இடுகைகள்

குங்குமம் - ஸ்மார்ட்போன்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்மார்ட்போன்களுக்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம்?

படம்
கல்வி அறிவை ஸ்மார்ட்போன்கள் அதிகரித்திருக்கிறதா ?- ச . அன்பரசு நாள் முழுக்க இணையத்தில் உலவும் நாம் அதிலேயே மின்சாரம் , போன் பில் கட்டுகிறோம் ; ஸ்மார்ட்போனிலேயே தினகரன் நாளிதழை வாசிப்பதோடு படத்தையும் கூட பார்க்கிறோம் . இதற்கு காரணம் வாங்கும் சக்தியா ? அல்லது  கல்வியறிவா ? இந்த வசதிகள் தங்களின் ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த கல்வியறிவால் சாத்தியமானது என அரசியல்கட்சிகள் சவடால் அடித்தாலும் உண்மை அதுவல்ல என்பதை சைபர் மீடியா ஆராய்ச்சி உடைத்து சொல்லியுள்ளது . நம் தாத்தா , பாட்டி தலைமுறையினர் பலருக்கும் ஸ்மார்ட்போன்களை ஆன் செய்யவும் , அழைப்பு வந்தால் பட்டன் அழுத்தி பேசவும் , ஆஃப் செய்து வைக்கவும் மட்டுமே தெரியும் . மேலதிகமாக போன்களை பயன்படுத்த தெரியாவிட்டாலும் அவர்கள் போன்களை பயன்படுத்துகிறார்கள் . இதனை கல்வி அறிவென ஒப்புக்கொள்ளலாமா ? ஒரே விஷயங்களை திரும்ப திரும்ப செய்யும் பழக்கத்தினால் அது இயல்பாக நம் மனதில் பதிவதை இதற்கு காரணமாக கொள்ளலாம் .  இந்தியாவில் கேரளா , குஜராத் , மகராஷ்டிரா , இமாச்சல பிரதேசம் ஆகியவை அதிக கல்வியறிவு கொண்ட மாநிலங்களாக உள்ளன . அதேசமயம் இங்