இடுகைகள்

ஆலிவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணர்வுகளால் ஆனது சமையல் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பெண்ணுடலை அறிய கோட்டை பயணம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நான் கடந்து வந்த செவ்வாய் திருவண்ணாமலை சென்றுவிட்டேன் . இன்று காலை பதினொரு மணிக்கு மயிலாப்பூர் அறைக்கு வந்தேன் . குடும்பஸ்தர்களின் வீட்டுக்குப் போவது எனக்கு சங்கடம் அளிக்கிற விஷயமாக உள்ளது . வினோத் அண்ணா வீட்டுக்குப் போகவில்லை . இது அவருக்கும் சற்று நிம்மதி கொடுத்திருக்கும் . திருவண்ணாமலையில் ஆலிவர் என்பவரின் அறையில் தங்கினேன் . தஞ்சையைச் சேர்ந்தவர் . வினோத் அண்ணாவைப் போல புகைப்படக்காரர்தான் அவரும் . முதலில் என்னைப் பார்த்து லெஜண்டுடா என பதற்றமானவர் , பிறகு சமாதானமாகிவிட்டார் . ஓவியம் , புகைப்படம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர் . அதுதான் பிழைப்பும் கூட . இந்த முறை பயணத்தில் செஞ்சி கோட்டைக்குச் சென்றோம் . அங்கு வரலாற்றை அறிய விரும்புபவர்களை விட பெண்ணின் உடலை அறிய விரும்புபவர்கள்தான் அதிகம் இருந்தார்கள் . சுவர்கள் எங்கும் காதலர்களின் பெயர்கள்தான் . அதைக்கடந்துதான் வரலாறு , வெங்காயம் எல்லாம் . டிக்கெட் வாங்குவது எல்லாமே டிஜிட்டலாக க்யூஆர் கோட் மூலம்தான் . தரையில் கற்பாளங்கள் , சுவர்களில் கருங்கற்கள் இருப்பதுதான் இ

தனிமைதான் குடிக்கு முக்கியமான காரணமா? - கடிதங்கள் - வினோத் பாலுச்சாமி

படம்
  அன்புள்ள  வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமா? இந்த வாரம் வடபழனியில் உள்ள ஃபாரம் மாலுக்கு போனோம். நானும் மோகன்ராஜ் அண்ணாவும்தான் கூட்டணி. அங்குள்ள ஸ்பார் மார்க்கெட்டில் புத்தாண்டு டைரிகளை குவித்து வைத்துவிட்டனர். நான் டைரியை வாங்கவில்லை. வாங்கி எழுதுவதில்லை. பிறகு வாங்கி என்ன செய்வது என கர்ச்சீஃப், நோட்பேட் ஆகியவற்றை வாங்கினேன். அறையில் சமையல் செய்வது இல்லை. எனவே, பொருட்களை கெட்டுப்போகும் முன்னரே, அலுவலக சகா ஒருவருக்கு இலவசமாக கொடுத்துவிட்டேன். அவர் திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷனில் தங்கி அலுவலகம் வருகிறார்.  கொலைகுத்தாக வாசிப்பு வட்டம் நடத்தி என்னை மாட்டிவிட்ட நண்பர், வெட்கம், கூச்சமே இல்லாமல் விழா எப்படி என போன் செய்து கேள்வி கேட்டார்.  கொடுமை என்பதுதான் எனது மனக்குரல்.  ஆனால் என்ன செய்வது? மனதை மாற்றிக்கொண்டு பிரமாதம் என பொய்யை சொல்லிவிட்டேன். மனமகிழ்ந்து போய்விட்டார் அந்த நண்பர்.  முஸ்லீம்களின் வாழ்க்கையை மட்டுமே எடுத்து பேசிக்கொண்டிருப்பதில் வாசகர் வட்டம் என்று சொல்லி பொதுவான ஆட்களை வரச்சொல்லுவதில் என்ன அர்த்தம் இருக்கப்போகிறது? வாசிப்பு வட்டத்தை மசூதிக்குள்ளேயே நடத்திக்கொள்ளலாமே