இடுகைகள்

பதில் சொல்லுங்க ப்ரோ? மிஸ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆண்களுக்கு தலை நடுவிலிருந்து வழுக்கையாவது ஏன்? மிஸ்டர் ரோனி

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? மிஸ்டர் ரோனி பதில் சொல்லும்போது தலையை சொறிவது ஏன்? இயல்பாகவே இரண்டு வாய்ப்புகளை கொடுத்து இரண்டில் ஒன்று என்றால் பலரும் எதை தேர்ந்தெடுப்பது என தலையை சொறிவார்கள். அது இயல்பானதுதான். இதனை உயிரியலில் டிஸ்பிளேஸ்மென்ட் ஆக்டிவிட்டி என்று கூறுகிறார்கள். மனிதர்களுக்கு மட்டும் இந்த பழக்கம் இல்லை பறவைகளுக்கும் கூட உண்டு. பறவை ஆபத்தான சூழலில் தாக்கவா, ஓடிவிடவா என இரு வாய்ப்புகள் உள்ள நிலையில் பதற்றத்துடன் தரையை கொத்துகிறது.  பதற்றத்தில் இருக்கும்போது யோசிக்கிற போஸில் உள்ளதால் அதன் பதற்றம் கூட தணிகிறது என நினைக்க வாய்ப்புள்ளது. 2017இல் செய்த ஆய்வில் மக்காவ் வகை குரங்குகள் இப்படி ஏதேனும் தீவிர யோசனையில் தலையை சாய்த்து சொறிந்துகொண்டிருக்கிற குரங்கை அணுக பயந்து நின்றிருக்கின்றன. அது யோசிக்கிற நிலையில் அதனை தாக்குவது தவறு என்பதை அதன் சொறிகிற பாவனை ஏற்படுத்தியிருகிறது. தலையை சொறிகிற பழக்கம் அப்படியே பாரம்பரியமாக நமது உடலுக்குள் பொதிந்து வந்திருக்கிறது என்று கூறலாம்.  மீன்களால் தன்னை உணர முடியுமா? முடியாது. ஆனால் முகரும் சக்தியால் பிற மீன் இனங்களை அடையாளம் அறிய முடியும். தன்னுடைய

ஹெவி மெட்டல் இசை வன்முறையைத் தூண்டுகிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? மிஸ்டர் ரோனி ஹெவி மெட்டல் இசை ஒருவரின் மனநலத்தை பாதித்து வன்முறையாளராக மாற்றுமா? ஒருவரின் மனநிலை மாறி அவர் வன்முறையாளராக மாற இசை காரணமாக இருந்தது கிடையாது. இசை என்பதை சிலர் காரணமாக காட்டினாலும் அது தவறானதே. இசை என்பது பல்வேறு நினைவுகளின் தோரணமாக சிலரை இணைத்துக்கொண்டு வரலாம். ஹெவிமெட்டல் இசையில் பாடுவதும், இசைப்பதும் அதிவேகமாக நடக்கும். ஆனால் அதற்காக  வன்முறையைத்  தூண்டுகிறது என்று கூறுவது ஆதாரங்களே இல்லாத வாதம்.  குடும்ப சிக்கல்கள், போதைமருந்து பழக்கம், தனிமையில் இருப்பது ஆகியவையே ஒருவரின் மனதில் வன்முறையை உருவாக்குகிறது. 2018ஆம் ஆண்டு சவுத் வேல்ஸிலுள்ள மக்கியூரா என்ற பல்கலைக்கழகம் இதுதொடர்பான ஆய்வை செய்து மெட்டல் இசை, வன்முறையை ரசிகர்கள் மனதில் உருவாக்குவதில்லை என்று நிரூபித்தது. அதற்கு முன்னர்  இந்த இசைக்கலைஞர்களை சிறிது ஆபத்தானவர்களாகவே பலரும் பார்த்தனர். 1996ஆம் ஆண்டு ஸ்லேயர் என்ற ஹெவி மெட்டல் குழுவின் மீது சிறுமியின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது மகள் செய்த கொலைகளுக்கு குழுவினரின் இசைதான் காரணம் என்பதுதான் அவர்களது முரட்டுத்தனமான வாதம். ஆனால் வழக்கு