இடுகைகள்

நேர்காணல்-வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கன்னடம் தேசியமொழியாக இருந்த காலமும் ஒன்றுண்டு!

படம்
  நேர்காணல் ! " கன்னட மன்னர்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள் " வசுந்தரா ஃபிளியோசட் , வரலாற்று ஆய்வாளர் . தமிழில் : ச . அன்பரசு கர்நாடகாவின் வரலாறு தொடர்பாக 1960 ஆண்டிலிருந்து ஆராய்ச்சி செய்து வருகிறார் வசுந்தரா . பண்டிதர் சென்ன பசவப்பா கவலி என்பவரின் மகளாக பிறந்த வசுந்தரா , கர்நாடக பல்கலையில் வரலாறு , பிரெஞ்சு , கல்வெட்டியல் படித்தவர் . சோர்பன் பல்கலையில் நாடகம் மற்றும் வரலாறு படிப்பில் முனைவர் பட்டம் வென்றவர் கல்வெட்டியல் குறித்த நூல்களை எழுதியுள்ளார் . 1940 ஆம் ஆண்டு தார்வாடில் உங்களது வாழ்க்கை எப்படி இருந்தது ? நெகரா ( நெசவாளர் ) இனத்தைச் சேர்ந்தது எங்கள் குடும்பம் . 1920 ஆம் ஆண்டில் கன்னடம் மற்றும் சமஸ்கிருதம் கற்ற தந்தை சென்னபசவப்பா , நாடகங்கள் பற்றி தடையின்றி எங்களுடன் உரையாடுவார் . ரேடியோவல் மல்லிகார்ஜூன் கான்செர்ட் நடக்கும்போது எனக்கு இளங்கலை இறுதித்தேர்வு நடக்கவிருந்தது . தேர்வு அடுத்தாண்டு எழுதிக்கொள்ளலாம் ; இந்த இசைநிகழ்ச்சி முக்கியம் என்று தந்தை கூறியதை தாயும் ஆட்சேபிக்கவில்லை . வரலாற்றில் ஆர்வம் வந்தது எப்படி ? வர