இடுகைகள்

கல்விப் பார்வை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகை மாற்றியுள்ள ஆன்லைன் கல்வி - மாறும் கல்வி சூழல்கள் பற்றிய அலசல்

படம்
மாறும் கல்விப்பயணம்! கோவிட் -19 நோய்த்தொற்று அனைத்து துறைகளையம் பாரபட்சமின்றி தாக்கியுள்ளது. இதன் காரணமாக எந்த வேலைகளையும் நாம் நிறுத்தப்போவதில்லை. வேலைகளை வேறுவிதமாக செய்யப்போகிறோம். தொழிற்சாலைகள் என்றால் குறைவான தொழிலாளர்களை வைத்து பன்னிரெண்டு மணிநேரம் பிழியப்போகிறார்கள். சம்பளமும் குறைவாக இருக்கலாம். முடிந்தவரை ஆட்களைக் குறைத்துவிட்டு தொழிற்சாலை நிர்வாகம் இயந்திரங்களுக்கு மாறுவார்கள். கல்வி விவகாரத்தில் பள்ளியில் முழுநாட்களையும் கழித்த மாணவர்கள் இனி ஆன்லைன் பாதி, பள்ளி மீதி என வகுப்புகளை பயிலப் போகிறார்கள். தலைநகரான டில்லியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் கல்வி தொடங்கிவிட்டது. தனியார் பள்ளிகளில் மட்டுமல்ல, அரசுப்பள்ளிகளிலும் கூட ஆன்லைன் கல்விதான். டில்லியிலுள்ள கேரியர் லான்ச்சர் என்ற கல்வி நிறுவனம் அரசுப்பள்ளிகளில் ப்ராஜெக்ட் ஆஸ்பிரேஷன் என்ற பெயரில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் வீடுகளில் கணினிகளுக்கு முன்பு தயாராகவேண்டியதிருக்கிறது. நாற்பது நிமிடங்கள் நடைபெறும் வகுப்புகள் ஆன்லைனில் ஒன்றரை மணிநேரம் நடத்தப்படுகிறது. ஆன்லைன் கல்வி மூலம் தற்போது 1.65 லட்சம்

மாறவேண்டிய கல்விப் பார்வை!

படம்
கல்வி ஊழல்கள்! புகழ்பெற்ற பெருமை வாய்ந்த கல்லூரிகளில் படிப்பது யாருக்குத்தான் பிடிக்காது. இதுவே அமெரிக்காவில் 25 மில்லியன் டாலர்கள் ஊழல் செய்யத் தூண்டியுள்ளது. இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் கல்வி என்பது செல்வந்தர்களுக்கு கட்டுப்பட்டதாகவே, அவர்களால் வாங்க கூடியதாகவே உள்ளது. இதில் அமெரிக்க  உதாரணம் தற்போது கவனம் பெற்றிருக்கிறது. உலகிலேயே ஹாங்காங்தான் கல்விக்கு அதிகம் செலவழித்து வருகிறது. ஒரு குழந்தைக்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 400 ரூபாய் (தோராய அளவு)செலவிடுகின்றனர் ஹாங்காங் பெற்றோர். இந்த ஆய்வை பதினைந்து நகரங்களில் உள்ள 8, 481 பெற்றோர்களிடம் செய்துள்ளனர்.  இது உலகளவில் கல்விக்கு செலவிடும் அளவை விட மூன்று மடங்கு அதிகம்.  ஹாங்காங்கை அடுத்து அரபு அமீரகம் கல்விக்காக அதிகம் செலவழிக்கிறது. வெற்றிக்கான வழி படிப்பு என்று எண்ணிவிடக்கூடாது. இன்று பார்ச்சூன் இதழில் இடம்பெறும் 500பேர்களில் 30 பேர் மட்டுமே குறிப்பிட்ட பல்கலையில் பட்டம் பெற்றவர்களாக உள்ளனர். இன்று செயற்கை  நுண்ணறிவு நம் வேலைவாய்ப்புகளை விரைவில் பறித்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இன்னும் பழைய முறையில் படித