நம்பிக்கையை வலியுறுத்தும் மில்லினிய தலைமுறையின் இசை போதை! - பிடிஎஸ் குழு
100korea |
பாப் இளவரசர்கள்
பிடிஎஸ்
இது என்ன வகையான இசை என்று
எனக்கு புரியவில்லை என ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார். ஒவ்வொரு தலைமுறைக்குமான இசையமைப்பாளர்கள்
உண்டு. மில்லினிய இளைஞர்களுக்கு பிடிஎஸ் பாடகர்கள்தான் இசை ரட்சகர்கள்.
உற்சாகம், கொண்டாட்டம்,
நேர்மறையான உணர்ச்சிகள், தன்னம்பிக்கை பீறிடும் பாடல்களை பாடி விற்பனையில் சாதனை படைத்த
பாடல்களைக் கொண்ட இளைஞர் கூட்டம்தான் பிடிஎஸ். கே பாப் என இவர்களது பாடல்களை அழைக்கிறார்கள்.
இளைஞர்கள் இவர்களைத்தான் தங்களது முன்மாதிரிகளாக கொண்டு வாழ்கிறார்கள். கொரியமொழியில்
பாடல்களை பாடுகிறார்கள். ஆனால் மொத்த இளைஞர்கள் கூட்டமும் மகுடி முன்னே ஆடும் பாம்பாகிறார்கள்.
நான் இவர்களோடு சிலமுறை
சந்தித்து உரையாடி இருக்கிறேன். அவர்கள் பாடல்களை உருவாக்குவது உற்சாகம் பீறிடும் சூழல்களில்தான்.
அவர்களில் சிலர் பிறர் பாடுவதற்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். ஏதோ இளைஞர்கள் பாடுகிறார்கள்
என்று நீங்கள் நினைத்தால் அவர்கள் பாடல்கள் வழியாக உருவாக்கும் அன்பு, சகோதரத்துவம்
ஆகியவற்றை கண்டுகொள்ளாமல் போகிறீர்கள் என்று பொருள்.
ஹால்சி
டைம்
கருத்துகள்
கருத்துரையிடுக