சப் இன்ஸ்பெக்டராக துடிக்கும் இளைஞனின் கனவு - நட்சத்திரம்








Nakshatram review: Sundeep Kishan shines in the film






நட்சத்திரம்

இயக்கம் கிருஷ்ண வம்சி 

ஒளிப்பதிவு ஸ்ரீகாந்த் நரோஜ்

இசை பீம்ஸ் சிசிரோலியோ


சப் இன்ஸ்பெக்ட்ராக துடிக்கும் இளைஞன் (ராமாராவ்) பல்வேறு தடைகளைக் கடந்து எப்படி தன் கனவை அடைகிறான் என்பதே கதை. 

கதை இதுதான். இதற்குள் கமிஷனரின் சைக்கோ மகன், மக்களை பாம் வைத்துக்கொள்ளும் இஸ்லாமியர், இளைஞனின் பக்கத்து வீட்டில் சதா சரக்கிலேயே மிதக்கும் சீதாராம் என்ற கான்ஸ்டபிள், அலெக்ஸாண்டரை தேடி அலையும் ஐபிஎஸ் காதலி என நிறைய கதைகள் உள்ளன. 

படத்தில் சந்தீப் கிஷன் யதார்த்தமாக நடித்திருக்கிறார். காவலர் குடியிருப்பில் கேண்டீன் வைத்து நடத்தி வரும் அவரின் அம்மாவுக்கு ஒரே கனவு, தன் மகன் சப் இன்ஸ்பெக்ட்ராக வரவேண்டும் என்பதுதான்.. ஆனால் ஆங்கிலம் தடையாக இருக்கிறது. அதையும் மீறி ஜூனியர் ஆர்டிஸ்ட் காதலியுடன் காதலோடு ஆங்கிலமும் பழகி தேர்வில் வெல்கிறார். உடல்தகுதி தேர்விலும் வெல்கிறார். நேர்காணலுக்கு செல்லும்போது, அவருக்கு கமிஷனரின் மகனுக்கும் முன்னர் ஏற்பட்ட பகை குறுக்கே வர, நேர்காணல் வாய்ப்பு கைவிட்டு போகிறது. 

சமூகத்தில் நடக்கும் தவறுகளை எப்படியேனும் தட்டிக்கேட்பேன். என்பவர் காதலி கொடுக்கும் போலீஸ் உடையைப் போட்டுக்கொண்டு குற்றவாளிகளைத் தேடுகிறார். அப்போதுதான் பெண் ஒருவரை பின்தொடர்ந்து சென்று காவல்துறையிடம் பிடிபடுகிறார். அவரின் உடையில் இருந்த பெயரை தீவிரமாக காவல்துறை கமிஷனர் விசாரிக்கிறார். அப்போதுதான் கதையில் முக்கியமான திருப்பம் வருகிறது. அது என்ன என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

ஆஹா 

சந்தீப் கிஷன் இயல்பாக இருக்கிறார். சைக்கிளில் காதலியை கூட்டிக்கொண்டு செல்கிறார். தன் கனவு தகர்ந்து விழும்போது தற்கொலை செய்வது, தன்னை நேர்காணலுக்கு உள்ளே விட அழுதபடி கெஞ்சுவது என அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். ரெஜினாவுக்கு முழுநேர வேலை, சந்தீப்பால் நெகிழ்ச்சியான மனதை குளிர வைப்பதுதான். விதவிதமான உடைகளை அணிந்து வந்து கிக் பார்வையால் சூடேற்றுகிறார். மற்றபடி நடிப்பதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை. பிரக்யா ஜெய்ஸ்வால் நடிப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்த முயன்றிருக்கிறார்.. காக்கி உடையில் அவரை எப்படி பார்த்தாலும் பொருந்தவே இல்லை. 

ஐயையோ

தனது குழுவைச் சேர்ந்த ஒருவன் காணாமல் போய்விட்டான் என்றால் கமிஷனர் அதுபற்றி தெரியாமல் இருக்க முடியுமா? போதைப்பொருளை பயன்படுத்தும் ஒருவரை முகம் பார்த்தாலே கண்டுபிடித்து விட முடியுமே? ஆனால் பிரகாஷ்ராஜ் மகனைப் பார்த்தால் தோளைத்தட்டி சாப்பிட்டியா போய் சாப்பிடு என்று மட்டும் சொல்கிறார்.. வியக்க வைக்கிறார் கமிஷனர். 

போலீஸ் நேர்காணலுக்கு போக விடாமல் தடுத்தது உங்கள் மகன்தான் என கமிஷனரிடம் ராமாராவ் சொல்லியிருந்தால் அவர் அடிபடவேண்டிய அவசியமே இல்லையே? ஆனால் என்ன செய்வது? அங்கு சாய்தரம் தேஜின் பிளாஷ்பேக் வரவேண்டுமே?

போலீஸூக்கு மரியாதை!

கோமாளிமேடை டீம் 






கருத்துகள்