பேராசை பூதம் 2 - ஹிண்டன்பர்க் அறிக்கையின் தமிழாக்கம் - மின்னூல் வெளியீடு
இன்று இந்தியாவில் மத்திய அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை பலம் வாய்ந்த தொழில் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. அரசின் கொள்கை மாற்றங்களை பெருநிறுவனங்கள் முடிவு செய்து அறிவிக்கச்செய்து பயன் பெறுகின்றன. நாட்டின் பிரதமர் தொழில்நிறுவனங்களோடு நெருக்கமாக இருப்பது, அணுக்க முதலாளித்துவம் என்று கூறப்படுகிறது. இப்படி இருப்பதால் அவருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் நன்மை உண்டு. வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் இருக்காது. தொழிலதிபரின் வாராக்கடன்களுக்கு, வரிச்சுமையை சுமக்க வேண்டியது மக்கள்தான்.
அதானி குழுமம், பல்லாண்டுகளாக திட்டமிட்டு செய்த மோசடிகளை பேராசை பூதம் 3 நூல் விவரிக்கிறது. இதைப் படிக்கும்போது இப்படியெல்லாம் யோசித்து நிதி மோசடிகளை செய்ய முடியுமா என பிரமித்து அதிர்ச்சியடைவீர்கள். அந்தளவு நேர்த்தியாக திட்டமிட்டு இந்தியாவை மட்டுமல்ல வரி கட்டும் அத்தனை குடிமக்களையும் ஏமாற்றியுள்ளது அதானி குழுமம். மோசடிக்கு கௌதம் அதானியின் மொத்த உறுப்பினர்களுமே காய்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
பங்குச்சந்தை நிதியை மடைமாற்றி தனது இஷ்டம்போல நிறுவனத்தின் மதிப்பை மாற்றிக் காண்பித்து அதை அடையாளம் கண்ட ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு லஞ்சம் கொடுத்து..... அதானி குழுமம், மோசமான பெருநிறுவன கலாசாரத்தின் அடையாளமாகி உள்ளது.
இந்த நூல், ஹிண்டன்பர்க் அமைப்பு வெளியிட்ட ஆங்கில அறிக்கையின் தமிழாக்கம். நூல் உங்களுக்கு பிடித்திருந்தால், பொருளாதாரம் சார்ந்த ஆர்வம் உடைய நண்பர்களுக்கும் பரிந்துரையுங்கள்.
நூலை வாசிக்க...
https://www.amazon.in/dp/B0BY6C8CN7
நன்றி
திரு. இரா.முருகானந்தம்
கருத்துகள்
கருத்துரையிடுக