உலகமே வேண்டும் என அத்தனைக்கும் ஆசைப்படும் அஞ்சல் ஊழியரின் வாழ்க்கைப்பாடு! - அஞ்சல் நிலையம்
அஞ்சல் நிலையம்
– சார்லஸ் புக்கோவ்ஸ்கி
தமிழில் பாலகுமார்
எதிர் வெளியீடு
சார்லஸ் புக்கோவ்ஸ்கி நன்றி- காமன்ஃபோக்ஸ்
ஜெர்மனியில்
பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த அமெரிக்க கவிஞரான சார்லஸ் எழுதியுள்ள நாவல்தான் அஞ்சல்
நிலையம். இந்த நூல் அவரின் சுயசரிதை என கூறப்படுகிறது. நாவலின் இறுதிப்பகுதியை நீங்கள்
படித்தால் அதை உணர்வீர்கள்.
நாவல் முழுக்க
அஞ்சல் வேலை, அதிலுள்ள பிரச்னைகள், அதை எதிர்கொண்டு வேலை செய்யும் ஹென்றி சின்னஸ்கி
என்ற ஊழியரின் செயல்பாடு, அவரின் மேலதிகாரிகள், சின்னஸ்கியின் பிற ஆர்வங்களான குதிரைப்பந்தயம்,
பெண்களை இஷ்டப்படி புணருவது என விவரிக்கப்பட்டுள்ளது.
நூலை நீங்கள்
சிரித்துக்கொண்டுதான் படிப்பீர்கள். அந்தளவு செய்யும் வேலையை , சந்திக்கிற மனிதர்களை பகடி செய்கிறார் சார்லஸ். குறிப்பாக பணத்திற்காக
வேலை செய்து அந்த வேலையே அவர்களது மனதை, உடலை எப்படி உருக்குலைக்கிறது என்பதை வேடிக்கையான மொழியில்
சொல்கிறார். நாவலின் அங்கத மொழி இல்லாதபோது நூல் சாதாரணமாகவே தோன்றும். அதிலும் அஞ்சலக
வேலை, இடங்களை நினைவு வைத்துக்கொள்வதற்கான திட்டங்களை கடுமையாக அங்கதம் செய்திருக்கிறார்.
கூடவே, அலுவலக முறையில் அஞ்சல் ஊழியர்களுக்கும் வரும் புகார் பற்றிய அறிக்கை, மேல்மட்ட விசாரணைக்கூட சில அத்தியாயங்களாக
மாற்றியிருப்பது சாதாரண விஷயமே அல்ல.
சின்னஸ்கியை,
திட்டங்களை தூங்காமல் படி என மேலதிகாரி சொல்வதன் வழியாக முதலாளித்துவ அரசமைப்பு எப்படி பணியாளர்களை பத்து
மணிநேரத்திற்கும் அதிகமாக கசக்கி பிழிக்கிறது
என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
பெட்டி, ஜோய்ஸ்,
உலகைக் காக்க நினைக்கும் பெண், பொன்னிற முடிகொண்ட பெண், இறுதியாக புணர நினைக்கும் இளம்பெண்
என அத்தனை பெண்களுமே தங்களது தேவை சார்ந்தே சின்னஸ்கியை அணுகுகிறார்கள். பிறகு அவர்களுக்கான தேவை தீர்ந்து அல்லது உடலுறவில் சலிப்பான
உடனே வேறு விஷயங்களுக்கு செல்கிறார்கள். நியூயார்க்கர் படிக்கும் பெண்தான். ஆனால் அவள்
தனது துணையை எப்படி தேர்ந்தெடுக்கிறாள் என்பதையும் சின்னஸ்கி வேடிக்கையாக சொல்லியிருக்கிறார்.
பீர், விஸ்கி,
ஸ்காட்ச் என்பதோடு பருத்து உருண்ட முலைகள், பெரிய புட்டம், புட்டத்தின் மீது படுத்து
தூங்குவேன் என்று விவரிப்பு வரும்போது கூட வாசிப்பவர்களுக்கு வேலை என்பது ஒருவனை யோசிக்க
விடாமல் எப்படி கசக்கி பிழிகிறது என்பதைத்தான் நினைவூட்டுகிறது. தமிழில் பாலகுமார்
மொழிபெயர்த்திருக்கிறார். வாசிக்க நன்றாக இருக்கிறது. எந்த இடத்திலும் தயங்கி நிற்கவேண்டியதில்லை.
சிரித்துக்கொண்டே சின்னஸ்கியோடு நாமும் பீர் டின்னை உயர்த்தியபடியே பேசலாம்.
கோமாளிமேடை
டீம்
நடுகல் சிற்றிதழ் ஆசிரியர், எழுத்தாளர் வா.மு.கோவின் விமர்சனம்....
https://www.commonfolks.in/bookreviews/anjal-nilaiyam-oru-paarvaiமொழிபெயர்ப்பாளர் பாலகுமார் விஜயராமனின் வலைப்பூ
கருத்துகள்
கருத்துரையிடுக