இந்தியா 75

படம்
  இந்தியாவில் தொண்ணூறுகளில்தான் தாராளமயமாக்கல் தொடங்கியது என்று கூறுகிறார்கள். உண்மையில் இதற்கான முன்னேற்பாடுகள் 1980களிலேயே தொடங்கிவிட்டன. இதனை தொடங்கியவர் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்தி. இவர் நடுத்தர வர்க்க மக்கள் வாங்கும்படியான காரை தயாரிக்க விரும்பினார். இப்படித்தான் மாருதி உத்யோக் நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று இந்த நிறுவனம் மாருதி சுசுகியாக மாறிவிட்டது.  சஞ்சய் காந்தியின் கனவு இன்று நிஜமானாலும் கூட அதைப் பார்க்கும்வரை அவர் உயிரோடு இல்லை. 1980ஆம் ஆண்டு விமான விபத்தில் சஞ்சய் காந்தி இறந்துவிட்டார். இந்திய அரசு ஜப்பானைச் சேர்ந்த சுசுகி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து மாருதி காரைத் தயாரித்தது.  ஹர்பால்சிங் தனது காருடன்.. கார் எளிமையாக இருக்கவேண்டும். விலையும் பாக்கெட்டை ஓட்டையாக்காமல் இருந்தால் நல்லது என்ற விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்கினார்கள். டெல்லியில் அதன் விலை 52, 500ஆக இருந்தது. 1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய முன்பதிவு விறுவிறுவென பிரமாதமாக இருந்தது. 1.35 லட்சம் பேர் மாருதியை வாங்க ஆர்வமாக இருந்தனர். தயாரிக்கப்பட்ட கார்கள் அதே ஆண்டில் டிசம்ப