இடுகைகள்

அஞ்சலி! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாசுக்கட்டுப்பாடு பற்றிய அவசியத்தை வலியுறுத்திய ஆராய்ச்சியாளர்! - கிர்க் ஸ்மித்

படம்
ஈஸ்ட்வெஸ்ட் சென்டர் அஞ்சலி:  கிர்க் ஸ்மித், சூழல் ஆய்வாளர் கிர்க் ஸ்மித், பெர்க்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர். 1947ஆம் ஆண்டு பிறந்த இவர், கடந்த 15ஆம் தேதி காலமானார். இவர் தன்னுடைய பணியை அணுஆயுதம் எப்படி மக்களை பாதிக்கும் என்று முனைவர் பட்டம் செய்வதில் தொடங்கினார். இதன்மூலமே கவனிப்பைப் பெற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டு கரி, மரம், சாணம் ஆகியவற்றை எரிப்பதால் காற்றில் ஏற்படும் மாசுபாடு பற்றி ஆராய்ச்சிகளைச் செய்யத் தொடங்கினார்.   ஏன் நீங்கள் அணுஆயுதம் பற்றிய ஆராய்ச்சியை கைவிட்டு விட்டீர்கள் என்று கேட்டபோது, அதனால் ஏற்படும் பாதிப்பு குறைவு என்று பதில் சொன்னார். இவர் இந்தியாவில் விறகடுப்புகளால் மாசுபாடு பற்றி ஆராய்ச்சி செய்தார். காற்று மாசுபாடு பற்றிய ஆராய்ச்சியை இருபது நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சிகளுடன் இணைந்து செய்தார். இதனால் இந்தியாவில் மாசுபாடு பற்றிய கொள்கை திருத்தங்கள் உருவாக உதவினார் என்கிறார் இவருடன் பணியாற்றி ஐஐடி டில்லியைச் சேர்ந்த பேராசிரியர் அம்புஜ் சாகர். தொழிற்சாலைகள் மூலம் ஏற்படும் மாசுபாடுகளுக்கு முன்பே வீடுகளில் ஏற்படும் மாசுபாடுகளைப் பற்றிய விழிப்புணர்வை கிர்க

மகாராஷ்டிர அரசின் ஊழலை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர்! - தினு ரணதிவ்

படம்
அட்டா247.காம் தினு ரணதிவ் 1925-2020 மும்பையைச்சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் தினு. இவர் ரூலா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது, ராம் மனோகர் லோகியாவால் ஈர்க்கப்பட்டார். இதன் காரணமாக, சோசலிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவில் இணைந்து பணியாற்றி வந்தார். கோவா விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 1956-60 காலகட்டத்தில் ரூ.50 முதலீட்டில் சம்யுக்தா மகாராஷ்டிரா என்ற பத்திரிக்கையை சொந்தமாக தொடங்கினார். 1962ஆம் ஆண்டு மகாராஷ்டிரா டைம்ஸ் பத்திரிகையில் இணைந்தார். 1971ஆம் ஆண்டு நடந்த வங்கப்பிரிவினை பற்றிய செய்தியை அந்நாட்டிற்கு சென்று தகவல்களைச் சேகரித்து அனுப்பி வைத்தார். சிட்டகாங் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை பத்திரிகையில் செய்தியாக தொகுத்து எழுதினார். 1982ஆம் ஆண்டு மும்பை மில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றிய பல்வேறு செய்திகளை சிறப்பாக எழுதி அரசு அதன் மீது கவனம் குவிக்கச்செய்தார். அதே ஆண்டில் மகாராஷ்டிர அரசில் நடந்த சிமெண்ட் ஊழலைப் பற்றி எழுதி முதல்வர் அந்துலேவை ராஜினாமா செய்ய வைத்த பெருமை இவரையே சேரும். மும்பை கார்ப்பரேஷனில் முதலில் சாதி சார்ந்துதான் பிணங்களை ப

ஸ்டீபன் ஹாக்கிங்: அறிவியல் தலைமகன்!

படம்
ஸ்டீபன் ஹாக்கிங்: அறிவியல் தலைமகன் ! எழுபத்தி ஆறு வயதில் காலமான ஸ்டீபன் ஹாக்கிங் மோட்டார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்டவர் . உலகம் முழுக்க அறிவியலை பிரபலப்படுத்திய முக்கிய ஆளுமையும் கூட . 1942 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி பிறந்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் , ஆக்ஸ்ஃபோர்டில் பிறந்தார் . லண்டன் மற்றும் செயின்ட் அல்பேன்ஸில் வளர்ந்த ஸ்டீபன் , இயற்பியல் பட்டத்தை ஆக்ஸ்ஃபோர்டிலும் பிரபஞ்சவியலுக்கான முதுகலைஆராய்ச்சி பட்டத்தை கேம்ப்ரிட்ஜிலும் பெற்றார் . நியூரான் நோயினால் தாக்கப்பட்ட ஸ்டீபன் , மூன்று ஆண்டுகள் உயிர்வாழ்வார் என கூறிய ஆண்டு 1964. தன் முதல் மனைவி ஜேன் மூலம் மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில் சக்கரநாற்காலி வாசியாக இருந்த ஸ்டீபன் 1988 ஆம் ஆண்டு உலகப்புகழ்பெற்ற A Brief History of Time என்று நூலை எழுதினார் . " உலகெங்கும் அதிக விற்பனையான பலரும் படிக்காத நூல் " என இந்த நூலை தானே நக்கலடித்தார் ஸ்டீபன் . " theory of everything எனும் கொள்கை மூலம் உலகப்புகழ்பெற்றவர் டிவி நிகழ்ச்சிகளில் முக்கியமான செலிபிரிட்டி . நம்பிக்கையை என்று இழந்துவிடக்கூடாது என்று தான்