மனதுக்கு நெருக்கமானவனை மணப்பதா, அப்பாவின் கௌரவத்தை காப்பதா? - நுவ்வு நாக்கு நச்சாவு -2001
நுவ்வு
நாக்கு நச்சாவு 2001
இயக்கம் விஜயபாஸ்கர்
கதை வசனம் திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ்
இசை கோட்டி
புதிய காதல் கதை ஒன்றும் கிடையாது. காதல் மன்னன் கதையேதான். வெங்கடேஸ்வர் ஊரில் சும்மா சுற்றித் திரிகிறார். இதனால் அவரை நகரில் உள்ள தனது ஆத்ம நண்பன் வீட்டுக்கு அனுப்புகிறார். ஏதாவது புத்தி சொல்லி நல்ல வாழ்க்கையை அவனுக்கு ஏற்படுத்திக் கொடு என்பதுதான் அவரது வேண்டுதல். வெங்கடேஷ் இங்கு வரும்போது, நண்பரின் மகள் நந்தினிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
அங்கு வந்து கெஸ்ட் ஹவுசில் தங்கி வேலை தேடும் பணியில் ஈடுகிறார் வெங்கி. அவருக்கும் திருமணம் நிச்சயமான நந்தினிக்கும் உருவாகும் காதல்தான் படத்தின் முக்கியமான விஷயம்.
பக்கா
படத்தில் முழுக்க வரும் அனைத்து காமெடியும் அசத்தலாக எழுதப்பட்டுள்ளது. விக்டர் வெங்கடேஷ் அசத்தலாக நடித்துள்ளார். ஆர்த்தி அகர்வால் நந்தினியாக பெற்றோரின் பெருமையா, தனது விருப்பமா அலைபாயும் முடிவு என நன்றாக நடித்துள்ளார்.
டொக்கு
தனது நண்பரின் உதவிகளை மெய்மறந்து பேசுபவர், தனது மகளின் திருமணம் என்று வரும்போது அவனுக்கு என்ன தகுதி என்று பேசுவது இடருகிறது. தனது வாழ்க்கையே நண்பன் கொடுத்ததுதான் எனும் பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம் தனது நேர்மையில் சறுக்கி அடிவாங்குகிறது.
மனம் கொடுக்கும் காதல் சிக்னல்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக