வெற்றிக்கான கொள்கைகள் என்னென்ன? எம்இ மாத இதழ் சொல்லும் ரகசியம்

 
பெருநிறுவனங்கள் அனைத்துமே அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கான இதழ்களை நடத்துகின்றன. அதில் பல்வேறு தொழில் முன்னேற்றங்கள், பணியாளர்களின் சாதனை, நிறுவனரின் லட்சியம், தற்போதைய இயக்குநரின் தொழில்கொள்கை இடம்பெறும். இந்த வகையில் மகிந்திரா எம்இ என்ற இதழை நடத்துகிறது. அதில் வந்த தொழில் அறிவுறுத்தல் கொள்கைகளைப் பார்ப்போம்.

எப்போதோ ரெடி

தொழிலில் வெல்வதற்கான வாய்ப்பு என்பது எப்போது வரும் என தெரியாது. எனவே, நிறுவனம் குறிப்பிட்ட சந்தையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இறங்கினால் திட்டங்களை அறிவிக்கும் வேகத்தில் பணியாளர்களை முடுக்கிவிட தலைவர் தயாராக இருக்கவேண்டும். இல்லையெனில் வெகு விரைவில் வாய்ப்பை இழந்து கையில் உள்ள சந்தையையும் இழந்துவிடுவோம்.

அத்தனையும் வேண்டாம்

கையில் உள்ள அத்தனை பணத்தையும் தொழில் முதலீடாக பயன்படுத்த வேண்டியதில்லை. அதில் ஆபத்துகள் அதிகம். பெரிய முதலீடு மூலம் பெரிய வருமானம் கிடைக்கும் என்பது மூடநம்பிக்கை.

 

சமரசமற்ற வாழ்வு

மேசையை விட்டு விலகி வர தைரியம் இல்லாதபோது அறைக்குள்  நுழையவே கூடாது. செய்யும் வேலையில் அழுத்தம் என காரணம் சொல்லி தரத்தையும், மதிப்பையும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது.

விலையும் தரமும்

விலையும் பொருளின்  தரமும் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அதிக விலை கொடுத்து வாங்கும் ஒரே காரணத்தால் ஒரு பொருள் மதிப்பு மிக்கதாகாது. இந்த வகையில் இணையத்தில் சாதிக்கும் சமூக வலைத்தள நிறுவனங்களை எடுத்துக்காட்டுகளாக கூறலாம்.

கனவுள்ள இளைஞன்

நம்மிடம் பணத்தில் பற்றாக்குறை இல்லை. ஆனால் கனவுகள் நிறைந்த மனிதர்கள் குறைவாக இருக்கிறார்கள். தங்களின் கனவுகளுக்காக மக்கள் சாகவும் தயாராக இருக்கவேண்டும் என அலிபாபா நிறுவனரான ஜாக் மா கூறினார். நிறுவனத்தை கையகப்படுத்தும்போது அங்கு பணியாற்றும் மதிப்பு மிக்க பணியாளர்களும்தான் கூடவே வருகிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து நமது கனவுகளை அடை ய முயன்றால்தான் வெற்றி சாத்தியமாகும்.

ஆற்றலில் லாபம்

ஒரு நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டால் அந்த துறையில் செய்து வரும் வேலையில் புதிய ஆற்றல் கிடைக்கவேண்டும். அதன் அடிப்படையில் கணக்கிட்டால் 1 +1 என கூட்டினால் விடையாக மூன்று வரவேண்டும். அப்படி வரவில்லையென்றால் உங்களுக்கு கஷ்டம் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை