''கொலைகளை செய்யாமல் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை''
1928ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சிகாகோவின் புறநகரான
லிங்கன்வுட்டில் பிறந்தார். அப்பா, தனியார் உருக்காலையில் வேலை செய்து வந்தார். வில்லியமிற்கு
செக்ஸ் என்பது மகா பாவம் என சொல்லி வளர்த்தனர். செக்ஸ் வைத்துக்கொண்டால் நோய் வரும்
என கூறினார்கள். பிறரது வீட்டுக்குள் பிறந்து, அங்கு வாழும் பெண்களின் ஜட்டி, பேன்டீசை
திருடுவது வில்லியமிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏறத்தாழ பாலுறவு கொள்வது போன்ற சந்தோஷம்.
1942ஆம் ஆண்டு வில்லியமிற்கு பதிமூன்று வயது. அப்போதே
குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்துச் சென்று காவல்துறையால் கைதானார்.
வில்லியமின் பெற்றோருக்கு காவல்துறை தகவல் அளிக்க, அவர்கள் பதற்றத்துடன் அங்கு வந்து
சேர்ந்தனர். அப்போதே பதினொரு கொள்ளைகளை வில்லியம் செய்திருந்தான். ரைபிள், நான்கு பிஸ்டல்கள்
என திருடி வைத்திருந்தான்.
பெற்றோர் தம் செல்வாக்கைப் பயன்படுத்த வில்லியம் மீது
வழக்கு பதியப்பட வில்லை. இந்தியானாவில் உள்ள பள்ளியொன்றில் பதினொரு மாதங்கள் இருந்த
வில்லியம், பின்னர் ஊருக்குத் திரும்பினார். வில்லியம் பெண்களின் உள்ளாடைகளை மட்டும்
திருட வில்லை. அதை வாய்ப்பு கிடைக்கும்போது அணிந்தும் பார்த்தார். தனக்குப் பிடித்தமான
உள்ளாடைத் திருட்டை வில்லியம் கைவிடாமல் பார்த்துக்கொண்டார்.
ஒருமுறை வீடு புகுந்து திருடிய வழக்கில் பதினெட்டு
மாதங்கள் தண்டனை அனுபவிக்கும்படி நேரிட்டது. 1945ஆம் ஆண்டு ஜோஸபின் என்ற பெண்மணியின்
வீட்டிற்குள் கொள்ளையடிக்க புகுந்தார். அவரின் தொண்டையை அறுத்தவர், ஏராளமான முறை கத்தியால்
குத்தினார். கொலை செய்த இடத்தில் இரண்டு மணிநேரம் இருந்தவர், கொலை உண்டாக்கிய பரவசத்தில்
பலமுறை பாலுறவு இன்பத்தை அனுபவித்தார்.
நான்கு மாதங்களுக்கு பிறகு ராணுவ செவிலியர் ஒருவரை வில்லியம் தாக்கினார். இவரது வீட்டில் தனது
கைரேகைகளை விட்டுவிட்டு சென்றிருந்தார். ஆனால் அப்போதும் காவல்துறை வில்லியமை வேகமாக
பிடிக்க முயற்சி செய்யவில்லை. 1945ஆம் ஆண்டு,
ப்ரௌன் என்ற பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்தார். பெண் பாத்ரூமில் இருந்தார். அங்கே நுழைந்தபோது,
அந்த பெண் அலறினார். சத்தம் போடாதே என்பதை துப்பாக்கியால் அவரைப் பார்த்து சுட்டு சொன்னார்.
குற்றுயிராக தடுமாறியவரை கத்தி வைத்து பிணமாக்கினார். அங்கே வைத்தே காயங்களிலிருந்து
வெளியான ரத்த த்தைக் கழுவினார். பிணத்தை அங்கேயே கிடத்திவிட்டு, படுக்கையறையில் பெண்ணின்
லிப்ஸ்டிக்கால், ‘’அதிக கொலைகளை செய்வதற்கு முன்னர் என்னைப் பிடியுங்கள். என்னை என்னால் கட்டுப்படுத்த
முடியவில்லை’’ என்ற சுவரில் எழுதி வைத்திருந்தார்.
அடுத்து ஆறு வயது சிறுமியை கடத்தி, 20 ஆயிரம் டாலர்கள்
பணம் கேட்டார். பிறகு என்ன நினைத்தாரோ, சிறுமியை கழுத்தை நெரித்து கொன்றார். உடலை துண்டு
துண்டாக வெட்டி கழிவு நீர் குழாய் வழியாக எறிந்துவிட்டு சென்றார்.
பிறகு காவல்துறை வில்லியமை பிடித்தபோது அவர் தான் செய்த குற்றங்களை ஏற்கவில்லை.
தனது உடலுக்குள் உள்ள ஆளுமை பிறழ்வான பாத்திரம்தான் அதை செய்தது என்று சாதித்தார்.
பிறகு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக