டைட்டன் பிராண்டை மகத்தான வெற்றி பெறச்செய்தவர் சுபர்ணா மித்ரா!
சுபர்ணா மித்ரா
சுபர்ணா மித்ரா
இயக்குநர், வாட்சுகள் அணிகலன்கள் பிரிவு, டைட்டன்
அண்மையில்தான் சுபர்ணா மித்ரா நிறுவனத்தின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இதற்கு முன்னர். விற்பனை விநியோகப் பிரிவின் தலைவராக இருந்தார். டைட்டன் நிறுவனத்தின் விற்பனை பொது தலைவர், ஆசிய பசிபிக் பகுதி தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகுத்துள்ளவர் இவர். டைட்டன் நிறுவனத்தின் வாட்சுகள், அணிகலன்களின் விற்பனை பொறுப்பு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சுபர்ணாவின் தலைமையில்தான் நடக்கிறது. டைட்டனின் ராகா, நெபுலா, ஸ்விஸ் பிராண்டான ஸைலஸ் ஆகிய பிராண்டுகளையும் விற்பனை செய்து நிறுவனம் வளர்ச்சி பெற உதவியுள்ளார். இந்துஸ்தான் யுனிலீவர், அரவிந்த் பிராண்ட்ஸ், தஸ்லிமா கார்ப் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அனைத்திலும் விற்பனை விநியோகம் சார்ந்த வேலைகள்தான். டைட்டன் பிராண்டை புதுப்பித்து சோனாட்டா பிராண்டில் ஆக்ட் எனும் வாட்சை உருவாக்கி விற்பனை செய்து சாதனை செய்துள்ளார். ஜூப், ஆக்டேன் ஆகிய பிராண்டுகளை உருவாக்கி வியட்நாம், சிங்கப்பூர், அரபு அமீரகம் ஆகியவற்றில் பிராண்டை மகத்தான வெற்றி பெறச்செய்தவர் சுபர்ணா மித்ரா. எலக்ட்ரிகல் எஞ்சினியரிங்கில் பட்டம் பெற்று பின்னர் ஐஐஎம் கல்கத்தாவில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக