தமிழகத்திற்கு ஏதாவது செய்வதற்கு கிடைத்துள்ள வாய்ப்புதான் இது! - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை

 

 

 

கோவை: பட்டாசு வெடித்து வரவேற்பு!- அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க ...
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை- விகடன்

 



அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி

கரூரைச் சேர்ந்த குப்புசாமி அண்ணாமலை அண்மையில் டில்லியில் தன்னை பாஜக கட்சியில் இணைத்துக்கொண்டார். பெங்களூருவில் பணியாற்றிய அண்ணாமலை, 2019ஆம் ஆண்டு தனது பணியிலிருந்து விலகிக்கொண்டார். வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பு உருவாக்கி இளைஞர்களுக்கு உதவி செய்து வந்தார். அவரிடம் பேசினோம்.

அரசியலில் சேருவதற்கான முடிவை எப்படி எடுத்தீர்கள்?

பொதுமக்களின் வாழ்க்கை நலமாக இருக்கவேண்டும் என்று நான் நினைத்தேன். அரசியல் மூலம் மக்களின் வாழ்க்கை மாறுதல் அடையும் என்று நான் நம்புகிறேன். நான் முதலில்  அரசியல் சார்ந்து இயங்கவில்லை. சமூகசேவைகளை செய்து வந்தேன். அரசியல் மாற்றம் சமூகத்தையும் மாற்றும் என்று நம்பினேன். எனவே, நான் அரசியலுக்குள் நுழைந்தேன். இது சரியான நேரம் என்று நம்புகிறேன்.

பாஜகவை எதற்கு தேர்ந்தெடுத்தீர்கள்? அடுத்த நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நிற்கும் எண்ணம் இருக்கிறதா?

நான் மனதளவில் தேசியவாதி. முன்னரே இந்திய பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை, தொலைநோக்கு  பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளேன். தமிழகத்தில் திராவிட ஆட்சிகள் பாஜகவை எதிர்மறையாகவே மக்களிடம் காட்டி வந்துள்ளன. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. நான் என்னுடைய இதயம் கூறியபடி நடக்கிறேன். பாஜகதான் இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் சரியான கட்சி. தமிழ்நாட்டிற்கு ஏதாவது செய்ய நினைத்த எனக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு இதுதான் என்று நினைக்கிறேன்.

உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுவதற்கு எப்படி தோன்றியது?

2018ஆம் ஆண்டு நான் கைலாசத்திற்கு மூன்று மாத பயணமாக சென்றிருந்தேன். அப்போது கூட அரசியலுக்குள் இறங்கும் எண்ணம் இல்லை. ஆனால் சமூக சேவை செய்யவேண்டும் என்று தீவிரமாக தோன்றியது. ஒரு முடிவு எடுத்தால் அது இன்னொரு முடிவிற்கு சென்றது. வாழ்க்கையை அதன் போக்கிலேயே எடுத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டேன்.

நீங்கள் சுதந்திரமாக கருத்துகளை பேசி வந்துள்ளீர்கள். கட்சிக்குள் அதற்கான இடம் இருக்கும் என நினைக்கிறீர்களா?

எனக்கு  தெரியவில்லை. கட்சிக்குள் அதற்கான இடம் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். நான் சில சமயங்களில் பேசியதை வைத்துக்கொண்டு என்னை தீர்மானிக்க முயல்கிறீர்கள் .

மாநில அரசியலில் நீங்கள் என்ன பதவி வகிக்கிறீர்கள்?

நான் கட்சியின் கடைநிலை ஊழியன்தான். வேறு எதுவும் இல்லை. (தற்போது பாஜக தமிழகத்தின் துணைத்தலைவராகியுள்ளார்.)

 தேசியவாத ஊக்கத்துடன் செயல்படுவேன் என்று கூறியிருக்கிறீர்கள். அப்படியென்றால் தமிழர்கள் அந்த உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளலாமா?

இல்லை. நான் அந்த அர்த் த்தில் சொல்லவில்லை. நடப்பு மாநில அரசு, டில்லிக்கு விரோதமாக நடந்துவருகிறது. மத்திய அரசு அமல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் விமர்சித்து தமிழகம் எந்த பயன்களையும் பெறமுடியாமல் மாநில அரசு தடுத்து வருகிறது. விமர்சனங்களை நீங்கள் முன்வைக்கலாம். ஆனால் அனைத்திலும் தமிழ்நாடு வெளியேதான் இருக்கிறது. முன்னர் இந்தியாவின் பயணத்தில் தமிழர்கள் நிறைய பங்களித்திருக்கிறார்கள். பங்கேற்று இருக்கிறார்கள்.

நடப்பு தேர்தலில் உங்களை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்த போவதாக கூறப்படுகிறதே?

நான் எளிமையான சிறிய மனிதன். இப்போதைக்கு அதை மட்டுமே கூற விரும்புகிறேன்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

டி முருகானந்தம்

ஐபிஎஸ், அண்ணாமலை, கரூர், பெங்களூரு, மோடி, பாஜக
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்