இடுகைகள்

திலீப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாவை எரித்துக்கொன்ற நான்கு நபர்களை பழிவாங்க முயலும் பரதநாட்டிய மாஸ்டர்!

படம்
  செஸ்  திலீப், பாவனா, சலீம்குமார், அசோகன் விஜய் கிருஷ்ணன் பரதநாட்டியம் சொல்லித்தரும் பள்ளி நடத்துகிறார். அவரது அம்மா, அவனுக்கு அதை கற்பித்திருக்கிறார். அம்மா, காவல்துறையில் வேலை செய்யும் ஒருவரை விரும்பி இணைந்து வாழ்கிறார். திருமணம் செய்துகொள்வதில்லை. இது விஜய்க்கு வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் அவன் அம்மா வருத்தப்படுவாள் என எதையும் கூறுவதில்லை. அவனது பள்ளிக்கு பாவனா கல்லூரி மாணவி வருகிறாள். கல்லூரி ஆண்டுவிழாவில் ஆடும் பரதநாட்டிய பயிற்சிக்காக விஜய்யின் உதவியை நாடுகிறாள்.  அங்கு அவனிடம் பயிற்சி செய்து ஆடி கல்லூரியில் முதல் பரிசு வெல்கிறாள். அதோடு அவளுக்கு விஜய்யை பிடித்திருக்கிறது. இருவரும் சாதி, மதம், அந்தஸ்து பார்க்காமல் காதலிக்கிறார்கள். ஆனால் நாயகியின் தாத்தாவுக்கு அதெல்லாம் குறையாக தெரிகிறது. குறிப்பாக, விஜய்யின் அப்பா யாரென்று கேட்க அவனால் உண்மையைக் கூறமுடியவில்லை. இப்படியாக காதலி, கல்யாணம் என இரண்டுமே கனவு போல கலைந்து போகிறது.   படம் காதலைப் பற்றியதல்ல. பழிவாங்குவதைப் பற்றியது. விஜய்யின் அப்பா, மரணப்படுக்கையில் இருக்கும்போது அவனையும், மனைவியையும் அழைத்து என...

மீசையை முறுக்கி சவால் விட்டுத் திருடும் மாதவன்! - மீச மாதவன், கிரேஸி கோபாலன் - கேரக்டர் புதுசு

படம்
  மீச மாதவன் - மலையாளம் மீச மாதவன் - மலையாளம் மீச மாதவன் மலையாளம் திலீப் (மாதவன் நாயர்)   கிரேஸி கோபாலன், மீசை மாதவன் என இரு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டிலும் திலீப் நடித்தார் என்பதல்ல. இரண்டு படங்களிலும் நாயகன் திருடன். ஆனால் அப்படி மாறியதற்கு இறந்தகாலத்தில் நெகிழச்செய்யும் ஃபிளாஷ்பேக் உண்டு. அதை நேர்த்தியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.   மாதவன் நாயர். இந்தப் பெயரைச் சொன்னாலே ஊரில் உள்ள அனைவருக்குமே அவர் திருடன் என்பது தெரியும். மலையாளத்தில் கள்ளன் என்கிறார்கள்.   மீசை மாதவன் என்பதுதான் அவன் பட்டப்பெயர். ஊர் மக்கள் யாராவது அவனிடம் லொள்ளு பேசி கோபம் வந்து மீசை முறுக்கினால் அன்று, சம்பந்தப்பட்டவர் வீட்டுக்குள் முக்கியமான ஏதாவது ஒரு பொருளேனும் களவு போகும். அதை தடுக்கவே முடியாது. அந்தளவு திருட்டில் ஜெகஜாலன். திருட்டில் ரிடையர்டாகி கால் ஆணி வந்துவிட்ட முன்னாள் திருடரிடம் வித்தை கற்ற ஆள், மாதவன். ஊருக்குள் புதிய பொருட்களை வாங்க முடியாத சிலர், மீசை மாதவனிடம் எனக்கு இந்த பொருட்கள் வேண்டுமென்று சொல்லி, ஆர்டர் செய்து காசு கொடுத்து வாங்குவதும் உண்டு. மாதவனை...

மகளின் திருமணத்தை நடத்த பள்ளி ஆசிரியர் படும் பாடுகள் - விஷ்மயம் - இன்னொசன்ட், திலீப், ஶ்ரீதுர்கா

படம்
  விஷ்மயம் திலீப் , ஶ்ரீதுர்கா, இன்னொசன்ட், ஜெகதி ஶ்ரீகுமார் ஒரு பள்ளி ஆசிரியர், தனது கடன்களுக்கக நிலங்களை, அருகிலுள்ள குரூப்பு ஒருவருக்கு விற்கிறார். அவர் நிலத்தை வாங்கியதோடு சுற்றிலும் உள்ள மனிதர்களின் வீட்டிலுள்ள பொருட்களை திருடர்களை வைத்து திருடி வைத்து விற்று பணக்காரராக மாறுகிறார். அவரை எப்படி சுற்றிலும் உள்ள மக்கள் கண்டுபிடித்து திருத்துகிறார்கள் என்பதே கதை. படத்தில் முக்கியமான   மகேஷ் நாராயணன் என்ற ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் பாத்திரத்தில் இன்னொசன்ட் நடித்துள்ளார். தனது மறைந்துபோன மனைவியை சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு நினைத்துப் பார்த்து சந்தோஷப்படுவதும், அவளது நினைவாக மகளுக்கு பிரச்னை இல்லாத இடத்தில் மணம் செய்து வைப்பதுமான கனவு அவருக்கு இருக்கிறது. அவர் மகளுக்கு ஏழு பவுன் தங்கத்தை சேர்த்து வைத்திருக்கிறார். அதை குரூப் திருடி வைத்து திருமணத்தை தடுக்கிறார். அதை ஆசிரியரும், அவரது மகன் தினகரன், ஊர் மக்களில் அவரது நண்பர்களும் சேர்ந்து திருடி எடுத்து வர திட்டமிடுகிறார்கள். திருடப்போன இடத்தில் தற்கொலை செய்துகொள்ள முயலும் ருக்மணி என்ற பெண்ணையும் பார்த்து, தடுத்து ...

அப்பாவின் பேராசையை ஒழித்து நல்லவராக்கும் தோமா! - சவுண்ட் தோமா - திலீப், நமீதா பிரமோத்

படம்
  சவுண்ட் தோமா - திலீப்புடன்(தோமா) சாய்குமார்(பௌலோ) சவுண்ட் தோமா  - ஶ்ரீலஷ்மியுடன் தோமா சவுண்ட் தோமா திலீப், நமீதா பிரமோத், முகேஷ், சுரேஷ்   வெஞ்சரமூடு   வட்டிக்கு பணம் கொடுக்கும், ஊரில் நிறைய தொழில்களை நடத்தும் தொழிலதிபருக்கு மூன்றாவதாக மகன் பிறக்கிறான். பிரசவத்தில் அம்மா, காலமாகிறார். மகனுக்கு தொண்டையில் பிரச்னை உள்ளது. அதற்கு அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், மனைவி இறந்துவிட்டாள். அந்த இழப்போடு ஏராளமான பணத்தை இப்போது   பிறந்த குழந்தைக்கு செலவிடவேண்டுமா என தந்தை நினைக்கிறார். இதனால் அந்த குழந்தைக்கு உதடு பிளவுபட்டு, வளரும்போது குரல் சரியாக வருவதில்லை. குட்டி என்றால் குண்ணி என சத்தம் வருகிறது. குட்டன் பிள்ளை என அவர் சொன்னால் குண்டன் பிள்ளை என்றுதான் சத்தம் வெளியே கேட்கிறது. இதனால் அவருக்கு ஊரில் சவுண்ட் தோமா என பெயரே உருவாகிறது. வட்டிக்கடைக்காரருக்கு மூன்று மகன்கள் (மத்தாய், ஜாய் குட்டி, தோமா) உள்ளனர். அவர்களால் தனக்கு என்ன பிரயோஜனம் என்று பார்த்துத்தான் செலவு செய்கிறார். உண்மையான பாசத்தை அவர் உணர்ந்தாரா, தோமா   தனது வாழ்...

தலைமையாசிரியரின் உண்மையான மகனாக மாறும் குற்றவாளியின் மகன்! திலக்கம் - திலீப், காவ்யா மாதவன்

படம்
  திலக்கம் திலீப், காவ்யா மாதவன், நெடுமுடி வேணு, ஹரிஶ்ரீ அசோகன், கொச்சி ஹனீபா கிராமத்திலுள்ள தலைமை ஆசிரியர். சிறுவயதில் தொலைந்து போன உண்ணி என்ற பெயருடைய மகனை பதினேழு ஆண்டுகளாக தேடுகிறார். நாகப்பட்டினத்தில் கிடைக்கும் ஒருவர், தலைமையாசிரியர்   தனது மகன் என கூறி உண்ணியை வரைந்த விதமாகவே இருக்கிறார். ஆனால் சித்த சுவாதீனம் இல்லை. அவரை கிராமத்திற்கு கூட்டி வந்து சிகிச்சை அளிக்க முயல்கிறார். உண்மையில் அவர் கூட்டி வந்த நபர் உண்ணியா இல்லையா, நினைவு திரும்பியதும் எதனால் அவர் அப்படி ஆனார் என தகவல்களை கூற முடிந்ததா என்பதே கதை. ஆற்றுக் கரையோரம், திலீப், இறந்துபோனவருக்கு பிண்டம் வைக்கிறான். அதை ஆற்றில் கரைத்துவிட்டு எழும்போது படிக்கட்டின் மேலே வயதானவர் இளைஞர் ஒருவரோடு நிற்கிறார். அவனைக் கூர்மையாக பார்த்துக்கொண்டே இருக்கிறார். காட்சிகள் பின்னோக்கி நகர்கின்றன. தலைமையாசிரியருக்கு மகள் ஒருத்தி, மகன் ஒருவன். இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. வரதட்சணை பிரச்னை மாப்பிள்ளையோடு இருக்கிறது. அதெல்லாம் தாண்டி அவரது வம்சத்தை மகன் உண்ணி நடத்திக்கொண்டு போவான் என மகனைப் பற்றி நாளிதழில் பதினேழு ஆண்டுக...

ஆலன்சேரி தம்பிரான்மார்களின் நட்பும், பிணக்கும்! - ஆலன்சேரி தம்பிராக்கள் - நெடுமுடி வேணு, திலீப்

படம்
  ஆலன்சேரி தம்பிராக்கள் - மலையாளம் - திலீப் ஆலன்சேரி தம்பிராக்கள் -மலையாளம் - திலீப் ஆலன்சேரி தம்பிராக்கள் திலீப், நெடுமுடி வேணு, ஹரிஶ்ரீ அசோகன் ஆலன்சேரி என்ற கிராமம். அங்கு சட்டங்களைப் போடுவது இரண்டு தம்பிரான்மார்கள். ஒருவர் சங்கீதம் பாடும் பாகவதர். அடுத்து, களறி சொல்லிக் கொடுக்கும் சாத்தன் குருக்கள். இருவருமே நண்பர்கள். ஒருவர் சொன்னால் இன்னொருவர் சரி என்று கேட்டுக்கொள்ளும் அளவுக்கு இருவருக்கும் புரிந்துணர்வும் நெருக்கமும் இருக்கிறது. இருவரும் தங்களுக்குத் தெரிந்த சங்கீதம், களறி பயட்டு என இரண்டையும்   தங்களது மகன்களுக்கு மட்டும் சொல்லித் தந்து வருகின்றனர். இவர்களின் நட்பை பார்த்து ஊரே வியக்கிறது. ஊர் முழுக்க தம்பிரான்மார்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறது. அதேசமயம். பாகவதருக்கு பிரச்னை என்றால் சாத்தன் குருக்கள் களறி கற்ற ஆட்களோடு அங்கு வந்து அடி பின்னிவிடுவார். அதேபோல் சாத்தன் குருக்களுக்கு சிக்கல் என்றால் பாகவதர் அங்கு செல்வார். தனித்தனி வீடுகளில் தத்தம் மகன்களோடு வாழ்ந்து வந்தாலும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத நட்பு தம்பிரான்களுக்குள் உள்ளது. அதை குலைப்பது போல ஒரு ...

இரு குடும்பங்களின் பகையைத் தீர்க்கும் காரியஸ்தன் - காரியஸ்தன் - திலீப், அகிலா சசிதரன், ஹரிஶ்ரீ அசோகன்

படம்
  காரியஸ்தன் - மலையாளம் -திலீப் அகிலா சசிதரன் - திலீப் - காரியஸ்தன் காரியஸ்தன் திலீப், அகிலா சசிதரன், சுரேஷ் வெஞ்சரமூடு, ஹரிஶ்ரீ அசோகன் நட்பாக பழகிய இரு குடும்பங்கள் பிரிந்துகிடக்கின்றன. குடும்பங்கள் பிரிவதற்கு காரணமான ஒருவரே பின்னாளில் அதை ஒன்றாக சேர்க்க முயல்கின்றார் ஒருவர். அவ்வளவே கதை. வடக்கு, கிழக்கு என இரு குடும்பங்கள் முதலில் சுவர்களே இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன. இரண்டு குடும்பங்களுமே மூடநம்பிக்கை கொண்ட ஆணாதிக்க வாதி குடும்பங்கள்தான். தங்கள் குடும்பத்திற்குள் திருமண உறவு செய்ய நினைக்கிறார்கள். ஆனால் கிழக்கு குடும்பத்தைச் சேர்ந்த மூத்தபிள்ளைக்கு, ஏற்கெனவே ஒரு காதல் இருக்கிறது. ஆனால்,அவரது அப்பா சொன்னதால் அவரது பேச்சையும் உடனே தட்டமுடியவில்லை. டௌரி பணமாக பத்து லட்சத்தையும் பெண் வீட்டார் கொடுத்துவிடுகிறார்கள். இந்த நிலையில் ராஜன் என்ற கல்யாண மாப்பிள்ளை, சுசீலன் என்பவரிடம் டௌரிப் பணத்தைக் கொடுத்துவிட்டு, வடக்கு குடும்பத்திடம் பணத்தை சேர்க்குமாறு சொல்லிவிடுகிறார். பிறகு, கல்யாண வீட்டிலிருந்து தப்பி, தனது காதலியோடு ரயிலில் ஏறப்போகிறார். இவர்களது காதலை அறிந்து ரா...

தான் வளர்த்த நாய் மூலம் பால்ய கால காதலியை பழிவாங்கும் நாயகன் - ரிங் மாஸ்டர் - ரஃபி

படம்
  ரிங் மாஸ்டர் - திலீப், கீர்த்திசுரேஷ், ஹனிரோஸ் ரிங் மாஸ்டர்   ரிங் மாஸ்டர் இயக்கம் – ரஃபி திலீப், ஹனிரோஸ், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் வெஞ்சரமூடு சர்க்கஸ் கூடாரத்தில் வளர்க்கப்பட்ட அப்பாவுக்கு பிடிக்காத பிள்ளையான பிரின்ஸ், நாய் மருத்துவமனையில் தனது நண்பர் முத்துவுடன் வேலை செய்கிறார். வெளிநாடு சென்று வேலை தேடிக்கொள்ள நினைப்பவருக்கு   கிடைப்பதோ, பணக்கார வீடுகளில் நாய் பராமரிப்பு வேலைதான். அந்த வேலையின் மூலமே அவருக்கு நினைத்துப் பார்க்க முடியாத வாய்ப்புகள் கிடைக்கின்றன அப்போது, கடந்தகாலத்தில் பிரின்ஸைப் பயன்படுத்திக்கொண்டு காதலிப்பதாக நடித்து சினிமாவில் உயர்ந்த பால்ய கால தோழியையும் சந்திக்கிறார். இருவருக்குள்ளும் உறவு உருவானதா, பிரின்ஸ் வன்மம் கூடி பழிவாங்கினாரா என்பதே கதை.   படம் முழுக்க   காமெடிதான். எனவே அதிகம் லாஜிக் பார்த்தால் ஜனப் பிரியனின் நகைச்சுவையை ரசிக்க முடியாமல் போய்விடும். எனவே, ஜாலியாக ரசியுங்கள். லிசா என்ற நாயைப் பார்த்துக்கொள்ளும் வேலை பிரின்சுக்கு கிடைக்கிறது. அதை சரியாக செய்தால், அந்த நாயின் உரிமையாளர் மூலம் வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்...

ஸ்பெயின் நாட்டு ராணியின் நெக்லஸ், இளம்பெண்ணிடம் சிக்கிக்கொள்ள, அதை எடுக்க முயலும் திருடன் - வேட்டம்

படம்
  வேட்டம் -மலையாளம் இயக்கம் பிரியதர்ஷன் வேட்டம் - திலீப், பாவ்னா பானி வேட்டம் மலையாளம் திலீப், பாவ்னா பானி, ஜெகதி, இன்னொசன்ட், ஹனீபா, கலாபவன் மணி கோபாலகிருஷ்ணன் விமானத்தில் பயணிக்கிறார். கூடவே ஒரு பொம்மை ஒன்றை கையில் வைத்திருக்கிறார். அதில் ஸ்பெயின் நாட்டு ராணியின் நெக்லஸ் உள்ளது. அழகான கற்கள் பதித்த மாலை. அது அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டு இந்தியாவிற்குள் வந்துவிட்டது. அதை இந்தியாவில் உள்ள காவல்துறையினரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கோபு, நெக்லஸை வீணா என்ற பெண்ணின் பேக்கில் வைத்துவிடுகிறார். தேவையான நேரத்தில் அதை எடுக்க முடியாமல் அந்த பெண்ணுடன் சேர்ந்து ரயிலில் பயணிக்கிறார். அந்த அனுபவங்களில் அவர்களுக்குள் காதல் வர, என்னவானது அந்த காதல், வீணா சென்றுகொண்டிருக்கும் வேலை சரியாக முடிந்ததா என்பதே மீதிக்கதை படத்தில் பாவ்னா ரவி அழகாக இருக்கிறார். இந்திப் பெண்ணை மலையாளப் பெண்ணாக காட்ட முயன்றிருகிறார்கள். எனவே, பாவாடை தாவணி அணிந்தே நிறைய காட்சிகளில் வருகிறார். ஒரு பாடலில் மட்டும் தனக்கு சிறப்பாக நடனமாடத் தெரியும் என நிரூபித்துக் காட்டுகிறார். வீணா, மலையாள பிராமணக் குடும்ப...