தடுப்பூசி இழப்பீடு தருகிறார்களா?






தடுப்பூசிகள் நல்லது என பல்வேறு அமைப்புகள் சொன்னாலும் அமெரிக்காவில் தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள், மரணத்திற்கான இழப்பீட்டை அரசு வழங்கி வருகிறது. ஆயிரமோ, லட்சமோ அல்ல கோடிகளில்..


இதுவரையில் 4 பில்லியன் டாலர்களுக்கு மேல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க அரசு இழப்பீட்டை வழங்கியுள்ளது. அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கைப்படி, 2013-17 ஆண்டுகளில் மட்டுமே 229 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது அரசு. தோராய இழப்பீட்டுத்தொகை 4, 30,000 டாலர்கள்.

இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தடுப்பூசி அவசியம் என்று சொல்லும்போது அதற்கு எதிராக இழப்பீட்டு அமைப்பையும் அரசு நடத்தி வருவதோடு, இழப்பீட்டையும் வழங்கிவருவது மக்களுக்கு தடுப்பூசி மீதான சந்தேகத்தையும் ஏற்படுத்தாதா?


தடுப்பூசிகளைத் தயாரிப்பது தனியார் மருந்து நிறுவனங்கள்தான். ஆனால் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு இழப்பீடு அளிப்பது அமெரிக்க அரசு. இதனால் மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் வீணாகிறது. லாபம் தனியார் நிறுவனங்களுக்கு, நஷ்டம் மக்களுக்கு எனும் லாபமுறையை அமெரிக்க அரசு வணிக நிறுவனங்களோடு கைகோர்த்து நடைமுறைப்படுத்துகிறது. இழப்பீடு குறித்து தேடினால் கூகுளில் தேசிய இழப்பீட்டு தகவல் மையத்தின் தகவல்தான் முதலில் வருகிறது. இது தடுப்பூசிக்கு எதிரான அமைப்பாக செயல்படுகிறது.

1988 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் தடுப்பூசிக்கு எதிரான இழப்பீட்டு ஆணையம் செயல்பட்டு வருகிறது.  1970 ஆம் ஆண்டு அனிதா ரேய்ஸ் என்ற குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. சில மணிநேரத்திலேயே அவரின் கால் செயலிழந்துபோனது. மருந்தை வழங்கிய யெத் லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் மீது அனிதா ரேய்ஸின் தந்தை வழக்குத் தொடர்ந்தார். இரண்டு லட்சம் டாலர்கள் இதற்கு இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


தடுப்பூசி இடாததால் ஏற்படும் பாதிப்புகளை விட அதனைப் போட்டுக்கொண்டதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகத் தொடங்கியது அமெரிக்காவில்தான். 1978 - 84 காலகட்டத்தில் மட்டும் இழப்பீடாக வழங்க கோரிய தொகையின் அளவு 10- 47 மில்லியன் டாலர்களாக உயர்ந்தன.

அரசு தடுப்பூசி சரியா? தவறா ? என உறுதியாக முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. தடுப்பூசி மருந்துகளை அரசு அங்கீகரித்தாலும் தடுப்பூசி மருந்தால் பாதிப்பு ஏற்படும் போது மருந்து நிறுவனங்கள் அதனை ஏற்கும்படி செய்யவேண்டும். இல்லையெனில் மக்களின் பணம்தான் வீணாக செலவாகும்.

நன்றி: அட்லாண்டிக் இதழ்