குற்றங்களின் மீது விரிக்கப்படும் சைபர் வலை! ஃபேப்ரிகேட்டட் சிட்டி 2017 korea

 

 

 

Stream and Watch Fabricated City -Full Movie online with ...

 

 

ஃபேப்ரிகேட்டட் சிட்டி 2017 korea

இயக்கம் Park Kwang-hyun

ஒளிப்பதிவு Nam Dong-geun

இசை Kim Tae-seong

கம்ப்யூட்டர் கேமர் மீது அநியாய கொலைப்பழி சுமத்தப்பட்டு, 24 மணிநேரத்திற்குள் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு விடுகிறது. உண்மையில் அந்தக்கொலையை செய்தவர் யார்? கொலைப்பழியை எதற்கு கம்ப்யூட்டர் கேமர் மீது போட்டார் என்பதுதான் கதை.

படத்தின் தொடக்க காட்சியே அசத்தலாக இருக்கிறது. கட்டடம் ஒன்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டை எப்படி கேப்டன் தலைமையிலான குழு உயிரைக்கொடுத்து மீட்கிறது என்ற காடசி அது. அதில் கேப்டன் தனது குண்டு நண்பன் ஹாரியை மீட்க போராடி அதனாலேயே உயிரை விடுகிறான். ஹாரி இதனால் கடுமையாக மனக்காயம்பட்டு அலறுகிறான். ஐயையோ படத்தின் தொடக்கத்திலேயே நாயகன் செத்தால் எப்படி படம் பார்ப்பது என்று நாம் யோசிப்பதற்குள், அது கம்ப்யூட்டர் கேம் என்று  பிறகுதான் தெரிகிறது.

வேலைக்கு செல்லாமல் கம்ப்யூட்டர் கேம் விளையாடி வெறித்தனமாக வாழும் இளைஞன்தான் கேப்டன். ஆம் அவனது ஆன்லைன் விளையாடு சகாக்கள் அவனை அப்படித்தான் கூப்பிடுகிறார்கள். கொலைப்பழி கேப்டன் மீது போடப்படுகிறது. அவன் ஏன் கொலை செய்தான் என்பதற்கு, கம்ப்யூட்டர் கேம் விளையாடி ஏற்பட்ட விரக்தி மனநிலை என அரசு தரப்பு பத்திரிகைகளுக்கு விளக்கம் கொடுக்கிறது அரசு வக்கீலை பார்த்த உடனே தெரிந்துவிடுகிறது. இந்த ஆள்கிட்ட ஏதோ கோளாறு என்று நினைக்கிறோ்ம். அப்படியே பின்னால் ஆகிறது.

நம்முடைய கணினி, கார், போன் என அனைத்தும் இணையத்தில் இணைக்கப்பட்டால் என்னாகும் என்று காட்டியிருக்கிற படம் இது. பணக்கார ர்கள் செய்யும் குற்றங்களுக்கு ஏழைகளை எப்படி பலியாடுகளாக்குகிறார்கள் என்பதுதான் படத்தின் முக்கியமான மையச்சரடு.

நாயகன் அசத்தியிருக்கிறார். கொரிய படங்களில் முன்பே சொன்னதுபோல , ஹீரோக்கள் பேரழகாக இருக்கிறார்கள். கொரிய காஸ்மெடிக்சுக்கு நாங்கள் இன்ப்ளூயன்சர் கிடையாது. ஆனாலும் சொல்கிறோம் . ஹீரோ அவ்வளவு அழகு. கூடவே நடிக்கவும் அசகாயமாக காரை ஓட்டி சண்டையும் போட்டிருக்கிறார்.

கணினி சார்ந்த நுட்பமான திருட்டை இவ்வளவு விளக்கமாக ஆராய்ச்சி செய்து படத்தை எடுத்திருப்பதற்காக இயக்குநருக்கு நன்றி சொல்லவேண்டும். அம்மாவை நாயகன் நினைவுகூர்ந்து படத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் பேசும் வசனம் கண்களில் கண்ணீர் பெருக்குகிறது.

குற்றங்களின் மீது விரிக்கப்படும் சைபர் வலை!

கோமாளிமேடை டீம்


 

கருத்துகள்