இடுகைகள்

எக்ஸ்ரே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஎன்ஏவிலுள்ள மூலக்கூறுகளை அறிந்து உலகிற்கு சொன்னவர்! - ரோஸாலிண்ட் ஃபிராங்கிளின்

படம்
  ரோஸாலிண்ட் ஃபிராங்கிளின் (1920-1958) இங்கிலாந்தின், லண்டன் நகரில் பிறந்தார். பெற்றோர் எல்லிஸ் ஆர்தர் ஃபிராங்கிளின், முரியல் ஃபிரான்சஸ் வாலே.பள்ளியில் படிக்கும்போதே அறிவியல் படிப்பில் ஆர்வம் காட்டினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நியூன்காம் கல்லூரியில், இயற்கை அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தவர், 1941ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். முனைவர் பட்டம் பெற்றவர்,  பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்று எக்ஸ்ரே கதிர்கள்(xray diffraction) பற்றி படித்து வல்லுநரானார்.  1951ஆம் ஆண்டு லண்டனில் கிங் கல்லூரியில் இருந்த ஆராய்ச்சிக் குழுவோடு இணைந்து எக்ஸ்ரேவைப் பயன்படுத்தி டிஎன்ஏவை 3டி வடிவத்தில் உருவாக்க முயன்றார். இதற்கு ரோஸாவின் மாணவர் எடுத்த போட்டோகிராப் 51 முக்கியமான ஆதாரமாக உள்ளது. 1953ஆம் ஆண்டு புகையிலை மொசைக் வைரஸின் ஆர்என்ஏ அமைப்பை பற்றி ஆராயத் தொடங்கினார். இந்த செயல்பாடுதான், வைரஸ்களைப் பற்றிய அமைப்பு பற்றி அறிவதற்கு உதவியது. டிஎன்ஏவிலுள்ள மூலக்கூறுகளைப் பற்றி அறிவதற்கு ரோஸாலிண்ட் செய்த ஆராய்ச்சிகள் உதவின. https://en.wikipedia.org/wiki/Rosalind_Franklin

பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள்!

                  பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் ! சைக்கிள் 1817-1880 பதினைந்தாம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே சைக்கிள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன . அப்படித்தான் இரண்டு , நான்கு சக்கர வண்டிகள் உருவாக்கப்பட்டன . ஆனால் பாதுகாப்பான இரு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்க மனிதர்களுக்கு நானூறு ஆண்டுகள் தேவைப்பட்டன . 1817 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த அறிவியலாளர் கார்ல் வான் டிரெய்ஸ் , மரத்தினால் ஆன சக்கரங்களை இணைத்த சைக்கிளை உருவாக்கினார் . இதில் சீட்டும் கூட இருந்தது . 1860 ஆம் ஆண்டு பெடல்களைக் கொண்ட சைக்கிள் உருவானது . இதனை வெலோசிபெட் என்று அழைத்தனர் . இதனை பிரான்சில் உருவாக்கினர் . வடிவமைப்பு ஓகே என்றாலும் சைக்கிள் டயர் கடினமாக இருந்ததால் இதில் பெடல் போடுவது எலும்புகளை உலுக்கும் அனுபவத்தை கொடுத்தது . எனவே இதனை போன்சேக்கர் என்று அழைத்தனர் . பிறகு 1880 இல் உருவாக்கப்பட்ட சைக்கிள் தான் பெடல் அமைப்பும் , செயின் அமைப்பும் இணைந்து சைக்கிளை செலுத்துவதற்கு சமநிலையைக் கொடுத்தது . 1865 பதப்படுத்துதல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உணவு , ப