இடுகைகள்

நாகார்ஜூனா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிடிவாதமாக குழந்தையுடன் உள்ள நாயகனை காதலிக்கும் குழந்தைநல மருத்துவர்!

படம்
  சந்தோஷம்  நாகார்ஜூனா, ஷ்ரியா சரண், பப்லு வெளிநாட்டில் வாழும் நாயகனுக்கு ஒரே ஒரு ஆண் குழந்தை. பள்ளி சென்று வருகிற வயது. நாயகனின் தங்கை, அவளது கணவர் என மூவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு இந்தியாவில் இருந்து திருமண அழைப்பிதழ் ஒன்று, அஞ்சலில் வருகிறது. அது வேறு யாருமல்ல. நாயகனின் மனைவி வழி சொந்தங்கள்தான். நாயகன் தனது தங்கை, மாப்பிள்ளை ஆகியோரைக் கூட்டிக்கொண்டு இந்தியாவிற்கு செல்கிறார். ஆந்திரத்திற்கு மாமனார் வீட்டுக்கு சென்றாலும், அங்கு பெரிய வரவேற்பு இல்லை. காரணம், நாயகன் அவர்கள் வீட்டு பெண்ணை சம்மதமின்றி அழைத்துச் சென்று காதல் மணம் செய்துகொண்டதுதான். இந்த பின்னணிக் கதையில் நாயகன் விரும்புகிற பெண், அவனை விரும்புகிற மனைவி வழி சொந்தக்காரப் பெண் என இருவர் வருகிறார்கள். திருமணம் செய்து சொற்ப ஆண்டுகளில் மனைவி விபத்தில் இறந்துவிட, நாயகனை விரும்பும் சொந்தக்கார பெண் மீண்டும் அவனது வாழ்க்கைக்கு வருகிறாள். அவளை நாயகன் ஏற்றானா, மனைவி வழி சொந்தங்கள் இந்த உறவுக்கு பச்சைக்கொடி காட்டினார்களா என்பதே மீதிக்கதை.  படத்தில் வில்லன் என யாருமே கிடையாது. இங்கு எதிரியாக ஒருவருக்கு முன்னே நிற்பது காலம்தான

போலீஸ் அதிகாரியான தம்பியைக் காப்பாற்ற தன்னை பணயம் வைக்கும் மாஃபியா தலைவன்!

படம்
  பாய்  தெலுங்கு நாகார்ஜூனா, ரிச்சா, சோனு சூட் சிறுவயதில் செய்யாத தவறுக்காக சிறை சென்று பிறகு மாஃபியா தலைவான மாறுபவன் மீண்டும் தனது குடும்பத்தைக் காக்க முயலும் கதை.  பெரிய சிக்கலான கதைக்கரு கிடையாது. வெளிநாட்டில் உள்ள பாய் எனும் நாயகன், ஆந்திராவுக்கு வருகிறான். அவனது மாஃபியா ஆட்களை போலீஸ் அதிகாரி ஒருவர் வேட்டையாடுகிறார். ஆனால் அவர் யாரென்று தெரியவில்லை. அவர்களது ஆட்களைப் பற்றி யாரோ ஒருவர் மறைமுகமாக தகவல்களை அனுப்புகிறார்கள். அந்த கறுப்பு ஆட்டைப் பிடிக்கவே பாயை மாஃபியா தலைவர் அனுப்பி வைக்கிறார். மாஃபியா குழுவில் பாய் செல்வாக்கான ஆள். தலைவருக்கு அடுத்தபடியாக பிறர் மதிக்கும்படியான திறமை கொண்டவர். அடி உதையில் மட்டுமல்ல புத்தியிலும் கூர்மை அதிகம். இதனால், மாஃபியா தலைவருக்கு தனது இரு மகன்களை விட பாயை பிடித்திருக்கிறது. அவரையே அதிகம் புகழ்கிறார்.  பாய், இந்தியா வந்து மாஃபியா குழுவில் இருந்து விலகியவர்களை தேடிப்பிடித்து விசாரிக்கிறார். அந்த நேரத்தில் ஒரு பெண் அவரைக் காதலிப்பதாக கூறுகிறாள். அவள் நர்சரி ஒன்றை நடத்தி வருகிறாள். பாய், சிலமுறை சிக்கலான நேரத்தில் அவளுக்கு உதவியிருப்பார். அவ்வளவுதான்

மாஃபியா கூட்ட கொலையாளிக்கு கிடைக்கும் காதலும், அதை தக்க வைக்க செய்யும் போராட்டமும்! அந்தம் - ஆர்ஜிவி

படம்
                  அந்தம்  telugu இயக்கம் ஆர்ஜிவி நாகார்ஜூனா, ஊர்மிளா மடோன்கர் ஷெட்டி என்ற மாஃபியா தலைவரின் குழுவில் முக்கியமான ஆள், ராகவ். தலைவர் சொல்லும் ஆட்களை போட்டுத்தள்ளுவதோடு கடத்தல் வேலைகளை செய்து வருகிறான். எதிர்தரப்பில் உள்ள சங்கர் நாராயணன் என்பவரின் கூட்டத்தையே தனியாளாக நின்று அழிக்கிறான் ராகவ். இதனால் காவல்துறையில் உள்ள கிருஷ்ணா என்ற கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர், ராகவை கைதுசெய்ய முயல்கிறார். இந்த நேரத்தில் ராகவிற்கு கிருஷ்ணாவின் தங்கை பாவனா மீது காதல் உருவாகிறது. இதன் விளைவுகள் என்னவாயின என்பதே கதை. இதே டெம்பிளேட்டை வைத்து பவன் கல்யாண் நடித்த பஞ்சா என்ற படத்தை விஷ்ணுவர்தன் என்ற இயக்குநர் இயக்கியிருக்கிறார். அந்த படத்தில் பவன் சற்று ஸ்டைலாக காட்டப்பட்டிருப்பார். மற்றபடிமூலக்கதை அந்தம் என்ற படத்தைப் போலவே இருக்கும். சில விஷயங்கள் மாற்றப்பட்டிருக்கும். நகலை விட்டுவிடுவோம். அசலைப் பார்ப்போம். ராகவ், ஒரு குடும்பத்தால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறான். ஆனால் ஒருமுறை நகை காணாமல் போக அவனது குடும்பமே காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து சித்திரவதை செய்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்க

காஸனோவா, ஒரு பெண் மீது கொள்ளும் காதல் வழியாக உறவுகளின் மதிப்பை அறிந்துகொள்ளும் கதை!

படம்
                கிரேக்க வீருடு நாகார்ஜூனா , நயன்தாரா பெண்கள் என்றாலே உடல் இன்பத்திற்கு மட்டும்தான் என நம்பும் ஒருவர் சூழல்களால் மனம்மாறி குடும்பத்தை நேசிப்பதோடு , காதலித்த பெண்ணை திருமணம் செய்வதுதான் கதை . வெளிநாட்டு தொழிலதிபர் நாகார்ஜூனா . அவரும் , உறவு முறையில் மாமாவும் , நெருங்கிய நண்பன் என இணைந்து நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள் . தனது செல்வாக்கு , அழகு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஏறத்தாழ 99 பெண்களை படுக்கையில் வீழ்த்துகிறார் கிங் நாகார்ஜூனா . பெண்களை போகப்பொருளாக பார்க்கிறார் . நெருக்கமான உறவை அவர் விரும்புவதில்லை . இதனால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் . இந்த நேரத்தில் அவரால் செக்சுக்காக பயன்படுத்தப்பட்ட பெண் ஒருத்தி , அவருடைய சிஎஸ்ஆர் திட்டம் ஒன்றை வன்மத்தோடு உருக்குலைக்கிறாள் . இதனால் , அந்த பணியை ஒப்படைத்த நிறுவனம் நாகார்ஜூனா மீது வழக்கு போட்டு வெல்கிறார்கள் . அதிக அளவு தொகையில் அபராதம் கட்ட வேண்டும் என்பதே பெரிய பிரச்னை . இந்த நேரத்தில் கிங்கிற்கு இந்தியாவில் பூர்விகமான தாத்தாவிடமிருந்து போன் வருகிறது . அவர் , மகன் வயிற்று பேரனான கிங்க

அன்புக்காக ஏங்கும் ஆதரற்ற பெண்ணுக்கு காதல் கணவர் கிடைத்தாரா? பாஸ் 2006

படம்
                         பாஸ் - ஐ லவ் யூ பாஸ் - ஐ லவ் யூ இயக்கம், இசை, ஒளிப்பதிவு அனுராதா என்ற குழந்தையை பெண்ணாக பிறந்துவிட்ட காரணத்தால் தூக்கியெறிந்துவிட்டு அவரது அப்பா செல்கிறார். அக்குழந்தையை ஆதரவற்றோர் காப்பகத்தின்ர் எடுத்து வளர்க்கிறார்கள். அந்த குழந்தைக்கு உனக்கு கிடைக்கும் கணவனே தாயாகவும் தந்தையாகவும் இருப்பான் என்று கூறுகிறார் காப்பக தலைவர். அனுராதா வளர்ந்த பிறகு அவளுக்கு அப்படி ஒரு உறவு கிடைத்ததா? அவளது தந்தை அவளை பிறகு வந்து சந்தித்தாரா என்பதுதான் கதை. யுவ சாம்ராட் நாகார்ஜூனா படம் முழுக்க அசத்தியிருக்கிறார். காதல், நட்பு, அன்பை விட வணிகம் பற்றிய அவரது சிந்தனைகள் அசத்துகின்றன. அனுராதாவை ஏற்றுக்கொண்டாலும் அவளை வெளிப்படையாக காதலிக்கிறேன் என்று சொல்ல தாமதித்து தடுமாறும் இடங்களில் ஆசம். நயன்தாரா, கிடைத்த அன்பு காணாமல் போய்விடுவோ என தவித்து கஷ்டப்படும் இடங்களில் நடிக்க முயன்றிருக்கிறார். ஆபீசில் நடைபெறும் காமெடிகள் சிறப்பாக உள்ளன. பிரம்மானந்தம் குறைவான நேரமே வருகிறார். அவரின் காமெடி இல்லாதது, படத்திற்கு பலவீனம். காதல், நட்பு, சோகம் என உணர்ச்சிகளால் அதிகம் பாதிக்கப்படுவர்களுக்கு படம

ஆவியாக வந்து மகனுக்கு தாம்பத்திய பாடம் எடுக்கும் அப்பா- சோகடே சின்னி நயனா

படம்
சோகடே சின்னி நயனா - தெலுங்கு இயக்கம் கல்யாண் கிருஷ்ணா குருசலா கதை - திரைக்கதை பி. ராம் மோகன் ஒளிப்பதிவு பிஎஸ் வினோத் இசை  அனுப் ரூபன்ஸ் ஃபேன்டசியான கதை. கல்யாணமாகி சில ஆண்டுகளிலேயே  பங்காரு ராஜூ விபத்தில் இறந்து விடுகிறார். எப்போதும் பெண்களையே சுற்றி வந்துகொண்டிருப்பவர் அவர். அவருடைய மகனுக்கு முக்கியமான பிரச்னை வருகிறது. அதைத் தீர்க்க வருகிறார். அதோடு அவர் இறந்துபோனதற்கான காரணமும் தெரியவருகிறது. மேலும் அவரது குடும்பம் முழுக்க பலியாகும் வாய்ப்பும் உருவாகிறது. அதை எப்படி தடுக்கிறார், குடும்பத்தைக் காக்கிறார் என்பதே கதை. ஆஹா.. படம் முழுக்க நாகார்ஜூனாதான் தெரிகிறார். படத்தலைப்பை இளமையான வசீகரன் என்பதுதான். அதனை படம் முழுக்க நிரூபிக்கிறார். அப்பாதான் இதில் பவர். மகன் இதயநோய் வல்லுநர் என்பதோடு  மற்ற விஷயங்களிலும் டியூப்லைட். அத்தனையையும் நேர் செய்துவிட்டு குடும்ப பகையையும சிவபெருமானின் அருளைப் பெற்று தீர்த்து வைக்கிறார். பிரம்மானந்தத்தின் காமெடியும் சிறப்பாக வேலை செய்திருக்கிறது. ரம்யாகிருஷ்ணன், லாவண்யா திரிபாதி, அத்தை பெண்கள் என அத்தனைபேரும் கொள்ளை அழகு. நடிக்