எங்களது அமைப்பு தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும். அவர்களோடு போட்டியிடாது! - ஜி. நாராயணன்



Milky Way, Universe, Person, Stars, Looking, Sky, Night
cc




மொழிபெயர்ப்பு நேர்காணல்

ஜி.நாராயணன், நியூ ஸ்பேஸ் இந்தியா லிட். நிறுவனத் தலைவர்.


விண்வெளித்துறையை தனியார் நிறுவனங்களுக்கு அரசு திறந்துவிட்டுள்ளது. இதில் ஸ்பேஸ் இந்தியாவுக்கும் தனியார் நிறுவனங்களுக்குமான பங்கு என்ன?

மிகப்பெரிய திட்டம் இதன் பின்னால் உள்ளது. இனி இஸ்ரோ நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்து செயல்படும். ஸ்பேஸ் இந்தியா அமைப்பு, வ ணிக ரீதியான ராக்கெட் ஏவுதல்கள் செயல்பாடுகளை செய்யவுள்ளது. இதன்மூலம் விண்வெளித்துறையில் இந்தியா புதிய சந்தையை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.

உங்களுடையது அரசு அமைப்பு, தனியார் அமைப்புகளை வரவேற்பதாக கூறுகிறீர்களே எப்படி?

இஸ்ரோ அமைப்பு, அனைத்து பொருட்களையும் தானே தயாரித்துக்கொள்ளும் திறன் கொண்டதல்ல. இன்று வரை 60 சதவீத செயற்கைக்கோள்களையும், 80 சதவீத ராக்கெட்டுகளையும் இஸ்ரோ தனியார் நிறுவனங்களிடம் தயாரித்து தரச்சொல்லி வாங்கி பயன்படுத்தி வருகிறது. எங்கள் அமைப்பின் நோக்கம், தனியார் நிறுவனங்களை இத்துறையில் அதிகளவு ஈடுபடுத்துவதுதான்.


ஐடி துறையில் இந்தியா பெற்ற வெற்றியை விண்வெளித்துறையில் அடைய இஸ்ரோ எண்ணுகிற தா?


விண்வெளி சார்ந்த துறையில் நாம் தனித்து இயங்க முடியாது. நிலப்பரப்பு சார்ந்த எல்லை வேறுபாடுகள் இங்கு கிடையாது. சந்தை உலகளவிலானது. அண்மையில் பார்தி குளோபல் என்ற நிறுவனம், ஒன் வெப் என்ற செயற்கைக்கோள்களை தயாரிக்கும் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. இந்த நிறுவனத்தின் மூலம் அதிவேக இன்டர்நெட் இணைப்பை நாம் பெறமுடியும். ராக்கெட்டுகளை தயாரிப்பது, அதனை ஏவுவது என்பது விண்வெளித்துறையில் 10 சதவீத மார்க்கெட்தான். மீதியுள்ள சந்தை முழுக்க விண்வெளித்துறை பற்றிய தகவல்களை சேகரிப்பதில்தால் உள்ளது. இஸ்ரோ அமைப்பு இல்லாவிட்டாலும் தனியார் அமைப்புகள் நம் நாட்டில் சிறப்பாக செயல்பட முடியும்.


நீங்கள் இஸ்ரோவிலிருந்து பணியாளர்களை எடுத்துக்கொள்வீர்களா?


இப்போது இங்கு பணிபுரியும் ஆட்களின் அளவு குறைவு. ஆனால் எதிர்காலத்தில் இஸ்ரோ அல்லது வேறு இடங்களிலிருந்து பணியாளர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. இது ஸ்பெஷலான துறை, என்பதால் எதனையும் திட்டமிட்டு கூறமுடியாது.

கொள்கை வகுக்காத வரை தனியார் நிறுவனங்கள் இத்துறையில் நுழைவது கடினம் என்று கூறப்படுகிறதே?


நாங்கள் கொள்கைகளை வகுத்து வருகிறோம். விரைவில் தனியார் நிறுவனங்கள் இத்துறையில் முதலீடுகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

ஈடி மேகசின்


கருத்துகள்