மாசுக்கட்டுப்பாடு பற்றிய அவசியத்தை வலியுறுத்திய ஆராய்ச்சியாளர்! - கிர்க் ஸ்மித்
ஈஸ்ட்வெஸ்ட் சென்டர் |
அஞ்சலி:
கிர்க் ஸ்மித், சூழல் ஆய்வாளர்
கிர்க்
ஸ்மித், பெர்க்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர். 1947ஆம் ஆண்டு பிறந்த இவர்,
கடந்த 15ஆம் தேதி காலமானார்.
இவர்
தன்னுடைய பணியை அணுஆயுதம் எப்படி மக்களை பாதிக்கும் என்று முனைவர் பட்டம் செய்வதில்
தொடங்கினார். இதன்மூலமே கவனிப்பைப் பெற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டு கரி, மரம், சாணம்
ஆகியவற்றை எரிப்பதால் காற்றில் ஏற்படும் மாசுபாடு பற்றி ஆராய்ச்சிகளைச் செய்யத் தொடங்கினார். ஏன் நீங்கள் அணுஆயுதம் பற்றிய ஆராய்ச்சியை கைவிட்டு
விட்டீர்கள் என்று கேட்டபோது, அதனால் ஏற்படும் பாதிப்பு குறைவு என்று பதில் சொன்னார்.
இவர் இந்தியாவில் விறகடுப்புகளால் மாசுபாடு பற்றி ஆராய்ச்சி செய்தார்.
காற்று
மாசுபாடு பற்றிய ஆராய்ச்சியை இருபது நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சிகளுடன் இணைந்து செய்தார்.
இதனால் இந்தியாவில் மாசுபாடு பற்றிய கொள்கை திருத்தங்கள் உருவாக உதவினார் என்கிறார்
இவருடன் பணியாற்றி ஐஐடி டில்லியைச் சேர்ந்த பேராசிரியர் அம்புஜ் சாகர். தொழிற்சாலைகள்
மூலம் ஏற்படும் மாசுபாடுகளுக்கு முன்பே வீடுகளில் ஏற்படும் மாசுபாடுகளைப் பற்றிய விழிப்புணர்வை
கிர்க் ஏற்படுத்தினார். இதனால் வரும் காசநோய், இதயநோய், நிம்மோனியா ஆகியவற்றால் பெண்களும்
குழந்தைகளும் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதை இவர் விளக்கினார்.
1980ஆம்
ஆண்டு முதல் இந்தியாவிற்கு அடிக்கடி வந்து செல்லும் ஆராய்ச்சியாளராக கிர்க் விளங்கினார்.
கிராமங்களில் பயன்படுத்தப்படும் அடுப்புகள் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை தயாரிக்கும் பணிக்கு
ஆலோசகராகவும் பணியாற்றியவர் இவர்.
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக