ஊர் சுற்றும் கதைசொல்லி! - 99நொடி வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிடும் கோவை சாய் சேது
cc |
ஊர் சுற்றும் கதைசொல்லி
பொதுவாக சிலர் பத்திரிக்கை வேலையை சினிமாவுக்கு செல்லும் ஏணியாக பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் சமூகத்திற்கான செய்திகளை சொல்ல என்று வேலைக்கு வருவார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வருபவர்களின் செய்திகள் உண்மையிலேயே அவர்களின் நோக்கங்களை வெளிப்படையாகவே பறைசாற்றுவதாக இருக்கும். அந்தவகையில் கோவையைச்சேர்ந்த சாய் சேது, முக்கியமானவர்.
இவரும் பத்திரிக்கை வேலையில் குப்பை கொட்டியவர்தான். அது அது மனதிற்கு பிடிக்காததால் வேலையைக் கைவிட்டு இந்தியா முழுக்க அலைந்து திரும்பியுள்ளார். தான் சென்ற இடத்தில் எல்லாம் 99 நொடி வீடியோக்களை எடுத்து அந்த சூழ்நிலையை பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் சுற்றித்திரிந்திருக்கிறார்.
நான் என்னுடன் கேமரா, ட்ரோன் ஆகியவற்றை எடுத்துச்சென்றேன். நான் சென்ற சில கிராமங்களில் தினசரி ஒருமுறைதான் பேருந்து வரும் என்ற சூழலையும் பார்த்திருக்கிறேன் என்கிறார். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்துவிட்டு ஊடகத்துறைக்கு வந்துள்ளார். மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர், போதுண்டா பாண்டுரங்கா என்று பேக்கை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு ஊர்சுற்றக் கிளம்பிவிட்டார்.
இவரது வீடியோக்கள் ஏறத்தாழ டிவியில் செய்தியாளர் விளக்கு்ம விவரிப்பு செய்தி போலத்தான் உள்ளது. ஆனால் வீடியோ, பேச்சு, எடிட்டிங் என அனைத்தையும் ஒருவரே செய்வததுதான் புதுமை. தொலைதூர கிராமங்களில் இணைய வசதி சரியாக இருக்காது. அப்போது எனக்கு பெரிய எதிரியாக இணையம்தான் தோன்றும் என்கிறார் சாய் சேது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
பிதுஷி தாஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக