2024 trends இதுதானுங்கோவ்....
நாகரிகமோ, நாதாரித்தனமோ உலகம் அதையெல்லாம் கவனிப்பதில்லை. உங்கள் சட்டை பிராண்ட் ஏரோ, தலைக்கு எழுநூறு ரூபாய் கொண்ட இங்கிலாந்து தேங்காய் எண்ணெய் தேய்க்கிறீர்கள், கால்சட்டை இரண்டாயிரம் ரூபாயா, கையில் கட்டியுள்ள வாட்ச் ரோலக்ஸா, ஒமேகாவா, குடிப்பது பிஸ்லரியா, கண்ணில் ரேபான் குளிர் கண்ணாடி, ஓட்டுவது டெஸ்லா காரா என்றுதான் உற்று கவனிக்கிறது. இவற்றையெல்லாம் வைத்துதான் மனிதனை உலகம் அளவீடு செய்கிறது. இதுபோல சமகாலத்தில் உள்ள விஷயங்களைத்தான் பார்க்கப் போகிறோம்.... கடித்த ஆப்பிளின் நிர்வாணமே செக்சி தலைப்பைப் பார்த்து உடனே நீங்கள் நினைப்பதை ஜாவ் குரு வலைத்தளத்தில் தேடி கண்டடையலாம். அதைக் கூறவரவில்லை. ஐபோனை வைத்திருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? உலகையே ஜெயித்தவர்களைப் போல நடந்துகொள்வார்கள். பின்னே ஒரு லட்சத்திற்கும் பக்கத்தில் காசு கொடுத்து ஆப்பிள் மார்க் போனை வாங்கியுள்ளார்களே? அதை பிறருக்கு காட்டவே அதற்கு கவர் போடாமல் சுற்றிக்கொண்டிருப்பார்கள். அதைத்தான் அந்த ஆப்பிள் கம்பெனியும் விரும்புகிறது. அதைத் தாண்டி 240 மாட்டு நல அரசு செய்யும் உளவு வேலைகளை...