இடுகைகள்

அறி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாசிப்பை நேசிப்போம்!

படம்
  வாசிப்பை நேசிப்போம்! தினசரி வாசிப்பது என்பது அவ்வளவு எளிதாக நம் மனதில் படியாது. அதற்கு காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு ஆகிய நேரங்களில் நீங்கள் தனியாக சாப்பிடும்படி நேர்ந்தால் நூல்களை வாசிக்கலாம். நெருக்கடியான வேலைகளுக்கு இடையே பத்து நிமிடங்கள் பிரேக் எடுத்து வாசிப்பதைத் தொடர்ந்தால் விரைவில் நீங்கள் வேகமாக வாசிக்கத் தொடங்கிவிட முடியும்.  2. எங்கு போனாலும் புத்தகங்களை எடுத்துச்செல்லுங்கள். புத்தகம் என்றல்ல கிண்டில் போன்ற இபுக் ரீடர்களை கைவசம் எடுத்துச் செல்லுங்கள். யாரையேனும் சந்திக்க காத்திருக்கும்போது கூட வாசிக்கலாமே!.  3. புத்தகம் பற்றிய செய்திகளை வழியாக அறிகிறீர்களா? ஜிமெயில் கணக்கு ஒன்றைத் தொடங்கி அச்செய்தியை இம்முகவரிக்கு அனுப்புங்கள். இப்படி அனுப்பி வைத்தால் நீங்கள் அடுத்தடுத்து வாசிப்பதற்கான பட்டியல் தயார். பின்னர் படித்து முடித்த செய்தியையும் இதில் பதிவு செய்யலாம்.  4. முடிந்தளவு டிஜிட்டல் பொருட்களைத் தவிர்த்துவிட்டு படிக்கத் தொடங்குங்கள். அப்போதுதான் எந்த அலைபாய்தலுமின்றி புத்தகங்களை நிதானமாக வாசிக்க முடியும். குழந்தைகள் இருந்தால், அவர்களுடன் விளையாடியபடி வாசிக்கக் கற்றுக்கொட

டாப் 5 வானியல் அமைப்புகள்

படம்
  டாப் 5 வானியல் அமைப்புகள் ஜோதிர்வித்யா பரிசன்ஸ்தா (Jyotirvidya Parisanstha (JVP)) –  ஜோதிர்வித்யா பரிசன்ஸ்தா, மகாராஷ்டிராவின்  புனேவில் அமைந்துள்ள  அமைப்பு. 1944 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பரிசன்ஸ்தா, வானியலை மக்களிடையே பிரசாரம் செய்வதை லட்சியமாகக் கொண்டுள்ளது. http://jvp.org.in/  அஸ்ட்ரானாமிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா (Astronomical Society of India (ASI) ) 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வானியல் ஆர்வலர்களுக்கான அமைப்பு. நாடு முழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் கூட்டத்தில் வானியலின் முன்னேற்றங்கள், ஆராய்ச்சிகள் விவாதிக்கப்படுகின்றன.  TIFR, IISER, IISc, IIT, ISRO, PRL , IIAP உள்ளிட்ட அரசு அமைப்புகளில் பணிபுரியும் ஆய்வாளர்களும் வானியல் சொசைட்டியில் முக்கியமான அங்கம்.  அசோஷியேசன் ஆஃப் பெங்களூரு அமெச்சூர் அஸ்ட்ரானமர்ஸ் (ABAA)  பெங்களூருவைச்  சேர்ந்த இந்த அமைப்பு, 1976 ஆம் ஆண்டு உருவானது. இந்த அமைப்பு, தொலைநோக்கி குறித்த பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. வான் இயற்பியலில் ஆர்வம் கொண்ட தன்னார்வலர்களின் சங்கம் இது. வாரம்தோறும் ஞாயிறு அன்று சந்