மனிதர்கள் தங்களைத் தாங்களே அடையாளம் காண பொதுமுடக்க காலம் உதவியது! - சயாமல் வல்லப்ஜீ







Revelation, Transformation, Awareness, Awakening


கொரோனா அனைத்து விஷயங்களையும் மாற்றிவிட்டது. உடல்நலம், மனநலம் சார்ந்த விஷயங்களையும் கூடத்தான். அதனால்தான் இணையதளத்தில் உடல்நலன் சார்ந்து பகிரப்படும் வொர்க்அவுட வீடியோக்களுக்கு இணையாக மனநலன் சார்ந்த விஷயங்களும் அறிவுறுத்தல்களும் பகிரப்படுகின்றன. இதுபற்றி பல்வேறு பிரபலங்களுக்கு மனநல பயிற்சியாளராகவும் விளையாட்டு அறிவியலாளராகவும் உள்ள சயாமல் வல்லப்ஜீயிடம் பேசினோம். 

மும்பையைச் சேர்ந்த இந்த ஆரோக்கிய வல்லுநர் ப்ரீத் பிலீவ் பேலன்ஸ் என்ற ஆரோக்கியம் சார்ந்த நூலை வரும் ஜூலையில் வெளியிட உள்ளார். 

பொதுமுடக்க காலகட்டத்தில் உடற்பயிற்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. நோய்த்தொற்று காலகட்டம் முடிந்தபின்னரும் இந்த டிரெண்ட் தொடரும் என நினைக்கிறீர்களா?

இப்போது மக்கள் டிஜிட்டல் வழியில் தங்களது ஃபிட்னெஸ் பயிற்சியாளர்களை நாடி வருகின்றனர், இனி வரும் காலங்கில் இணைய வழி பயிற்சியோடு கூடவே நேரடியாக பயிற்சி அளிப்பதும் தொடர வாய்ப்புள்ளது. நோய்த்தொற்று பரவுகிற காலத்தில் உடற்பயிற்சிகள் முக்கியத்துவம் பெறக்காரணம், மக்களுக்கு ஆரோக்கியம் மீது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுதான். எனவேதான் அனைத்தையும் விட உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்கள். 

மனநலன் சார்ந்த பிரச்னைகளை இப்போதுதான் நாம் கவனிக்கத் தொடங்கியுள்ளோமா?

முன்னர் நாம் மனநலம் சார்ந்த பிரச்னைகளை தீவிரமாக புறக்கணித்து வந்தோம். ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு பிறகான காலம் எப்படியிருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இதனால் பலருக்கும் மனப்பதற்றம், பேனிக் தாக்குதல்கள் ஏற்படும். இவற்றை தவறு என்று கூறமுடியாது. இவைதான் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை நமக்கே அடையாளம் காட்டும். 

மனநலனை சமநிலையில் வைத்துக்கொள்வது எப்படி?

மனம், உடல்நிலை, சுற்றுச்சூழல், உறவுகள் என்பதை முக்கிய அம்சங்களாக பார்க்கிறேன். நாம் இரண்டு கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும். எனது சாதகமான சூழலிருந்து எப்போது வெளியே வருவது? வாழ்க்கையில் எந்த பகுதியை மேலே உயர்த்தவேண்டும் ஆகிய கேள்விகள் முக்கியமானவை. இக்கேள்விகளுக்கான பதிலே உங்கள் சுயமான தன்மையை வெளிக்கொண்டுவரும். 

உங்களுடைய நூலைப் பற்றி சொல்லுங்கள். 

நான் எழுதியுள்ள நூல் முழுக்க என்னைப் பற்றியது. நான் எப்படி விளையாட்டு, உளவியல் சார்ந்து செயல்பட்டு என்னை அடையாளம் கண்டு கொண்டேன் என்பதுதான். இந்த நூலை வாசிப்பவர்கள், அவர்கள் தன் இயல்பிலேயே இருக்கவும், உண்மையான அவர்களின் தன்மையை அடையாளம் காணவும் முடியும். 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஃபராக் காட்டூன்
 








கருத்துகள்