குடிநீரில் மருந்து கலக்கிறார்களா?
குடிநீரில் மருந்து கலக்கிறார்களா?
ஆம். அமெரிக்காவில் நடந்த புவியியல் தொடர்பான ஆய்வில் அங்கு வரும் குழாய் நீரில் 80 சதவீதம் மருந்துகளின் எச்சங்கள் இருப்பது தெரிய வந்தது. இதில் ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, மனச்சோர்வைக் குறைக்கும் மருந்துகள் உள்ளடங்கும். இது அமெரிக்காவில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் உண்டு.
மருத்துவமனைகளிலிருந்து வரும் கழிவுகள், அல்லது கழிவறைகளில் தூக்கி எறியப்படும் மாத்திரைகள் நீர் போக்குவரத்தில் கலப்பதால் ஏற்படும் பாதிப்பு இது.
முதலில் இப்படி கலந்து வருவதை மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. குறைவாகத்தானே இருக்கிறது என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் ஆய்வுகள் சொன்ன உண்மை, இவை அதிக அடர்த்தியில் நீரில் கலந்து வருகிறது என்பதே. மனச்சோர்வை போக்கும் மருந்துகள் நம் மூளையில் இயக்கத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இங்கிலாந்தில் ந திப்படுகை அருகே வாழும் மக்களை சோதித்தபோது, அவர்களின் உடலில் கருத்தடை மாத்திரைகளின் அடர்த்தி அதிகமாக இருந்தது. இது அவர்களின் ஹார்மோன் சுரப்பை மட்டப்படுத்துகிறது.
நன்றி: பிபிசி