ஆலன்சேரி தம்பிரான்மார்களின் நட்பும், பிணக்கும்! - ஆலன்சேரி தம்பிராக்கள் - நெடுமுடி வேணு, திலீப்

 




ஆலன்சேரி தம்பிராக்கள் - மலையாளம் - திலீப்


ஆலன்சேரி தம்பிராக்கள் -மலையாளம் - திலீப்



ஆலன்சேரி தம்பிராக்கள்

திலீப், நெடுமுடி வேணு, ஹரிஶ்ரீ அசோகன்


ஆலன்சேரி என்ற கிராமம். அங்கு சட்டங்களைப் போடுவது இரண்டு தம்பிரான்மார்கள். ஒருவர் சங்கீதம் பாடும் பாகவதர். அடுத்து, களறி சொல்லிக் கொடுக்கும் சாத்தன் குருக்கள்.

இருவருமே நண்பர்கள். ஒருவர் சொன்னால் இன்னொருவர் சரி என்று கேட்டுக்கொள்ளும் அளவுக்கு இருவருக்கும் புரிந்துணர்வும் நெருக்கமும் இருக்கிறது. இருவரும் தங்களுக்குத் தெரிந்த சங்கீதம், களறி பயட்டு என இரண்டையும்  தங்களது மகன்களுக்கு மட்டும் சொல்லித் தந்து வருகின்றனர்.

இவர்களின் நட்பை பார்த்து ஊரே வியக்கிறது. ஊர் முழுக்க தம்பிரான்மார்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறது. அதேசமயம். பாகவதருக்கு பிரச்னை என்றால் சாத்தன் குருக்கள் களறி கற்ற ஆட்களோடு அங்கு வந்து அடி பின்னிவிடுவார். அதேபோல் சாத்தன் குருக்களுக்கு சிக்கல் என்றால் பாகவதர் அங்கு செல்வார்.

தனித்தனி வீடுகளில் தத்தம் மகன்களோடு வாழ்ந்து வந்தாலும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத நட்பு தம்பிரான்களுக்குள் உள்ளது. அதை குலைப்பது போல ஒரு பெண்ணொருத்தி வருகிறாள். வயதானவர், இளம்பெண் என இருவர் தம்பிரான்மார்களின் தோப்பு வீட்டில் வாடகைக்கு வருகிறார்கள். வயதானவரை, ராணுவத்தில் வேலை செய்வர்; தாத்தா என கூறுகிறாள். அமைதியைத் தேடி இங்கு வந்ததாக கூறுகிறாள். உண்மையில் அவர்கள் யார் என்பதே கதையில் முக்கியமான பகுதி.

திலீப் பத்து பாத்திரங்களில் ஒருவராக வருகிறார். மற்றபடி அதிகளவு நகைச்சுவைக்கு இடமில்லை. தம்பிரான்மார்களே அதிக காட்சிகளை பிடித்துக்கொள்கிறார்கள். இதனால் திலீப்பிற்கு பாடல்காட்சிகள் போனசாக கிடைக்கின்றன.

கதையில் நாயகன் பாகவதராக வரும் நெடுமுடிவேணுதான். அவரது இறந்த காலத்தில் நடைபெறும் ஒரு சம்பவத்தின் பாதிப்புதான் அவரை நிகழ்காலத்தில் சங்கடப்படுத்துகிறது. ஊரார் அவரைப் பற்றிய வதந்திகளை பேசி வருகிறார்கள். அதை சரிசெய்ய அவர் முயல்கிறாரா இல்லையா என்பதே இறுதிக்காட்சி.

உண்மையை நாம் விரும்பாவிட்டாலும், நிகழ்காலத்தில் அதன் தொடர்ச்சி உருவாகி வரும்போது, உறவுகளை எப்படி சிதைக்கிறது, மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதே படம் சொல்ல வரும் செய்தி.

குற்றவுணர்ச்சி ஒருவரை எப்படி வாட்டி, அவரின் உண்மையான இயல்பை வெளியே கொண்டு வருகிறது என்பதை நெடுமுடிவேணு சிறப்பாக நடித்து வெளிப்படுத்தியிருக்கிறார்.

கோமாளிமேடை டீம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்