இடுகைகள்

ஏஎம்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிப் தயாரிப்பில் நுழையும் நிலப்பரப்பு ரீதியான அரசியல்!

படம்
சிப் தயாரிப்பு  சிப்களின் தயாரிப்பு முறை கணினி மற்றும் வீட்டு பயன்பாட்டு பொருட்களில் பயன்படும் சிப்கள் காலத்திற்கேற்ப மாற்றங்களைப் பெற்று வருகின்றன.  முன்பு கணினிகளுக்கு பயன்பட்டு வந்த சிப்கள் இன்று கார், டிவி, சலவை இயந்திரம், ஸ்மார்ட்போன் என பல்வேறு சாதனங்களிலும் நீங்காத இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிப் தயாரிப்பு நிறுவனங்கள், தேவைக்கு ஏற்ப செயல்பட முடியாமல் தடுமாறின. இதன் காரணமாக, வீட்டு பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்கள் உற்பத்தி தேங்கத் தொடங்கியது. இதற்கு சிப் தயாரிப்பில் அரசு சரியாக கவனம் செலுத்தவில்லை என சிலரும், சிப் தயாரிப்பு நிறுவனங்கள்  சந்தையில் குறைவாக இருப்பதால்தான் இப்படி ஒரு பிரச்னை ஏற்படுகிறது என விமர்சனங்கள் கிளம்பின.  உலகளவில் சிப் தொழிற்துறை  40 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக உள்ளது. இன்று  நாம் பயன்படுத்தும் ஆன்லைன் வங்கிச்சேவை, மின்னஞ்சல் என பல்வேறு சேவைகளின் பின்புலத்திலும் சிப்கள் உள்ளன. 1959ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த முகமது அடாலா மற்றும் டாவோன் காங் ஆகிய இருவர், அடிப்படை கணித செயல்பாடுகளுக்காக...

கிராபிக் சிப்களுக்கு கூடுகிறது மவுசு!

படம்
                        சிப்களின் வேகம் கூடிவருகிறது ! கடந்த ஐம்பது ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் பயன்படுத்தும் கணினிகளின் வேகம் கூடியுள்ளது . ஒப்பீட்டளவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிப்களின் வேகம் கூட்டப்பட்டு வருகிறது . இன்டலை தொடங்கிய நிறுவனர்களில் ஒருவரான கார்டன் மூரின் விதிகளின் பட வேகம் அதிகரித்து வருகிறது . 1965 இல் இதற்கான விதியை இவர் உருவாக்கினார் . சிப்களை முடிந்தளவு சிறிதாக உருவாக்கி அதன் பாகங்களையும் நேர்த்தியாக உருவாக்கி வேகத்தை கூட்டி வருகின்றனர் . மைக்ரோபுரோசசர்கள் இன்று கணினிகளின் திறனை அதிகரித்து வருகிறது . நமது வாழ்க்கையின் பெரும்பகுதி டிஜிட்டல்மயமாக மாறியுள்ளது . உணவு , போக்குவரத்து முதல் சமூக வலைத்தளம் , ரோபோட்டிக்ஸ் , மிகை மெய்ம்மை , எந்திர கற்றல் ஆகியவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது . இப்போது நாம் அதிளளவு டேட்டாவை உருவாக்கி வருகிறோம் . அதனை மேக கணிய முறையில் பயன்படுத்தி வருகிறோம் . இப்படி சேகரித்து வைக்கும் டேட்டாவை அலச நமக்கு அதிகளவு கணினித் திறன் தேவை ...