இடுகைகள்

பென் பிளாக்கெலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலையும் உளவியலும்! - பென் பிளாக்கெலி வன்முறை மனம்

படம்
அசுர குலம் - கட்டவிழும் வன்முறை உலகிலேயே நாம் கண்டறிய முடியாத ஒன்று என்ன தெரியுமா? உலகின் வரைபடம் என்ற சிறுவயது காமெடி வேண்டாம். பல பதில்கள் இதற்கு வந்தாலும் உண்மையானது மனிதர்களின் மனம்தான். மனதிலுள்ள பல்வேறு குரூர உணர்ச்சிகளை வெற்றிடம் வெளிப்படுத்த வாய்ப்பு தருகிறது. சாதாரண மனிதர்கள் உறங்கும் எரிமலை போல்தான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த எரிமலைகள் வெடிக்க லாவா பொங்கும். அப்படி ஒரு நிகழ்வு இங்கிலாந்தில் நடைபெற்றது. உண்மையில் அப்படியொரு  நிகழ்வை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜேய்டன் பார்க்கின்சன் வாழ்க்கை பலரின் பார்வைக்கு வந்தது அப்படித்தான். 2013 ஆம் ஆண்டு டிசம்பரில் இறந்தபோது பார்க்கின்சனின் வயது 17 தான். தன் முன்னாள் காதலரான டிட்காட்டிலுள்ள பென் பிளாக்கெலியைப் பார்க்கப் போனது மட்டுமே உலகிற்கு தெரியும். பின்னர் என்ன ஆனார் என்பது யாருக்குமே தெரியவில்லை. சரி, வேறு எங்காவது போனால் போனாவது செய்வாரே என்றால் அதற்கும் எந்த அறிகுறியும் கிடைக்கவில்லை. அப்போது தேசிய புள்ளியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுப்படி, முன்னாள் காதலர், கணவரால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கையில்