சிறுமியின் கற்பனையில் உருவாகும் அழகிய தீம்பார்க்கின் வில்லன் யார்? வொண்டர் பார்க்
வொண்டர் பார்க்
ஜூன் என்ற சிறுமி கற்பனையாக ஒரு தீம் பார்க்கை உருவாக்குகிறாள். அவளும் அவளது அம்மாவும் சேர்ந்து லீகோ வகை பொம்மைகளை சேர்ந்து உருவாக்குகிறார்கள். அவள் வைத்துள்ள பீநட் என்ற குரங்கு பொம்மையின் காதில் தான் செய்யும் அனைத்தையும் சொல்லுவது ஜூனுக்கு பிடிக்கும். ஜூனுக்கு தெரியாமல் அவள் தன் ஐடியாவைச் சொல்ல சொல்ல அவள் நினைத்தபடியே தீம்பார்க் உருவாகி இயங்கி வருகிறது. இது ஜூனுக்கு தெரியாது. இந்த நிலையில் ஜூனின் அம்மாவுக்கு உடல் நிலை சீர்கெட, தீம்பார்க் வேலையை விளையாட்டாக கூட செய்யாமல் தூக்கி எறிகிறாள். அதனை செயலிழக்கச்செய்யும் வில்லனை உருவாக்குகிறாள். இதனால் ஏற்படும் பிரச்னைகளை அவளே பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. அந்த பிரச்னைகளை எப்படி தீர்க்கிறாள் என்பதுதான் கதை.
ஃபேன்டசிதான். ஆனால் அதை வைத்துக்கொண்டு நாம் சமநிலையான சூழலில் மனநிலையை வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கும்போது செய்யும் அனைத்து விஷயங்களையும் மோசமான நிலையில் இருக்கும் போது செய்யும் ஒரு விஷயம் கலைத்துப்போட்டுவிடுவது பற்றி இந்த படத்தை விட விளக்காக யாருமே சொல்ல முடியாது. ஜூன், பீநட் குரங்கு, கரடி, பன்றி, முள்ளெலி என அனைத்து கதாபாத்திரங்களும் அசத்தியுள்ளன. பொதுவாக டின்டின் உள்ளிட்ட அனிமேஷன் படங்களில் கூட இரட்டையர் போன்ற கதாபாத்திரங்களை உருவாக்குவார்கள். தீம்பார்க்கில் இரண்டு அணில்கள் அப்படி சுற்றி வருகின்றன.
குடும்பம், நட்பு, மகிழ்ச்சி, மனநலன் என நிறைய விஷயங்களை அழகாக சொல்லியிருக்கிறார்கள். படத்தை பார்த்தால் உங்களுக்கு இதுபோல வொண்டர் பார்க்கிற்கு போக தோன்றும்.
கோமாளிமேடை டீம்
சினிமா விமர்சனம், ஆங்கிலம், தீம்பார்க், கற்பனை, அனிமேஷன்
கருத்துகள்
கருத்துரையிடுக