உண்மையான காதலை அறிந்துகொள்ளாத காசனோவா சமையல் கலைஞர்! - தீன்மார் - பவன் கல்யாண், திரிஷா

 














தீன்மார் 2011

பவன் கல்யாண், த்ரிஷா

இயக்கம் - ஜெயந்த் சி பானர்ஜி

Based on love aaj kal - hindi movie - Imtias ali


வெளிநாட்டில் சமையல்காரராக இருக்கும் மைக்கேல் வேலாயுதம், பெண்களுடன் ஜாலியாக பழகி வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய மனதில் உண்மையாக காதல் உருவாகும்போது அதை அவர் வெளிப்படுத்த முயன்றாரா, அதில் வென்றாரா என்பதுதான் கதை.

படத்தில் இரண்டு பவன் கல்யாண்கள் உண்டு. ஒருவர் பீரியட் கதையில் வருகிறார். இன்னொருவர் நவீன கால காசனோவாவாக சுற்றி வருகிறார். இதில் நவீன கால நாயகனான மைக்கேல் வேலாயுதம் பாத்திரத்திற்கு அதிக காட்சிகள் உள்ளன.

பீரியட் கதையில் வரும் பவனுக்கு ஜோடியாக வசுமதி (கீர்த்தி கர்பண்டா)  வருகிறார். இந்த கதையில் ஒருவருக்கொருவர் மனதை பேசாமலேயே புரிந்துகொள்கிறார்கள். வசுமதியை பவன் கரம்பிடித்தாரா இல்லையா அதற்கு வந்த சவால்கள் என்ன என்பதை நடப்பு கதையினூடே சொல்கிறார்கள்.

படத்தின் காதலை சொல்வதில் இயக்குநரை விட இசையமைப்பாளர் மணி சர்மாவே முந்துகிறார். படத்தில் காமெடிக்கு வேறு நடிகர்கள் கிடையாது. அதையும் பவனே செய்கிறார். அதாவது மைக்கேல் வேலாயுதம் பாத்திரத்திலிருந்து… பீரியட் பாத்திரத்தில் வரும் பவன் சற்று சீரியசானவர்.

பீரியட் கால பவனின் கதையை பரேஷ் ராவல் சொல்கிறார். இவருடைய நண்பர்தான் பவன். அந்த காதல் எப்படி உயர்வாக இருந்தது  என மைக்கேலிடம் சொல்லுகிறார். இவர் பீரியட் காதலை விவரிக்க விவரிக்க அதே போலான சூழ்நிலைகள் மைக்கேலுக்கும் ஏற்படுகிறது.

தனக்கு பிடித்த செக்ஸ் தாண்டிய மனதை அடிப்படையாக கொண்ட காதலை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே இறுதிக்காட்சி.

த்ரிஷாதான் நாயகி. முடிந்தளவு காதலை தனது நடிப்பில் காட்ட முயல்கிறார். சுதீருடன் திருமணம் நடைபெறுவதற்கு முந்தைய இரவில் அவருடன் மைக்கேல் பேசும் உரையாடல் காட்சி சிறப்பாக உள்ளது. அடுத்து இறுதிப்பகுதியில் அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரியிடம் வேலை ஏன் வேண்டாம் என பேசிவிட்டு வெளியே வரும் காட்சி…. மனதில் நிற்கும் பவர் ஸ்டாரின் பக்காவான காட்சி…

காதல் படமென்பதால் இதில் நேரடியான எதிரிகள் அவர்களை வெல்வது என கதை செல்லவில்லை. இதில் மைக்கேல்தான் அவருக்கு எதிரி. அதாவது அவரது மனம். பெண்களை சந்திக்கிறோம், உடலுறுவு வைத்துக்கொள்கிறோம் அப்புறம் அடுத்த பெண் என நகரும் மனிதர்அ வர். ஆனால் ஒரு பெண்ணிடம் உடலுறவு கொள்ளாதபோதும் அவளோடு எப்போதும் இருந்தால் நன்றாக இருக்குமே என தோன்றுகிறது. அதுதான் படத்தின் மையம்.

தெலுங்கு திரைக்கதையை பவன் கல்யாணின் நண்பரும் இயக்குநருமான திரிவிக்ரம் எழுதியுள்ளார். பவனை ரசித்துப் பார்க்கும் பி, சி, சென்டர் ஆட்களுக்கு சற்று கஷ்டமாகத்தான் இருக்கும். இது ஏ சென்டர் ஆட்களுக்கான காதல் படம். 

காலத்தை தாண்டியது காதல்.


கோமாளிமேடை லோகோ

கருத்துகள்