யூதர்கள் தொப்பி அணியக்கூடாது!





A man wearing a Jewish kippah skullcap with the flags of Germany and Israel.



ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அவர்களை அடையாளம் காட்டும் தொப்பியை அணியவேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


யூதர்களுக்கு எதிரான தாக்குதல் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் இந்த விகிதம் 20 சதவீதமாக உள்ளது. எனவே யூதர்கள் பெரும்பாலான நேரங்கள் தங்கள் தொப்பியை அணியாமல் இருப்பது நல்லது என அரசு கமிஷனர் ஃபிளெக்ஸ் கிளெய்ன் கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளார்.


ஐரோப்பிய நாடுகளில் யூதர்களுக்கு எதிரான வன்முறை 89 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கருத்துக்கு 85 பேர் தீவிரமான பிரச்னை என கருத்து தெரிவித்துள்ளனர். ஜெர்மனியில் 2017 ஆம் ஆண்டு 37 ஆக இருந்த இந்த யூத தாக்குதல், 62 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அரசு கமிஷனரின் கருத்தை ஜெர்மனிக்கான அமெரிக்க தூதர் கடுமையான விமர்சனம் செய்துள்ளார். யூதர்களின் தொப்பியை அணிவது பிரச்னையா? அப்படியெனில் அந்த தொப்பியை நண்பர்களிடமிருந்து வாங்கி அணிந்து கொள்ளுங்கள் என்று டிவிட்டரில் கூறியுள்ளார்.


அரசு யூதர்களுக்கு எதிரான பிரச்னைகளை இப்போதேனும் உணர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எங்களது எண்ணம் என்று கூறியுள்ளார் யூதர்களின் மத்திய கமிட்டி தலைவர் ஜோசப் ஸூஸ்டர்.

- தி கார்டியன்






பிரபலமான இடுகைகள்