வளர்ப்பு தந்தைக்காக தன்னை தியாகம் செய்யும் மகனின் தியாக கதை!
சின்னோடு சுமந்த், சார்மி கௌர் இயக்குநர் கண்மணி சிறைக்கைதியாக இருக்கும் பெண்ணின் குழந்தையை சிறை வார்டன் தனி கவனமெடுத்து பார்த்துக்கொள்கிறார். கைதி திடீரென நோய்மையால் இறந்தபிறகு, குழந்தையை தனது வீட்டுக்கு எடுத்து வந்து தானே வளர்க்கிறார். வார்டனின் அப்பா, அவரது தம்பிக்கு இது பிடிக்கவில்லை. இந்த நிலையில் வார்டனின் தம்பி தலையில் அடிபட்டு இறந்துகிடக்கிறார். அப்போது, அருகில் ரத்தக்கறை படிந்த பூச்சாடியோடு வளர்ப்பு மகன் சின்னா நிற்கிறான். இதனால் அவனை வளர்த்த வார்டன் கடும் கோபத்திற்கு ஆளாகிறார். அவனை வெறுக்கத் தொடங்குகிறார். சிறைக்கு சென்ற சின்னா திரும்பி வரும்போது அவனை குடும்பம் ஏற்றுக் கொண்டதா என்பதே படக்கதை. படத்தில் முக்கியமான விஷயமே, காட்சியை பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடும். ஆனால் அந்த உண்மையை காட்சியில் உள்ள மற்றவர்கள் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். இதனால் காட்சிகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும். படத்தில் இப்படி சென்றுகொண்டிருப்பதில் சற்றே மாறுதல் ஏற்படுத்துவது வேணு, அலி காமெடி காட்சிகள் தான். மற்றபடி, படம் சற்று சீரி...