கொலையை சாதுர்யமாக பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகளின் சதி, பலியாகும் உயிர்கள்! லாக்கப்
லாக்கப்
இயக்கம் சார்லஸ் இசை அரோல் கொரோலி
காவல்நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் அவரது வீட்டில் கத்தியால் கழுத்து வெட்டப்பட்டு இறந்து கிடக்கிறார். அவரது கொலையில் துறை சார்ந்த இருவர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பதுதான் கதை.
இந்த வெப் மூவியை நிச்சயம் வைபவ்விற்காக பார்க்காதீர்கள். வருத்தப்படுவீர்கள். முரளியாக வரும் வெங்கட்பிரபு, தற்காலிக இன்ஸ்பெக்டராக வரும் ஈஸ்வரி ராவ் ஆகியோரின் நடிப்புக்காக பார்க்கலாம்.
வைபவ், வெங்கட்பிரபு இரண்டுமே பேருமே இன்ஸ்பெக்டரிடம் புரமோஷன் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதில் கிடைக்காது என இன்ஸ்பெக்டர் கூறிவிட்டு, தனக்கு ஏதாவது அவர்கள் செய்துகொடுத்தால்தான் நான் பரிந்துரைப்பேன் என்கிறார். இதற்கு வெங்கட்பிரபு ஒகே சொல்லி இன்ஸ்பெக்டரின் பெண் ஆசையை தீர்க்க முயல்கிறார். அதில் ஏற்படும் பிரச்னை, அவரையும் வைபவ்வையும் வலுவாக இன்ஸ்பெக்டர் கொலைவழக்கில் சிக்க வைக்கிறது. கூடவே இன்னொரு பிரச்னையாக இன்ஸ்பெக்டரை கொல்ல உள்ளூர் ரவுடி ஒருவர் சமயம் பார்த்து காத்திருக்கிஈறார். அவர் சப் இன்ஸ்பெக்டரான வெங்கட்பிரபுவுக்கு நெருக்கமானவர்.
இன்ஸ்பெக்டர் கொலையா ன இடத்தில் வெங்கட்பிரவு இருக்கிறார். கொலைக்கு பயன்பட்ட உண்மையான கத்தி கிடைக்கவில்லை. இதனால் ஈஸ்வரி ராவுக்கு வெங்கட் மீது சந்தேகம் வலுக்கிறது. ஏதோ நாடகம் செய்தது போல இருக்கிறது என அவரிடமே சொல்லுகிறார். இன்ஸ்பெக்டருக்கு வந்த போன் அழைப்புகள் அனைத்தும் பரிசீலனை செய்யும்போது அதிலும் வெங்கட்டின் போன் நம்பர் சிக்குவது வழக்கை மேலும் சிக்கலாக்குகிறது. இந்த நேரத்தில் வைபவ் கான்ஸ்டபிளாக இருக்கிறார். அவருக்கு பதவியுயர்வு கிடைத்தால்தான் தன் பெண்ணைக் கட்டித்தருவேன் காதலியின் அப்பா சொல்லிவிடுகிறார். இதனால் புரமோஷன் கிடைக்கும் நேரத்தில் சப் இன்ஸ்பெக்டர் வெங்கட்பிரபு வழக்கில் மாட்டிக்கொள்ள, வைபவிற்கும் பதற்றமாகிறது. இவரைப் பார்த்து வெங்கட்டும் ஏதோ சிக்னல்களைக் கொடுக்கிறார். உண்மையில் கொலைவழக்கில் இருவரில் யாருக்கு தொடர்பிருக்கிறது? வெங்கட்பிரபுவைப் பார்த்து வைபவ் ஏன் பயப்படுகிறார்? தன் அம்மா காணவில்லை என்று புகார் கொடுக்க ஒருவர், தன் மகனுடன் காவல் நிலையம் வருகிறார். அவருக்கும் இந்த வழக்கிற்கும் உள்ள தொடர்பு என பல்வேறு திக்குகளில் ஏராளமான கேள்விகள் எப்படி தீர்கின்றன என்பதுதான் படம் சொல்லும் கதை.
லாக்கப் என்ற பெயர், யார் குற்றவாளியாக உள்ளே போவார்கள் என்ற கேள்வியை முன்வைத்து வைக்கப்பட்டிருக்கலாம். படத்தை சுவாரசியப்படுத்துவது பதவிக்காக துறையில் நடக்கும் மூளை விளையாட்டுகள்தான். காவல்துறையைச் சேர்ந்தவர்கள் எப்படி வழக்குகளில் ஆடுபுலி ஆட்டம் ஆடுகிறார்கள் என நன்றாக காட்டியுள்ளார் இயக்குநர். சூழலுக்கு ஏற்ற குணம் என பாத்திரங்களை அமைத்திருக்கிறார்கள். அதுவே இந்த கதைக்கு நம்பகத்தன்மையைத் தருகிறது.
படத்தின் இறுதியில் சிறுவன் பேசும் பிலாசபி ஒட்டாத ஒன்று. வாணிபோஜன் பாத்திரம் படத்தின் போஸ்டருக்கு கிளாமர் ஏற்ற மட்டுமே உதவியிருக்கிறது.
லாக்கப் - வெளியே குற்றவாளி
கருத்துகள்
கருத்துரையிடுக