ஒருவர் குற்றங்களைச் செய்ய தயங்குகிறார் - அதற்கு என்ன காரணம்?

 











ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரது முன்னே உள்ள மேசையில் நிறைய ஆயுதங்கள் உள்ளன. கத்தி, ஆணி, சுத்தி, கோடாரி, சாட்டை, கயிறு என நிறைய பொருட்கள். அனைத்துமே ஒருவரை தாக்குவதற்கும் சித்திரவதை செய்வதற்குமானது. நாற்காலியில் அமர்ந்திருப்பவர், தன் எதிரே இருப்பவரிடம் சொல்லுகிறார்.

 மேசையில் உள்ள எந்த பொருட்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். என் மீது பயன்படுத்து என்கிறார். இப்படி சொல்லப்படும்போது எதிராளி என்ன செய்வார்? தான் செய்வதை பிறர் பார்த்தால் கவனித்தால் நிச்சயம் நாற்காலி மனிதரை தாக்க மாட்டார். ஆனால் யாரும் கவனிக்கவில்லை என்றபோது நிச்சயம் ஆயுதங்களை பயன்படுத்த மனம் அரும்பாடு படும். அதை தடுத்து நிறுத்தும்போதுதான் நம் மனது பற்றிய தெளிவு கிடைக்கும். மேலே சொன்ன சோதனை அகிம்சை பற்றி உண்மையாகவே நடத்தப்பட்டதுதான்.

அறம், நீதி, குற்றம் என்பதெல்லாம் நாம் மெல்ல உலகைப் புரிந்துகொண்டு வாசித்து பிறரை பார்த்து அறிந்துகொண்டு வாழ்வதுதான். குற்றம் செய்வதில் ஏற்படும் தடைகள் பற்றி பார்ப்போம்.

தண்டனை காரணமாக ஏற்படும் ஒழுக்கம்.

அரசு, குறிப்பிட்ட குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்குகிறது., இல்லையெனில் ஆயுள் முழுக்க வெளிச்சம் பார்க்காமல் சிறையில் வாழ வேண்டும் என்றால் ஒருவர் வலுக்கட்டாயமாக குற்ற உணர்வை கட்டுப்படுத்திக்கொண்டு ஒழுக்கசீலராக மாறுவார். வேறு வழி? தண்டனை ஒருவரை மிரட்டுகிறதே!

தீவிர சுயநலமாக இருப்பது. பிறரைப் பற்றி கவலையே படாமல் தன்னைப் பற்றி மட்டுமே எந்த நேரமும் யோசிப்பது. இந்த நிலையில் இருப்பவர்கள் குற்றங்களைக் கூட பிறர் அறியாமல் செய்வார்கள்.

சமூக ஒப்புதல், அங்கீகாரம்

ஒருவர் செய்யும் செயலுக்கு சமூக மக்களின் ஒப்புதல் அல்லது அங்கீகாரம் கிடைக்காதபோது அது குற்றமாகவே பார்க்கப்படும். ஒருவருக்கு பணம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்றால் மக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும்படி சமூகத்தின் அடிப்படையை சீர்குலைக்கும்படி எந்த செயலையும் செய்யமுடியாது. இதனாலும் நிறைய சத்தியசீலன்கள் உருவாகி வளர்கிறார்கள்.  

சமூகத்தின் இனக்குழுக்களுக்கு இடையே ஒத்திசைவு ஏற்படவேண்டுமென்றால் அதைக் காக்க சட்டம் உருவாகிறது. இந்த சட்டம் மதம், சமூக அந்தஸ்து பெற்றவர்களின் கருத்துக்களோடு முரண்பட்டும் இருக்கலாம்.

ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள், சட்டம் வழங்கும் ஜனநாயக செயல்பாடு ஆகியவையும் சிலசமயங்களில் சமூக மக்களின் கருத்துகளுக்கு மாறுபட்டு அமைய வாய்ப்புள்ளது.

உலகம் முழுக்க ஏற்கப்பட்டுவிட்ட விஷயங்களை மாற்றும்போது நிறைய இடர்ப்பாடுகளை ஒருவர் எதிர்கொள்ள நேரும். உதாரணத்திற்கு – சிறைக்கைதிகளை அரசு நடத்தும் விதம். மனித உரிமைகளைப் பொறுத்தவரை உலகம் முழுக்க ஒரேவிதமான அணுகுமுறைதான். இந்த விதிகளை மீறும்போது பிறநாடுகள் கூட அந்த விஷயத்தில் தலையிட்டு கருத்துகளை கூறும். அதை உள்நாட்டு விவகாரம் என அரசோ, தனி நபரோ கூறிவிட முடியாது.

 

படம் - பின்டிரெஸ்ட் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்