இடுகைகள்

சுதா மூர்த்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிறர் பேசும் கதைகளை நீங்கள் கேட்டு வெளிப்படுத்துவதில்லை! - சுதாமூர்த்தி, எழுத்தாளர்

படம்
  சுதா மூர்த்தி உங்களுக்கு நிறைய திறமைகள் உண்டு என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டு வருகிறோம். குழந்தைகளுக்கான  நூல்களை எழுதுகிறீர்கள். கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள். கணினி பற்றியும் எழுதுகிறீர்கள். எப்படி எழுத்தார்வம் பிறந்தது? இங்கு ஆங்கில மீடியத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சிண்ட்ரெல்லா, ஸ்னோவொயிட் கதைகளை எழுதுகிறார்கள். அக்கதைகளைத் தான் சொல்லுகிறார்கள். பெற்றோர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் அந்த கதைகள் நமக்கு பொருந்தாது. நம்முடைய கூட்டு குடும்ப முறை, கலாசாரம், விழாக்கள் ஆகியவற்றுக்கு மேற்கத்திய கதைகள் பொருந்தாதவை. எனவே நான் அதற்கு ஏற்ப இந்திய பண்பாட்டு தன்மை கொண்ட கதைகளை ஆங்கிலத்தில் எழுத தொடங்கினேன்.  நீங்கள் முதலில் கன்னட மொழியில் எழுத தொடங்கினீர்கள் அல்லவா? நான் பத்தாவது வரையில் கன்னடப் பள்ளியில்தான் படித்தேன். பிறகு 50வயது வயதில் ஆங்கிலத்தில் எழுத தொடங்கினேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலுள்ள டிஜேஎஸ் ஜார்ஜ் நான் எழுதுவதை பெரிதும் ஊக்குவித்தார்.  கன்னடத்திலிருந்து ஆங்கிலத்திற்கு எழுத தொடங்கியது கடினமாக இருக்குமே? உண்மைதான். இதுபற்றி அம்மாவிடம் புலம்பியிருக்கிறேன்.

பெமினா பெண் சாதனையாளர்கள் ! - இந்தியாவின் மருத்துவக் கொள்கைகளை மாற்றியமைத்த சாதனைப் பெண்மணி

படம்
          பெமினா பெண் சாதனையாளர்கள் சுதா மூர்த்தி இதுவரை 40 நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் குறிப்பிடத்தக்க நூல்களை எழுதி பங்களித்துள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மூர்த்தி கிளாசிக்கல் நூலகம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். பல்வேறு சமூக பிரச்னைகளைப் பற்றி எழுதி வருவதோடு, நிதியும் அளித்து வருகிறார். இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இன்போசிஸ் பவுண்டேஷனின் தலைவர். பொறியியல் மாணவர்களுக்கான ஆசிரியர். டெல்கோ நிறுவனத்தில் முதல் பொறியியலாளர் சுதா மூர்த்திதான். இதைக்கூட ஏன் எப்போது ஆண்களே பொறியியலாளர்கள் உங்கள் நிறுவனத்தில் இருக்கவேண்டுமா என்று கேள்வி கேட்டுத்தான் பெற்றார். பெங்களூருவில் உள்ள பள்ளிகளில் பரவலாக கணினிகளை கொண்டுபோய் சேர்த்த பெருமை சுதா மூர்த்திக்கு உண்டு.  ஜியா மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வழக்குரைஞர். டாடா குழுமம், ஆதித்ய பிர்லா குழுமம், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பல்வேறு இணைத்தல், பிரித்தல் விவகாரங்களை கையாண்டு வெற்றி கண்டவர். இவர் அஇசட்பி அண்ட் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். இந்தியாவின் செல்வாக்கு பெற்ற பெண்களின் ப