சீனப் பொக்கிஷங்களை ஜப்பான்காரனுக்கு விட்டுக்கொடுக்க மறுக்கும் நாயகன்!
ஷூ ஃபூ டிரஷ்சர் சீன திரைப்படம் ஒன்றரைமணிநேரம் ஐக்யூயி ஆப் கல்லறைக்கு சென்று பொக்கிஷங்களை தேடும் படங்களுக்கென இருக்கும் சில அம்சங்களைப் பார்ப்போம். நாயகன் பொக்கிஷ புதிர்களை அவிழ்ப்பதில் திறமைசாலி. அவனுக்கென நகரில் கலைப்பொருட்களை விற்கும் கடை வைத்திருப்பான். தங்கம், வெள்ளி பாத்திரங்களை கொள்ளையிடுவதில் ஆர்வம் இருக்காது. நாயகனின் நண்பன் பேராசை கொண்ட வியாபாரி. சூதாடி கலைப்பொக்கிஷங்களை அடகு வைப்பான். இவனுக்காகவே நாயகன் வெளிநாட்டுக்காரர்கள் அல்லது எதிரிகளோடு கூட்டு சேர்ந்து கல்லறைகளை கண்டுபிடித்து உள்ளே செல்லவேண்டியிருக்கும். இந்த காட்சிகள் கடுப்பாக இருந்தாலும் திரை நடிகர்கள் காமெடி என்பதாக பாவ்லா செய்வார்கள். நாயகி பெரும்பாலும் நாயகனின் தோழியாக இருப்பாள். எதிரியாக இருந்து நட்பாகி தனது காணாமல் போன அப்பாவை கல்லறைக்குள் தேடிக்கொண்டிருப்பாள். நாயகன் ஊடல் கொள்வதும், ஊடாடி மகிழ்வதும் இவருடன்தான். சீன படங்களில் ஜப்பானியர்கள் மேல் துவேஷம் மறைக்கப்படாமல் இருக்கும். அந்த நாட்டினர், சீனாவின் மீது படையெடுத்து நிறைய அக்கிரமங்கள் செய்திருக்கிறார்கள். அதை இன்றுவரை மறந்து...