கொலையும் உளவியலும்! - பென் பிளாக்கெலி வன்முறை மனம்
அசுர குலம் - கட்டவிழும் வன்முறை
உலகிலேயே நாம் கண்டறிய முடியாத ஒன்று என்ன தெரியுமா? உலகின் வரைபடம் என்ற சிறுவயது காமெடி வேண்டாம். பல பதில்கள் இதற்கு வந்தாலும் உண்மையானது மனிதர்களின் மனம்தான்.
மனதிலுள்ள பல்வேறு குரூர உணர்ச்சிகளை வெற்றிடம் வெளிப்படுத்த வாய்ப்பு தருகிறது. சாதாரண மனிதர்கள் உறங்கும் எரிமலை போல்தான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த எரிமலைகள் வெடிக்க லாவா பொங்கும்.
அப்படி ஒரு நிகழ்வு இங்கிலாந்தில் நடைபெற்றது. உண்மையில் அப்படியொரு நிகழ்வை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜேய்டன் பார்க்கின்சன் வாழ்க்கை பலரின் பார்வைக்கு வந்தது அப்படித்தான்.
அப்போது தேசிய புள்ளியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுப்படி, முன்னாள் காதலர், கணவரால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கையில் பார்க்கின்சனின் இறப்பும் ஒரு எண்ணாக சேர்ந்துவிட்டது.
இதனைத் துப்புதுலக்கிய போலீஸ்காரர், கிறிஸ் வார்டு. பதினொரு
நாட்களான பின்பும் பார்க்கின்சன் போன் அழைப்புகளோ, சமூக வலைத்தள பதிவோ இன்றி காணாமல் போனது குறித்து யோசித்தார்.
எதுவோ நினைவில் இடறியது. விசாரணை செய்த ஆட்களின் பேச்சுக்களை நினைவில் கொண்டுவந்தார். இரவில் ஒருவர் பெரிய சூட்கேஸை கொண்டுவந்தது குறித்த இடத்தை ரீவைண்ட் செய்தார். அப்போது அதனைத் தூக்கி வந்தது பார்க்கின்சனின் காதலர் பென் என தெரிய வந்தது. உடனே சந்தேகப்பட்டு அந்த ஏரியாவை சல்லடையாக சோதித்தனர்.
அங்கிருந்த தேவாலய இடுகாடு மர்மமாக காட்சியளிக்க அங்கும் தேடத்தொடங்கினர். அந்த இடத்தில் பென்னின் மாமா ஒருவர் சமாதி தென்பட்டது. அந்த சமாதி இருந்த இடத்தில் மட்டும் மண் தோண்டப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. உடனே அதனைத் தோண்டியதில் ஜேய்டன் பார்க்கின்சனின் உடல் கிடைத்தது. 2014 ஆம் ஆண்டு பென்னின் கொலைக்குற்றத்திற்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
பென் ஏன் இப்படி செய்தார்?
பென் பல பெண்களை இப்படி தாக்கியதாக அவரின் தாய் நீதிமன்றத்தில் கூறினார். கர்ப்பமாக இருந்த பெண்தோழியை மாடியிலிருந்து படிக்கட்டுகளில் அடித்து வீழ்த்தியதையும், பார்க்கின்சனை ரகசியமாக எடுத்த நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டியதையும் புட்டு புட்டு வைத்தார். அச்சமயத்தில்தான் நடாலியா ஹெமிங் என்ற பெண் சித்திரவதைக்குள்ளாகி இறந்தார். எனவே பென் குறித்த கட்டுரைகள் பத்திரிகையில் வெளியாக பரபரபரப்பு பற்றிக்கொண்டது.
மருத்துவர்கள் இதனை மனநலன் சார்ந்த தாகவும், போதைப்பொருட்கள் மற்றும் மது ஏற்படுத்தும் பிரச்னையாகவும் பார்க்கின்றனர். அதேசமயம் குறிப்பிட வேண்டிய மற்றொன்று அரசு விதிக்கும் தண்டனைக்கு எந்த குற்றவாளிகளும் பயப்படுவதில்லை.
கட்டுப்படுத்தும் மனநிலை பார்க்கின்சன் கொலைக்கு முக்கிய காரணம்.
இதனை அடையாளம் காணுவது எப்படி?
நீங்கள் விரும்பாத விஷயத்தில் காதலர் உங்களை ஈடுபட கட்டாயப்படுத்துகிறாரா? தான் சொல்வதே சரியென பேசுகிறார் என்றால் அதுவும் பிரச்னைக்குரிய அடையாளம்தான்.
நீங்கள் சற்று குண்டாக இருக்கிறீர்கள். என்றால் உடலை சிக்கென கவ்விப்பிடிக்கும் உடையை பரிசளிப்பது. இருவருக்கும் பொதுவான நண்பர்கள் மத்தியில் கிண்டல் செய்வது. பட்டப்பெயர் வைத்து பகிரங்கமாக அழைப்பது
பக்கத்து வீட்டு மல்லிகா அக்காவிடம் பேசுவது, ஜாக்கிங் போவது, பள்ளிக்கூட நண்பரோடு சாட்டிங் என அத்தனை விஷயங்களையும் மானிட்டர் செய்து கூடாது என தடை போடுவார்கள். உங்களது டிஜிட்டல் பொருட்கள் வரை அவர்களின் கரங்கள் நீளும்.
உங்களிடம் ஒரு விஷயம் பிடிக்கவில்லை எனில் அதை வைத்து பல்வேறு விஷயங்களிலும் செக்ஸ் உட்பட மாற்ற வற்புறுத்திக்கொண்டே இருப்பார்கள். ஸ்பார் மார்க்கெட் மெசேஜ் அனுப்புவது போல இது மாறாது.
நீங்கள் சாப்பிடும் உணவு, செலவு செய்யும் பணம் ஆகியவற்றை கையகப்படுத்துவார்கள். உறவுகள், நண்பர்களோடான பழக்கத்தை தடுப்பார்கள்.
பொறாமை கொண்டவர்கள் என்பதால் உங்களுக்கான உலகம் என்பது மெல்ல தானோஸ் கைபட்ட பூமியாய் கரையும்.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: க்ரைம் அண்ட் இன்வெஸ்டிகேஷன், காஸ்மோபாலிட்டன்.