இடுகைகள்

சலிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரே மாதிரியாக கட்டுரை எழுதுவதே போர் அடிக்கும் வேலை!

படம்
  நரசிங்கபுரம் 5/2/2023 அன்பு அன்பரசு சாருக்கு, வணக்கம். புத்தகம் படிப்பதால் நலமாக இருப்பீர்கள் என்றுணர்கிறேன். காலம் கடந்துகொண்டிருக்கிறது. சில கடமைகளை காலாகாலத்திற்குள் முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக உணர்கிறேன். ஒன்று அரசு வேலை, மற்றொன்று திருமணம். தற்போது இருக்கும் வேலையில் சிக்கலும் இல்லை. வளர்ச்சியும் இல்லை என்று உணர்கிறேன். எத்தனை நாட்களுக்கு கணக்கு கட்டுரைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருக்க முடியும்?   பல வேலைகளைச் செய்வது திடமாக உள்ளது. சென்ற வாரம் பத்திரிகையில்   கணபதி சாருக்கு கணக்கு டவுட் வந்தது. தீர்வு சொன்னதும் வியப்படைந்தார். அன்றிலிருந்து ‘’வேறெதாச்சும் வேலைக்கு போயா, இங்கே வளர்ச்சி இருக்காதுன்னு’’ பேசிக்கிட்டே இருக்காரு. எப்போதும்! அவர்தான் அண்ணனையும் திட்டி விரட்டியிருப்பார் என்றுணர்ந்தேன். வேலைக்கு இதுபோல் என்றால் திருமணம் மற்றொரு கதை. வீட்டில் எனக்கு திருமணம் செய்ய கங்கணம் கட்டியிருக்கிறார்கள். அதிகம் பேசுகிறேனாம். பேச்சில் தத்துவங்களை அடுக்கி பேசுகிறேனாம். குடும்ப பொருளாதாரச் சிக்கலில் திருமணம் செய்ய, தற்போது விருப்பம் இல்லை எனக்கு… செ

நம்பிக்கையை குலைக்கிறதா டேட்டிங் ஆப்கள்?

படம்
பம்பிள், ஓகே க்யூபிட், குவாக் குவாக் ஆகிய டேட்டிங் ஆப்கள் பெருந்தொற்று காலத்தில் புகழ்பெற்றன. நீண்டகால உறவை வளர்த்துக்கொள்ள பலரும் இதனை பயன்படுத்தினார். ஆனால் அதேசமயம், இதன் பக்கவிளைவுகளும் பலரையும் பாதித்துள்ளன. இதில் தங்களது பயோவை பதிவு செய்து காதல் உறவை எதிர்பார்த்தவர்களுக்கு நிறைய ஏமாற்றங்களும் கிடைத்துள்ளன. ஒருவரின் விருப்பங்கள் அடிப்படையில் அல்காரித முறையில் ஆட்களை தேடி தருவதை டேட்டிங் ஆப்கள் செய்கின்றன. எனவே, இவற்றைப் பயன்படுத்துபவர்கள் பலரும் நேரடியாகவே நாம் பார்க்கும் ஒருவரைப் பிடித்திருந்தால் பேசிப் பழகலாம். ஆப்பில் யாரையும் பார்த்துப் பழகவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். புத்தாண்டு நேரம். இனிமேல் நான் குடிக்கிறதை விட்டுட்டேன் மாப்ள என நண்பர் போன் செய்து சொன்னால் நமக்கு மனதில் என்ன தோன்றும். குடிச்சிருக்கான் போல என நினைத்துக்கொண்டு சரிடா என்று சொல்லி போனை அணைப்போமே அதேதான். டேட்டிங் ஆப்களை பயன்படுத்துபவர்கள் வெளிநாடுகளைப் போல அதனை சீரியசாக நினைப்பதில்லை. போரடிக்கிறது ஏதாவது செய்வோமே என்று டேட்டிங் ஆப்பை நோண்டுகிறார்கள். செய்தி அனுப்புகிறார்கள். சந்

வேடிக்கையான சலிப்பூட்டாத டிஜிட்டல் அருங்காட்சியகம்!

படம்
      sample picture-pixabay         அபிஷேக் போடார் மியூசியம் ஆப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி நீங்கள் பல்வேறு பிரபலமான கலைஞர்களுடன் தொடர்புகளை வைத்துள்ளீர்கள் . அவர்களைப் பற்றிய சுவாரசியங்கள் ஏதேனும் பகிருங்கள் . கலைஞர் மீரா முகர்ஜியை எனது சகோதரி திருமணத்திற்கு அழைத்திருந்தேன் . வந்தவருக்கு அணிகலன் ஒன்றை பரிசாக கொடுத்தேன் . அடுத்தமுறை அவரது வீட்டுக்கு சென்றபோது , அப்பரிசு அவரது வீட்டு வேலையாளின் உடலில் இருந்தது . அதனை கவனித்தனவர் . நான் அதிகம் எங்கும் செல்வதில்லை . சிலமுறை போட்டுப் பார்த்தேன் . பிறகு அவளுக்கு கொடுத்துவிட்டேன் . நீ எனக்கு கொடுத்தபிறகு அது எனக்கு சொந்தம் . எனது விருப்பம் போல அவளுக்கு கொடுத்தேன் என்று சொன்னார் . ஓவியக்கலைஞர் எம்எஃப் ஹூசைன் வெளிநாட்டில் இருந்தபோது , அவரை நான் சந்தித்தேன் . நான் அவரிடம் எதை மிஸ் செய்கிறீர்கள் என்று கேட்டேன் . இந்திய மண்ணைத்தான் என்று சொன்னார் . இப்படி சொல்ல என்னிடம் நிறைய கதைகள் உண்டு . ஆனால் அவை அனைத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை நினைவுகூரவைப்பவைதான் . கலை சார்ந்த விஷயத்தில் உங்களை ஈர்த்தது என்ன ? சில ஆண்ட