பாத்ரூமில் பாடுவது ஏன்?


iStock/Orbon Alija


ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி

பாத்ரூமில் பாடல்கள் பாடுவது ஏன்?

பொதுவாக பாத்ரூம்கள் டைல்ஸ்களுடன் அமைக்கப்படுகின்றன. அங்கு தண்ணீர் பக்கெட்டில் நிறையும் ஓசையே அருவியின் ஒலிபோல கேட்கும். எனவே பாடல்களின் ஒலியை அதிகப்படுத்தி காட்டும். இது பாத்ரூம் அமைப்புக்கான விளக்கம்.

ஏன் பாத்ரூமில் பாடுகிறார்கள். அது தனியான இடம். உங்களுக்கு அது ரிலாக்சான அனுபவத்தைத் தருகிறது. இந்த நேரத்தில் மூளையில் டோபமைன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால்தான் குளிக்கும்போது சார்லி உட்பட பலரும் தட்டோடு குழலாட ஆட , ஆட என ஆடிப்பாடி குளத்திலும், அந்த வாய்ப்பு இல்லாதவர்கள் லிரில் சோப்பு போட்டு ஷவரிலும் குளித்து மகிழ்கிறார்கள். அதற்காக அடுத்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் இவர்களென நினைத்து விடாதீர்கள். ஜாலியாக பாடுகிறார்கள். உணர்ச்சியை வெளிப்படுத்துவதுதான் இங்கு முக்கியம்.

நன்றி: மென்டல் ஃபிளாஸ்




பிரபலமான இடுகைகள்