சைக்கோபாத்களிடம் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

 


அசுரகுலம் 5

சைக்கோபாத்களிடம் எப்படி பத்திரமாக பாதுகாப்பாக இருப்பது பற்றிய வழிமுறைகளைப் பார்த்து வருகிறோம். மேலும் என்னென்ன விஷயங்கள் இருக்கிறதென காணலாம்.

ராபர்ட் ஹரே எழுதி கட்டுரைகள் நாளிதழ்களில் வெளிவரத் தொடங்கியபோது, அவருக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள் வரத் தொடங்கின. அவையெல்லாமே எனது கணவர், காதலர் சைக்கோபாத் அறிகுறிகளைக் கொண்டவராக இருக்கிறார் என்றுதான் இருந்தன. இதில் அவருக்கு போன் செய்த பெண்மணியின் கதை வித்தியாசமானது. அந்த பெண்மணி தன் கணவர் சைக்கோபதி அறிகுறிகளைக் கொண்டவராக இருக்கிறார். ஆனால் அவரை முறையாக மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வது ஆகியவற்றை மனைவி செய்திருக்கிறார். ஆனால் சைக்கோபாத் கணவர், தனது வசீகரமான பேச்சால் நடத்தையால் ஆழ்மனதில் உள்ளதை மறைத்துக்கொண்டு பேசியிருக்கிறார். இதனால் அவரைச் சந்தித்த மருத்துவர்கள் அவர் நார்மல் என அறிக்கை கொடுத்திருக்கின்றனர். இப்படி அறிக்கைகள் கிடைக்க மனைவி, தான் கணவரைப் பற்றி நினைப்பதுதான் தவறு. தனக்குத்தான் பிரச்னை என நினைக்கத் தொடங்கியிருக்கிறார்.  

சைக்கோபதி பற்றித் தெரிந்தவர்களிடம் சிகிச்சைக்கு சென்றால் பயன் இருக்கும். இல்லாதபோது நினைத்த விளைவுகள் கிடைக்காது. மருத்துவர்கள் நோயாளியை சரியாக புரிந்துகொள்ள மாட்டார்கள்.

சைக்கோபதிக்கு பெற்றோர், நண்பர்கள், மனைவி என யாரும் காரணம் கிடையாது. எனவே, ஒருவர் சைக்கோபாத்தாக இருந்தால் அதற்காக அவரைச் சுற்றியுள்ளவர்கள் வருத்தம் கொள்ளவேண்டியதில்லை. அவருக்கு வன்முறை செயல்பாடுகளை குறைக்க பாதிப்புகளை குறைக்க மருத்துவ சிகிச்சை செய்வதே முக்கியம்.

ஏமாற்றப்படுவதில் சங்கடப்படலாம். ஆனால் அதை மறைப்பதால் பயன் ஒன்றுமில்லை. சைக்கோபாத் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால், பண இழப்பு ஏற்பட்டால் உடனே காவல் நிலையத்தில் புகார் செய்வது முக்கியம். அப்படி செய்யும்போதுதான் உங்களை ஏமாற்றிய சைக்கோபாத் எத்தனை நபர்களை ஏமாற்றியிருக்கிறார் என்பதே தெரிய வரும். இதில் உங்களின் ஏமாற்றத்தை மறைத்து வைக்கவேண்டியதில்லை.

சைக்கோபாத்களை பொறுத்தவரை வெற்றி என்பது எடுத்த காரியத்தில் முக்கியம். அதில் அவர்கள் எந்த சமரசமும் செய்துகொள்வதில்லை. எனவே, அவர்களோடு போட்டியிடும்போது குறைந்த இழப்புகள் வருமாறு அவர் வெற்றி பெற்றதாக எண்ணச் செய்தால் மட்டுமே நீண்டகால நோக்கில் நாம் வெல்ல முடியும். இந்த முடிவை ஒருவர் எப்போது எடுப்பது? தம்பதிகள் பிரிந்து வாழும் சூழலில் சட்டப்படி குழந்தைகளை தங்களோடு வைத்து வளர்க்கும் சூழலில் மேற்சொன்னபடி முடிவுகளை எடுக்கும்படி இருக்கும்.

சைக்கோபாத் கணவர் அல்லது மனைவி, மகன், மகள் என இருந்தாலும் கூட இவர்கள் மீது மாறிவிட்டார்கள், திருந்திவிட்டார்கள் என நினைக்க முடியாது. கல்லில் எழுதிய சித்திரம் போலத்தான் சைக்கோபாத்களின் குணம் இருக்கும். எனவே, ஏமாற்றம் தவிர்த்து கவனமாக இருங்கள்.

முடிந்தளவு பண இழப்பைத் தடுக்க முயலுங்கள். எனவே, சைக்கோபாத்களை முறையாக, சட்டரீதியாக பிரிந்திருப்பது நல்லது. இதனால் சமூக, பொருளாதார இழப்புகளை தடுப்பதோடு மன உளைச்சலும் குறைவாக இருக்கும்.

சைக்கோபாத்களின் வன்முறை, தாக்குதல்களிலிருந்து உயிர் பிழைத்தவர்களை பாதுகாக்க, சிகிச்சை வழங்க பல்வேறு அமைப்புகள் உள்ளன. இவற்றில் சேர்ந்து மனம், உடலை சற்று சரி செய்துகொள்ள முடியும்.

நன்றி –

உளவியலாளர் ராபர்ட் ஹரே

தி டிஸ்டர்பிங் வேர்ல்ட் ஆப் தி சைக்கோபாத்ஸ் அமாங் அஸ் நூல்….

 

படங்கள் - ஃபைன் ஆர்ட் அமெரிக்கா, பின்டிரெஸ்ட் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை