விவாதம் தேவையில்லை. செயல்பாடுதான் இப்போது முக்கியம்! - ஆர்.பி குப்தா
newsminute |
கொரோனா காலத்தில் மத்திய அரசு ஏராளமான சட்ட மசோதாக்களை கொண்டு வந்தது. அவற்றில் மக்களின் கடும் கண்டனங்களை சந்தித்து வருவது, சூழல் மதிப்பீட்டு வரைவு 2020. இரண்டு லட்சம் பேரின் எதிர்ப்புகளை இம்மசோதா கண்டுள்ளது. இதுபற்றி சூழல்துறை செயலர் ஆர்.பி குப்தாவிடம் பேசினோம்.
நீங்கள் கொண்டு வந்த சூழல் தாக்க மதீப்பிட்டு வரைவு கடும் கண்டனங்களை சந்தித்திருக்கிறது. இதனை எப்படி சட்டமாக்க போகிறீர்கள்?
எங்களுக்கு இதுவரை 18 லட்சம் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இவற்றை அனைத்தையும் படிக்க முடியாது. இவற்றில் 95 சதவீத மின்னஞ்சல்கள் திரும்ப திரும்ப அனுப்பப்பட்டவை. இதற்கென தனி கமிட்டி உள்ளது. அவர்கள் மக்களின் கருத்தை ஆராய்ந்து சட்டம் உருவாகும்போது அதில் சேர்ப்பார்கள்.
உங்களுடைய மசோதாவுக்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்?
இதில் மக்களை பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. வேண்டுமென்றே அரசியல் நோக்கத்துடன் இம்மசோதாவை சிலர் தூண்டிவிட்டு எதிர்க்க வைக்கிறார்கள். இயற்கை சூழலைப் பொறுத்தவரை இது சரியான திட்டம்தான். அரசியல் என்ற வகையில் பார்த்தால், இதனை யாரும் தடுக்கலாம்.
சூழல் அமைச்சகம் இதனை ஏன் முக்கியமான சட்டவரைவாக பார்க்கிறது?
காரணம். இந்த மசோதா தொழில் தொடங்குவதற்கான அனுமதியை அளிப்பதற்கான ஷரத்களைக் கொண்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கான அனுமதிக்காக ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளை எடுத்துக்கொள்வது சரியான முடிவல்ல. எனவே நாங்கள் இந்த மசோதாவில் வேகமாக தொழில் அனுமதியை வழங்குவதற்கான செயல்பாடுகளை உருவாக்கியுள்ளோம். இதில் தவறு செய்பவர்களை தண்டிப்பதற்கான அம்சங்களும் உள்ளன.
அரசின் மசோதா விதிமீறல்களை சட்டப்பூர்வம் ஆக்குவதாகவே உள்ளது?
ஒரு தொழில்நிறுவனம் முறையான அனுமதி இன்றி தொழில் தொடங்கிவிட்டார்கள். அதற்கு அவர்களை எப்படி தண்டிக்க முடியும்? அப்படி தண்டித்தால் நீங்கள் அவர்களின் நிறுவனம் அங்கு செயல்படுவது நிறுத்தப்பட்டு விடும். இது தவறான செயல்பாடு. இனிமேல் அவர்கள் தொழில் தொடங்கியபிறகு விண்ணப்பித்தால் கூட அனுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். முந்தைய காலத்தில் செய்த விதிமீறலுக்கு அபராதம் கட்டினால் போதும்.
அரசின் மசோதா பற்றி விவாதிக்க இடம் உண்டா?
இல்லை இனிமேல் தொடர்ந்து விவாதித்தால் அது இன்னொரு பிரச்னையில் வந்து முடியும். எனவே விவாதம் தேவையில்லை. செயல்பாடுதான் இப்போது முக்கியம்
இந்துஸ்தான் டைம்ஸ்
ஜெயஶ்ரீ நந்தி
கருத்துகள்
கருத்துரையிடுக