பயந்தால் வாழ்க்கை நம் கையில் இல்லை - மஞ்சு ரோஜூலொச்சாய் - மாருதி
மஞ்சு ரோஜூலொச்சாய் |
மஞ்சு ரோஜூலொச்சாய்
இயக்கம்
மாருதி
இசை அனுப்
ரூபன்ஸ்
பயம் என்பது
ஒருவரின் வாழ்க்கையை அழிப்பதோடு மற்றவர்களின் வாழ்க்கையையும் எப்படி சீர் குலைக்கிறது
என்பது சொல்லும் படம்.
பயம் என்பது
மகிழ்ச்சியாக வாழ்பவர்களின் வாழ்க்கையை குலைக்கும் என்பதை கொரோனா காலத்தோடு இணைத்து
கதை சொல்லியிருக்கிறார் மாருதி. ஆனால் படத்தில் எதுவும் உயிரோட்டமாக இல்லை. சந்தோஷ்
சோபன் ம ட்டுமே கதை எதுவாக இருந்தாலும் நடிப்பேன் என தைரியமாக நடித்திருக்கிறார். அவரும்
அவருடைய நண்பர்களின் நடிப்பும் பரவாயில்லை.
படம் முரண்களைக்
கொண்டு இயங்கும்போது சுவாரசியமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் சுயமாக யோசிக்கத் தெரியாத கோபாலம் என்பவரின் பயம்
அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது. அவரின் உயிருக்கே ஆபத்தாவது எப்படி என சொல்லியிருக்கிறார்கள். இந்த படத்தின் நாயகன் வேறு யாருமில்லை, அஜய் கோஷ்
என்ற நடிகர்தான்.
படத்தில் புதுமை ஏதுமில்லை என்றாலும் கூட அஜய் கோஷின்
நடிப்பு பார்க்கும்படி இருக்கிறது. படத்தின் நாயகன் என்பது சந்தோஷ் சோபன் என்றாலும்
கூட படத்தின் பாடல் காட்சிகள் தவிர அனைத்து காட்சிகளிலும் அஜய் கோஷ் நீக்கமற இருக்கிறார்.
படத்தின்
இறுதியில் அந்தக்காலம் போல மெசேஜ் வேறு சொல்கிறார்கள். அதெல்லாம் முடிந்துவிட்ட ஒன்று
நினைக்கும்போது எதற்கு செய்தி… காட்சிகளாகவே தெரிந்துவிட்டதே…
மெகாசீரியல் போன்ற படம். இதற்கும் தன்னால் முடிந்தளவுக்கு
இசையைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் அனுப் ரூபன்ஸ். கதை, திரைக்கதை என அனைத்தும்
படுத்து விட்டபிறகு இசையை வைத்து என்ன செய்வது?
அப்பா, மகள்
பாசம் என ஒரு காரணம் சொல்லி அதனால்தான் மகளுக்கு திருமணம் செய்துவைக்க தவுதாயப்படுகிறார்
என இயக்குநர் கூறுகிறார். ஆனால் சிறுவயது முதலே மகளைப் பாதுகாக்கவேண்டுமென கோபாலம்
படும் பாடுகளைப் பார்த்தால் அவருக்கு ஏதோ மனநோய் இருப்பது போலவே படுகிறது. மகளை நேசித்தால்,
அவள் வளர்ந்துவிட்டாள் என நம்பினால் அவள் எடுக்கும் முடிவை நம்பலாமே?
அஜய்கோஷ்
தவிர்த்து பிற நடிகர்களுக்கு நடிக்கும் வாய்ப்பு
கிடையாது. அதுவும் சப்தகிரியை ஆம்புலன்ஸ் நர்சாக வரவைத்து வீணடித்திருக்கிறார்கள்.
வெண்ணிலா கிஷோர் சற்று ஆறுதலளிக்கும்படி நடித்திருக்கிறார்.
நல்லநேரம்
நமக்கு வரவில்லை.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக