தலைமையாசிரியரின் உண்மையான மகனாக மாறும் குற்றவாளியின் மகன்! திலக்கம் - திலீப், காவ்யா மாதவன்

 











திலக்கம்

திலீப், காவ்யா மாதவன், நெடுமுடி வேணு, ஹரிஶ்ரீ அசோகன், கொச்சி ஹனீபா

கிராமத்திலுள்ள தலைமை ஆசிரியர். சிறுவயதில் தொலைந்து போன உண்ணி என்ற பெயருடைய மகனை பதினேழு ஆண்டுகளாக தேடுகிறார். நாகப்பட்டினத்தில் கிடைக்கும் ஒருவர், தலைமையாசிரியர்  தனது மகன் என கூறி உண்ணியை வரைந்த விதமாகவே இருக்கிறார். ஆனால் சித்த சுவாதீனம் இல்லை. அவரை கிராமத்திற்கு கூட்டி வந்து சிகிச்சை அளிக்க முயல்கிறார். உண்மையில் அவர் கூட்டி வந்த நபர் உண்ணியா இல்லையா, நினைவு திரும்பியதும் எதனால் அவர் அப்படி ஆனார் என தகவல்களை கூற முடிந்ததா என்பதே கதை.

ஆற்றுக் கரையோரம், திலீப், இறந்துபோனவருக்கு பிண்டம் வைக்கிறான். அதை ஆற்றில் கரைத்துவிட்டு எழும்போது படிக்கட்டின் மேலே வயதானவர் இளைஞர் ஒருவரோடு நிற்கிறார். அவனைக் கூர்மையாக பார்த்துக்கொண்டே இருக்கிறார். காட்சிகள் பின்னோக்கி நகர்கின்றன.

தலைமையாசிரியருக்கு மகள் ஒருத்தி, மகன் ஒருவன். இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. வரதட்சணை பிரச்னை மாப்பிள்ளையோடு இருக்கிறது. அதெல்லாம் தாண்டி அவரது வம்சத்தை மகன் உண்ணி நடத்திக்கொண்டு போவான் என மகனைப் பற்றி நாளிதழில் பதினேழு ஆண்டுகளாக விளம்பரம் கொடுத்து வருகிறார். அப்போது விளம்பரத்தைப் பெறும் நபர், இனி சிறுவனின்  போட்டோ வேண்டாம். மகனுக்கு வயது இருபது  இருக்கும் என்றால் அடையாளங்களைச் சொல்லி ஓவியரை வைத்து படமாக வரைவோம். அதை வைத்து விளம்பரம் கொடுத்தால் மகன் திரும்ப கிடைப்பான் என ஐடியா கொடுக்கிறார். தலைமை ஆசிரியருக்கும் அது சரியென்று பட, அப்படியே முயற்சிக்கிறார்கள். அப்படித்தான் நாகபட்டினத்தில் மகன் உண்ணி இருப்பதாக தகவல் கிடைக்க அவனை கூட்டி வருகிறார்கள். சித்த சுவாதீனமில்லாத நிலையில் இருப்பவனை கூட்டி வந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.

அவன் காணாமல் போன அன்று, அவனோடு அம்முக்குட்டி என்ற இளம்பெண்ணின் அப்பாவும் காணாமல் போகிறார். அவரையும் தேடி வருகிறார்கள். உண்ணிக்கு சுயநினைவு திரும்பினால், தனது அப்பா பற்றிய நினைவுகள் கிடைக்கும் என அம்மு நினைக்கிறாள். அவளுக்கு உண்ணி மணம் செய்துகொள்ளும் முறை.  இதெல்லாம் தாண்டி அவள், தலைமை ஆசிரியர் உறவினர் என்பதால் அவர்கள் வீட்டில்தான் அதிகநேரம் இருப்பவள். உண்ணிக்கும், அம்முவுக்கும் இடையில் ஒரு நேசம் பூக்கிறது. ஆனால் அம்முவை மணம் செய்துகொள்ள ஊரில் உள்ள இன்னொரு இளைஞன் விரும்புகிறான். இவன், அவர்கள் குடும்பத்திற்கு பல்வேறு பொருளாதார உதவிகளை செய்து வருகிறான். அவனது நோக்கமே, அம்முவை கல்யாணம் செய்துகொள்வதுதான். உண்ணியின் வைத்தியத்திற்காக அம்மு அதிகநேரம் செலவு செய்வது அவனுக்கு பிடிக்கவில்லை. எனவே, உண்ணியின் பைத்தியத்தை அதிகமாக காட்டி, அவனை மருத்துவமனைக்கு அனுப்ப, உண்ணியின் மாமாவோடு சேர்ந்து திட்டம் தீட்டுகிறான். இதன் விளைவுகள் என்னவாயின என்பதுதான் மீதிக்கதை.

நெகிழ்ச்சியான சோகமான இயல்பில் படத்தை தொடக்கினாலும் படத்தை மகிழ்ச்சியான முறையில் முடிக்கிறார்கள். உண்மையில் இப்படியான இறுதிக்காட்சியில் திலீப் நடித்திருப்பது ஆச்சரியம் தருகிறது. பொதுவாக இதுபோல ஒரு காட்சியில் நடிக்க பெரிய நடிகர்கள் சங்கடப்படுவார்கள். காமெடியான ரிவெஞ்ச் என நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

உண்ணியாக படத்தில் பெரும்பாலான நேரம் மனநிலை சரியில்லாதவராகவே திலீப் வருகிறார். ஏற்ற பாத்திரத்தை புரிந்துகொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்.வெள்ளந்தியான உண்ணி, இறுக்கமான விஷ்ணு என்ற இரு பாத்திரங்கள். கடந்தகாலம், நிகழ்காலம் என இரண்டு விஷயங்களையும் யோசித்துப் பார்த்து முடிவெடுக்கும் பாத்திரம்தான் விஷ்ணுவுக்கு. ஆனால் அவரின் கடந்தகாலம் அப்பா மூலம் பாதிக்கப்பட்டாலும் கூட அவரை ஒரு கட்டத்தில் ஏற்கிறார். அவர் மணமுடித்த காதலியை இறுதியாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதைப் பார்த்து தடுமாறுகிறார். ஏனெனில் கிராமத்தில் இருந்து வரும்போது அவர் சில வாக்குறுதிகளை செய்துகொடுத்திருப்பார். நேர்மையாக தனது நிலையைக் கூறி கடிதம் எழுதிவிட்டு நகரத்தில் மனைவியைப் பார்த்துக்கொள்கிறார். உண்மையில் இறுதிக்காட்சியில் விஷ்ணு பாத்திரத்திற்கு கிடைக்கும் ஆச்சரியம், நமக்கும் புதிதாக இருக்கிறது.

கிராமத்தில் உள்ள மனிதர்கள் அனைவருமே தலைமை ஆசிரியருக்கு மதிப்பு கொடுப்பவராக மதிப்பவராக இருக்கிறார்கள். உண்ணியின் வேடிக்கையான விஷயங்களை அவர்கள் பெரிதுபடுத்துவதில்லை. வேட்டி உடுப்பதால் பறிக்கிறான் என்பதற்காக பேண்ட், டவுசர் அணிகிறார்கள்.

நாம் கடந்துவிட்ட வேடிக்கையான இயல்பை, குணத்தை வெளிக்காட்டும் ஆளாக உண்ணி இருக்கிறான். படத்தின் பெரும்பகுதி காட்சிகள் உண்ணிக்கானவைதான்.

பாவனா சிறப்புத் தோற்றத்தில் வந்துபோகிறார். கிடைத்த வாய்ப்பில் பார்வையாளர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கும் பாத்திரம்.

கோமாளிமேடை டீம்

Directed byJayaraj
Screenplay byRafi Mecartin
Story byDileep
Produced byAnish Varma
StarringDileep
Kavya Madhavan
Thiagarajan
CinematographyAlagappan N.
Edited byN. P. Sathish
Music byKaithapram Viswanathan
Rajamani (score)
Release date
  • 11 April 2003
Running time
151 minutes
CountryIndia
LanguageMalayalam
https://en.wikipedia.org/wiki/Thilakkam

கருத்துகள்