வளர்ப்பு தந்தைக்காக தன்னை தியாகம் செய்யும் மகனின் தியாக கதை!

 











சின்னோடு 

சுமந்த், சார்மி கௌர்

இயக்குநர் கண்மணி 





சிறைக்கைதியாக இருக்கும் பெண்ணின் குழந்தையை சிறை வார்டன் தனி கவனமெடுத்து பார்த்துக்கொள்கிறார். கைதி திடீரென நோய்மையால் இறந்தபிறகு, குழந்தையை தனது வீட்டுக்கு எடுத்து வந்து தானே வளர்க்கிறார். வார்டனின் அப்பா, அவரது தம்பிக்கு இது பிடிக்கவில்லை. இந்த நிலையில் வார்டனின் தம்பி தலையில் அடிபட்டு இறந்துகிடக்கிறார். அப்போது, அருகில் ரத்தக்கறை படிந்த பூச்சாடியோடு வளர்ப்பு மகன் சின்னா நிற்கிறான். இதனால் அவனை வளர்த்த வார்டன் கடும் கோபத்திற்கு ஆளாகிறார். அவனை வெறுக்கத் தொடங்குகிறார். சிறைக்கு சென்ற சின்னா திரும்பி வரும்போது அவனை குடும்பம் ஏற்றுக் கொண்டதா என்பதே படக்கதை. 

படத்தில் முக்கியமான விஷயமே, காட்சியை பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடும். ஆனால் அந்த உண்மையை காட்சியில் உள்ள மற்றவர்கள் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். இதனால் காட்சிகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும். படத்தில் இப்படி சென்றுகொண்டிருப்பதில் சற்றே மாறுதல் ஏற்படுத்துவது வேணு, அலி காமெடி காட்சிகள் தான். 

மற்றபடி, படம் சற்று சீரியசான ஒன்று. 

சிறையில் இருந்துவிட்டு வருபவர் என்ன வேலையில் சேர முடியும். ஏஸ் யூஸ்வலாக  ரௌடியாக மாறுகிறார். சின்னவன் என படத்தில் டைட்டில் வைத்துவிட்டு டான், மாஃபியா என மாறவா முடியும்.?

சைக்கிள் ஸ்டேண்டை காண்ட்ராக்டர் எடுக்கும் ரூமில் சேர்ந்து ஒன்றாக ஜோதியில் ஐக்கியமாகிறார். அங்குள்ள நண்பர்களுக்கு வரும் ரௌடி தொந்தரவுகளை தீர்க்கிறார். அதற்காகவே அவரும் ரௌடி ஆகிறார். இப்படி ஏரியாவில் ஃபார்மாகி மக்களின் பிரச்னைகளை தீர்க்கிறார். இதனால் அங்குள்ள பெரும் டான்களின் பகையை சம்பாதிக்கிறார். இந்த டான்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்தால் என்னாகும்? அதுதான் இறுதிக்காட்சி.

சுமந்த் பாசம் காட்டி அதனால் கண்ணீர் சிந்தும் பாத்திரம். அதேநேரம் தன்னை, தன் நண்பர்களை சீண்டியவர்களை அடிபிளக்கிறார். கிடைத்த ஓய்வுநேரத்தில் மேல் போர்ஷன் லூசு காதலியுடன் - (அஞ்சலி ) டூயட் பாடுகிறார். படம் பார்க்கும் யாருக்குமே எளிதாக தெரிந்துவிடும். சின்னாவுக்கும் ஸ்ரீசைலத்திற்கும் அவரது மாப்பிள்ளையான ரங்காவிற்கும் குடைச்சல் தீராது. சண்டை வரும் என... எனவே அதில் பெரிய ஆச்சரியமோ... எதிர்பார்ப்போ இல்லை. அதை எப்படி காட்சிபடுத்துகிறார்கள் என்றுதான் யோசனை. இந்த முட்டல் மோதல் காட்சிகள் சரியாக வரவில்லை. 

தியாகமே உன்னை உயர்த்தும்!

கோமாளிமேடை டீம் 





 





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்