அன்புக்காக ஏங்கும் ஆதரற்ற பெண்ணுக்கு காதல் கணவர் கிடைத்தாரா? பாஸ் 2006
பாஸ் - ஐ லவ் யூ
பாஸ் - ஐ லவ் யூ
இயக்கம், இசை, ஒளிப்பதிவு
அனுராதா என்ற குழந்தையை பெண்ணாக பிறந்துவிட்ட காரணத்தால் தூக்கியெறிந்துவிட்டு அவரது அப்பா செல்கிறார். அக்குழந்தையை ஆதரவற்றோர் காப்பகத்தின்ர் எடுத்து வளர்க்கிறார்கள். அந்த குழந்தைக்கு உனக்கு கிடைக்கும் கணவனே தாயாகவும் தந்தையாகவும் இருப்பான் என்று கூறுகிறார் காப்பக தலைவர். அனுராதா வளர்ந்த பிறகு அவளுக்கு அப்படி ஒரு உறவு கிடைத்ததா? அவளது தந்தை அவளை பிறகு வந்து சந்தித்தாரா என்பதுதான் கதை.
யுவ சாம்ராட் நாகார்ஜூனா படம் முழுக்க அசத்தியிருக்கிறார். காதல், நட்பு, அன்பை விட வணிகம் பற்றிய அவரது சிந்தனைகள் அசத்துகின்றன. அனுராதாவை ஏற்றுக்கொண்டாலும் அவளை வெளிப்படையாக காதலிக்கிறேன் என்று சொல்ல தாமதித்து தடுமாறும் இடங்களில் ஆசம்.
நயன்தாரா, கிடைத்த அன்பு காணாமல் போய்விடுவோ என தவித்து கஷ்டப்படும் இடங்களில் நடிக்க முயன்றிருக்கிறார். ஆபீசில் நடைபெறும் காமெடிகள் சிறப்பாக உள்ளன. பிரம்மானந்தம் குறைவான நேரமே வருகிறார். அவரின் காமெடி இல்லாதது, படத்திற்கு பலவீனம்.
காதல், நட்பு, சோகம் என உணர்ச்சிகளால் அதிகம் பாதிக்கப்படுவர்களுக்கு படம் பிடிக்கும். நாகார்ஜூனா நடிப்பில் படம் நெகிழ்ச்சியான அனுபவமாகவே இருக்கிறது.
கோமாளிமேடை டீம்
சினிமா விமர்சனம், நாகார்ஜூனா, நயன்தாரா, ஆபீஸ், உறவு, காதல்
கருத்துகள்
கருத்துரையிடுக