அமெரிக்காவில் நடந்தால் கோபம் வருகிறது, இந்தியாவில் நடந்தால் மௌனமாக இருப்பது ஏன்? - ஷோபா டே
மக்களுக்கு
ஏன் கோபம் வருவதில்லை?
கேரளத்தில்
பதினைந்து வயது பெண் யானை அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து வைத்துக்கொடுப்பட்டு இறந்துபோனது.
அதேசமயம் அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்த்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் வெள்ளை இனத்தைச்
சேர்ந்த காவல்துறை அதிகாரியால் அடித்து கொல்லப்பட்டார். இரண்டுக்கும் என்ன ஒற்றுமை
தெரியுமா? இரண்டுமே மனிதர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்கள்.
அமெரிக்காவில்
பாகுபாட்டிற்கு எதிராக கொந்தளித்து போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நாம்
யானை நீரில் நடுவழியில் நின்று ரத்தம் பெருக இறப்பை எதிர்நோக்கி இருக்கும் நிலையை எண்ணி
வருந்துகிறோம். இங்கு நாம் கவனிக்கவேண்டியது, யானை என்பது கேரளத்தில் மனிதர்களால் முதல்முறையாக
இப்படி இறக்கவில்லை. அமெரிக்காவிலும் கறுப்பினத்தவர்கள் வெள்ளை இனத்தவரால் முதல்முறையாக
அநீதியாக கொல்லப்படவும் இல்லை.
காட்டுப்பன்றிகளால்
வேளாண்மை பாதிப்படையாமல் இருக்க அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைக்கப்பட்டது என கைதானவர்
பேட்டியில் கூறியிருக்கிறார். அதேபோல அமெரிக்காவில் மூச்சு விட முடியல என கெஞ்சியவரை
கொன்ற டெரக் சாவின் என்பவரும் கூட சட்டத்தின் பெயரால் அதனை செய்திருக்கிறார். உலகம்
முழுக்க நுண்ணுயிரி ஒன்று மக்களை கொன்று குவித்து வருகிறது. அதையும் தாண்டி மக்கள்
அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் இறந்த கறுப்பினத்தவருக்காக தெருவில் போராடி வருகிறார்கள்.
இவர்கள் எதற்காக இந்தளவு உணர்ச்சிவசப்படுகிறார்கள் என சமூக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
மக்கள் எங்கும் வெளியே போக முடியாத மனப்பதற்றமும், எரிச்சலும் கொண்ட சூழ்நிலையில் யானையின்
இறப்பும், கறுப்பினத்தவர் இறப்பும் வெளியாகியுள்ளன. மும்பையில் சிறுவர் சிறுமிகள் கூட
கறுப்பினத்தவரின் வாழ்வுரிமைக்காக என்று எழுதிய போர்டுகளை பிடித்தபடி நிற்கிறார்கள்.
இவர்கள் ஏன் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக என்று நிற்கவில்லை. ஏன் அனைத்து மக்களின்
நலத்திற்காக என்று கூட நிற்கலாமே? என்று என் மனதில் எண்ணங்கள் தோன்றின. இதில் ஒருவர்
கூறும் கருத்து சரியாக இருக்கிறதா இல்லையா, அவர் ஏன் இதற்கு போராடுகிறார், அதற்கு போராடவில்லை
என்று நாம் கூறமுடியாது. நாம் அனைவரும் தனிப்பட்ட ரீதியில் மோசமான அனுபவங்களை பெற்றிருக்கலாம்.
அமெரிக்காவில்
ஐ கான்ட் ப்ரீத் என்ற வார்த்தைகள் அங்கு பெரும் போராட்டத்தை தொடங்கி வைத்துள்ளன. இந்த
நேரத்தில் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டால் துப்பாக்கிச்சூடு தொடங்கும் என அதிபர் டிரம்ப்
பேசியது காவல்துறை தலைவராலேயே, உருப்படியாக எதையும் சொல்லத்தெரியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு
இருக்கவும் என்ற சொல்ல வைத்திருக்கிறது.
இந்தியாவில்
அநீதிகளை நாம் ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோம். மக்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்கள் இங்கு
சக மனிதர்களால் இலகுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உலகில் நடக்கும் அநீதிகளை நாம் உடனே
எதிர்ப்போம். நடக்கவே கூடாது என போராடுவோம். ஆனால் இந்தியா என்று வந்துவிட்டால் மௌனம்
சாதிப்போம். இங்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அநீதியாக இறந்தபோதும் மக்களிடையே மௌனம்தான்
இருந்தது. அந்த செயலை எதிர்க்கும் சிறு நடவடிக்கைகளும் இல்லை. வாழ்க்கை இந்தியாவில்
மிக மலிவாக உள்ளதையே இச்செயல்பாடு காட்டுகிறது. இதில் கர்ப்பிணியாக யானை செத்தால் என்ன?
நடந்துசெல்லும் இடம்பெயர்ந்த தொழிலாளி செத்தால் என்ன?
டைம்ஸ்
ஆப் இந்தியா
ஷோபாடே
கருத்துகள்
கருத்துரையிடுக